ப்ளாக்கர் நண்பன் – ஒரு அறிமுகம்

நம்முடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் உலகம் முழுவதும் பகிர்வதற்கு மிக சிறந்த வழி, ப்ளாக் (Blog) எனப்படும் வலைப்பதிவு.. கிட்டத்தட்ட இணையதளங்கள் போன்று தான், ஆனால் சில வேறுபாடுகள் உண்டு. இணையதளம் தொடங்க வேண்டுமென்றால் அதற்கு நாம் கொஞ்சம் செலவு செய்ய வேண்டும். அத்துடன் நமக்கு தொழில்நுட்ப அறிவு (html, vb போன்ற programming codes) இருத்தல் வேண்டும். ஆனால் வலைப்பதிவு தொடங்குவதற்கு அவை எதுவும் தேவை இல்லை (html code மட்டும் தெரிந்திருந்தால் நமது வலைப்பதிவை இன்னும் மெருகேற்றலாம்). அதே சமயம் வலைப்பதிவை இலவசமாகவே உருவாக்கலாம்.

வலைப்பதிவை உருவாக்குவது எப்படி?
வலைப்பதிவை உருவாக்குவது ஏதோ கம்பு சுழற்றும் வேலை என்று எண்ணிவிட வேண்டாம். வெறும் ஐந்து நிமிடங்கள் போதும். வலைப்பதிவை பொறுத்தவரை இரண்டு தளங்கள் சிறப்பு பெற்றவை. ஒன்று ப்ளாக்கர்(Blogger) , இன்னொன்று வேர்ட்பிரஸ்(WordPress). இரண்டும் தனித்தனி சிறப்புகளைக் கொண்டது. ஆனால் நாம் இந்த  ப்ளாக்கர் நண்பனில் பார்க்கப் போவது ப்ளாக்கர்(Blogger) பற்றியது.

 
ப்ளாக்கர்(Blogger), கூகுள்(Google) வழங்கும் சேவையாகும். உங்களுக்கு ஏற்கனவே ஜிமெயில்(Gmail) அல்லது கூகுளில் கணக்கு(Account) இருந்தால் அதன் மூலமாகவே Login செய்யலாம். இல்லையென்றால் Blogger.com சென்று எளிதாக கணக்கை துவக்கலாம்

வலைப்பதிவு ஒன்று உருவாக்கிவிட்டீர்களா? 

சரி, அதை எப்படி அழகுப்படுத்துவது, எப்படி விளம்பரப்படுத்துவது என்பது பற்றி இத்தளத்தில் இனி பார்ப்போம், இறைவன் நாடினால்..

இதையும் படிங்க:  ப்ளாக்கரின் அதிரடி மாற்றங்கள்

5 thoughts on “ப்ளாக்கர் நண்பன் – ஒரு அறிமுகம்”

  1. அன்பு சகோதரரின் சேவைக்கு வாழ்த்துக்கள்
    என்னுடைய பிளாகரின் தலைப்பு படத்தை புல் ஸ்க்ரீன்
    வரவைபத்ர்கு என்ன செய்வது
    உங்களை பதிலை எதிர்பார்கிறேன்
    BY SADIQ
    EMAIL- SADIQMTF@HOTMAIL.COM

  2. //S.JAHFAR SADIQ said…

    அன்பு சகோதரரின் சேவைக்கு வாழ்த்துக்கள்
    என்னுடைய பிளாகரின் தலைப்பு படத்தை புல் ஸ்க்ரீன்
    வரவைபத்ர்கு என்ன செய்வது
    உங்களை பதிலை எதிர்பார்கிறேன்
    BY SADIQ
    EMAIL- SADIQMTF@HOTMAIL.COM

    //

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, சகோ! தங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன்.

  3. இந்த 2018இல் கூகுள் பிளஸ்க்கு மூடு விழா நடத்தும் நாளில் உங்கள் ஆரம்பப் பதிவைக் காண்கிறேன். கூகுள் போல இல்லாமல் தனிச்சிறப்புடன் இயங்க வாழ்த்துக்கள்.