ப்ளாக்கர் நண்பன் இனி டாட் காமில்..

அன்பு நண்பர்களே! அருமை சகோதரிகளே! ப்ளாக்கர் நண்பன் தளம் தற்போது டாட் காமிற்கு மாற்றப்பட்டுள்ளது. இனி http://bloggernanban.blogspot.com என்ற முகவரிக்கு பதிலாக www.bloggernanban.com என்ற புதிய முகவரியில் இயங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய டொமைனுக்கு மாறினால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று, நீங்கள் பதிவிட்டு சில மணி நேரம் கழித்தே நமது ப்ளாக்கை  பின்தொடர்பவர்களின் டாஷ்போர்டில் தெரியும்.அதனை சரி செய்வதற்கு உங்கள் ப்ளாக்கை பின்தொடர்பவர்கள் ஒருமுறை Follower Gadget-ல் Unfollow செய்துவிட்டு மீண்டும் பின்தொடர வேண்டும்.

ப்ளாக்கர் நண்பன் தளத்தை பின்தொடர்பவர்களும் சிரமம் பார்க்காமல் இதனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அதை எப்படி செய்வது? என்று பார்ப்போம்.

முதலில் Follower Gadget-ல் கீழே Sign-in என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு நீங்கள் எந்த கணக்கை கொண்டு பின்தொடர்ந்தீர்களோ? அதனை க்ளிக் செய்யுங்கள். (அதிகமானோர் கூகிள் மூலம் தான் பின்தொடர்ந்திருப்பீர்கள். ஆம் என்றால் கூகிள் என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு  கூகிள் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கேட்கும். அதனை கொடுத்து Sign in என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு Follower Gadget-ல் பின்வருவது போல இருக்கும். அதில் Options என்பதை க்ளிக் செய்து, Site Settings என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு Stop following this site என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு மீண்டும் stop following என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அதனை க்ளிக் செய்தவுடன் அந்த ப்ளாக்கை பின்தொடர்வது நிறுத்தப்படும்.

இனி மீண்டும் பின்தொடர, முதல் படத்தில் உள்ளது போல Follower Gadget கீழே உள்ள Sign in என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு  Follow this blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு Done என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான்! நீங்கள் ப்ளாக்கை பின்தொடர ஆரம்பித்துவிட்டீர்கள். இனி பதிவுகள் உடனடியாக உங்கள் டாஷ்போர்டில் வரும்.

கவனிக்க: உங்கள் ப்ளாக்கை டாட் காமிற்கு மாற்றுவதனால் உங்கள் தளத்தின் தரம் உயரப்போவதில்லை. உங்களுடைய எழுத்துக்களின் தரத்திற்கே மதிப்பு அதிகம். நான் மாறியதற்கு காரணம் ஒரு ஆசை, அவ்வளவு தான்!!!

உங்களுக்கு டொமைன் மாறுவதற்கு விருப்பம் இருந்தால் பிளாக்கரில் டொமைன் வாங்குவது எப்படி? என்ற பதிவை பார்க்கவும்.

இதையும் படிங்க:  உங்கள் கருத்தை தனித்துக் காட்ட..

35 thoughts on “ப்ளாக்கர் நண்பன் இனி டாட் காமில்..”

  1. டாட் காமிற்கு வாழ்த்துக்கள்

    ஒருசந்தேகம், என் பதிவுகளநிறைய பேருக்கு டாஷ் போர்டில் வருவதில்்ையாம்
    அதற்கு என்ன் செய்வது.

  2. //கவனிக்க: உங்கள் ப்ளாக்கை டாட் காமிற்கு மாற்றுவதனால் உங்கள் தளத்தின் தரம் உயரப்போவதில்லை. உங்களுடைய எழுத்துக்களின் தரத்திற்கே மதிப்பு அதிகம். நான் மாறியதற்கு காரணம் ஒரு ஆசை, அவ்வளவு தான்!!!
    /// ஹிஹி

  3. வாழ்த்துக்கள் அன்பரே ! விலகி சேர்ந்தாலும் பதிவுகள் இரண்டு மணி நேரத்துக்கு பின்பே டாஷ்போர்ட் இல் தெரிகிறது.இதை நீக்க என்ன செய்வது என்று தெரிய வில்லை

  4. ஸலாம் சகோ.அப்துல் பாஸித்………..
    "வாடகை கேட்காத பி(ளாக)றர் வீட்டிலிருந்து"………….
    "வருட வாடகை கேட்கும் சொந்த டொமைன் வீட்டுக்கு" குடி புகுந்து விட்டீர்கள்………..
    என்னமோ செய்றீங்க…. ம்ம்ம்…. வாழ்த்துகள் சகோ.

