ப்ளாக்கர் டொமைனை புதுப்பிப்பது எப்படி?

பிளாக்கரில் டொமைன் வாங்குவது எப்படி? என்ற பதிவில் கூகுள் மூலம் Custom Domain வாங்குவது பற்றி பார்த்தோம் அல்லவா? அது ஒரு வருடத்திற்கு மட்டும் தான். அதற்குள் புதுப்பிக்கவில்லை என்றால் உங்கள் டொமைன் காலாவதி ஆகிவிடும். தற்போது அதனை புதுப்பிப்பது பற்றி பார்ப்போம்.

உங்கள் டொமைன் முடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இது பற்றி கூகுள் மின்னஞ்சல் அனுப்பிவிடும். அதிலேயே Domain Renew செய்வதற்கான லிங்க் இருக்கும்.

அந்த முகவரி https://www.google.com/a/cpanel/domain/renew-domain/techminar.com என்பது போல இருக்கும். அதை கிளிக் செய்தால் Google Wallet மூலம் பணம் கட்டும் பக்கத்திற்கு செல்லும்.

ஒரு வருடத்திற்கான கட்டணம் 10 அமெரிக்க டாலர் என்று குறிப்பிட்டிருக்கும். அதில் ஏற்கனவே நீங்கள் பதிவு செய்திருந்த Debit Card அல்லது Credit Card இருக்கும். அதன் மூலம் பணம் கட்டலாம். அல்லது வேறு கார்ட் மூலம் பணம் கட்டலாம். விவரங்களை சரி பார்த்த பிறகு Place Order Now என்பதை கிளிக் செய்யுங்கள்.

சில நொடிகளுக்கு பிறகு உங்கள் டொமைன் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சொல்லும். அவ்வளவு தான்.

கூகுள் மின்னஞ்சல் அனுப்புவதற்கு முன்பாகவே Renew செய்ய முடியாது என்று நினைக்கிறேன். மேலும் நீங்கள் ஒரு வருடத்திற்கு மட்டும் தான் நீட்டிக்க முடியும்.

ஒரு வேளை உங்கள் டொமைன் காலாவதியாகிவிட்டால், Blogger Dashboard => Settings => Basic பகுதிக்கு சென்று, அங்கே Publishing என்ற இடத்தில் உள்ள Custom Domain-ஐ நீக்கிவிடுங்கள். ஆனால் இதனால் உங்கள் தளத்தின் தேடுபொறிகளின் மதிப்பையும், சில வாசகர்களையும் இழக்கநேரிடும்.

இதையும் படிங்க:  ஆன்லைன் வாசகர்களை கண்காணிக்க...

28 thoughts on “ப்ளாக்கர் டொமைனை புதுப்பிப்பது எப்படி?”

  1. திடீர் என்று அட்சென்ஸ் வைத்து உள்ளீர்கள்….நானும் கூடிய சிக்கிரம் டொமைன் வாங்கவேண்டும்……

  2. என்ன நண்பா நீயும் விளம்பரத்துக்கு மறிடியேஉன் கிட்ட எனக்கு புடிச்சதே உன் தளத்தில் விளம்பரம் இல்லத்தை பார்த்து தான் நீயும் ஓரு சாதாரணமான ஆள்ல மறிடியே நண்பா

  3. // ஏற்கனவே நீங்கள் பதிவு செய்திருந்த Debit Card அல்லது Credit Cardஇருக்கும். // உங்க கார்டு கொடுத்த கொஞ்சம் வசதியை இருக்கும்

    // இதனால் உங்கள் தளத்தின் தேடுபொறிகளின் மதிப்பையும், சில வாசகர்களையும் இழக்கநேரிடும். // அதனால் தான் மாற்ற யோசனையை உள்ளது நண்பா

  4. நண்பரே,
    தற்போது Bigrock மூலம் வாங்கிய டொமைனை அடுத்த முறை கூகிள் மூலம் வாங்கலாம் என்று இருக்கிறேன்… எப்படி செய்வது என்று விளக்குங்கள்!

  5. அந்த மெயில் ஐடி மட்டுமல்லாமல், டொமைன் பதிவு செய்யும் போது வேறு மெயில் ஐடி கொடுத்திருந்தால் அதற்கும், உங்கள் டொமைன் பெயரில் மெயில் ஐடி (yourname@yourdomain.com) உருவாக்கியிருந்தால் அதற்கும் தகவலை அனுப்பும்.

  6. என்று என்னுடைய பதிவில் ஓரு உண்மையை சொல்லி இருக்கிறேன் வந்து

    படிக்கவும் என்னுடைய 50வது பதிவுவில் உன்னுடைய தளத்தில் நான் எடுத்த

    முதல் கோப்பி பேஸ்ட் உண்மை மேலும் சில சுவாரசியமான தகவல்