  5. அப்துல் பஷித் நீங்க அனைத்து தொழிநுட்ப பதிவுகளையும் எழுதுவதால் பொதுவான பெயரில் வைத்து இருக்கலாம் bloggernanban என்பதற்கு பதிலாக.. ஏதாகினும் பெயரில் எதுவுமில்லை பதிவின் தரமே முக்கியம்.

    வாழ்த்துகள்

  6. //கணேஷ் said… 2

    புதிய மாற்றத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே…
    //

    நன்றி நண்பரே!

  7. //பிரேம் குமார் .சி said… 4

    வாழ்த்துக்கள் அன்பரே ! விலகி சேர்ந்தாலும் பதிவுகள் இரண்டு மணி நேரத்துக்கு பின்பே டாஷ்போர்ட் இல் தெரிகிறது.இதை நீக்க என்ன செய்வது என்று தெரிய வில்லை//

    தெரியவில்லை நண்பரே! ப்ளாக்கரில் feed redirect பகுதியில் Feedburner முகவரியை கொடுத்துள்ளீர்களா?

  8. //Jaleela Kamal said… 6

    //கவனிக்க: உங்கள் ப்ளாக்கை டாட் காமிற்கு மாற்றுவதனால் உங்கள் தளத்தின் தரம் உயரப்போவதில்லை. உங்களுடைய எழுத்துக்களின் தரத்திற்கே மதிப்பு அதிகம். நான் மாறியதற்கு காரணம் ஒரு ஆசை, அவ்வளவு தான்!!!
    /// ஹிஹி//

    🙂 🙂 🙂

    //டாட் காமிற்கு வாழ்த்துக்கள்//

    நன்றி சகோ.!

    //ஒருசந்தேகம், என் பதிவுகளநிறைய பேருக்கு டாஷ் போர்டில் வருவதில்்ையாம்
    அதற்கு என்ன் செய்வது.//

    தெரியவில்லை சகோ. உங்கள் ப்ளாக்கை பார்த்து சொல்கிறேன்.

    //இதே போல் அன் பாலோ செய்ய சொல்லிட்டு பாலோ செய்ய் சொல்லவா?//

    ம்ம்ம்ம்… சொல்லலாம்.

  9. //கோகுல் said… 9

    வாழ்த்துகள்.
    தொடர்ந்து பயனுள்ள பல விசயங்களை பகிருங்கள்!//

    நன்றி நண்பா!

  10. //~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said… 13

    ஸலாம் சகோ.அப்துல் பாஸித்………..
    "வாடகை கேட்காத பி(ளாக)றர் வீட்டிலிருந்து"………….
    "வருட வாடகை கேட்கும் சொந்த டொமைன் வீட்டுக்கு" குடி புகுந்து விட்டீர்கள்………..
    என்னமோ செய்றீங்க…. ம்ம்ம்…. வாழ்த்துகள் சகோ.
    //

    வ அலைக்கும் ஸலாம்.

    நன்றி சகோ.!

  11. //srikumarandigitalstudio desaigandhi said… 14

    வாழ்த்துகள்.
    தொடர்ந்து பயனுள்ள பல விசயங்களை பகிருங்கள்!//

    நன்றி நண்பரே!

  12. //கிரி said… 15

    அப்துல் பஷித் நீங்க அனைத்து தொழிநுட்ப பதிவுகளையும் எழுதுவதால் பொதுவான பெயரில் வைத்து இருக்கலாம் bloggernanban என்பதற்கு பதிலாக.. ஏதாகினும் பெயரில் எதுவுமில்லை பதிவின் தரமே முக்கியம்.

    வாழ்த்துகள்//

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே! நானும் வேறு பெயர் வைக்கலாமா? என்று தான் யோசித்தேன். ப்ளாக்கர் நண்பன் என்ற பெயர் நிலைத்துவிட்டதால் அதனையே வைத்து விட்டேன்.

    "ப்ளாக்கர் நண்பன்" என்பதற்கு "பதிவர் நண்பன்: என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா?

    🙂 🙂 🙂

  13. //மாணவன் said… 21

    புதிய டொமைன் மாற்றத்திற்கு வாழ்த்துகள் நண்பா…
    தொடர்ந்து கலக்குங்க!
    //

    நன்றி நண்பா!

  14. //மாய உலகம் said… 22

    புதிய டொமைன் மாற்றத்திற்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள் நண்பா!…
    //

    //unfollw செய்து மீண்டும் ஃபாலோ செய்தாச்சு நண்பா….//

    நன்றி நண்பா!

  15. வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பனி இன்னும் மென்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்……