ப்ளாக்கரில் New Post, Home, Older Post -ஐ மாற்ற

நமது வலைப்பூவில் ஒவ்வொரு பதிவுகளுக்கும் கீழே உள்ள Older Posts, Home, Newer Posts என்று இருக்கும். அதனை  Icon-களாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

1. Blogger Dashboard => design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.

2. Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.

3. Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும்.

4. Newer Post என்பதை மாற்ற:

Cntrl+F -ஐ  அழுத்தி பின்வரும் Code-ஐ தேடவும்.

<data:newerPageTitle/>

பின் மேலுள்ள Code-ஐ நீக்கிவிட்டு, பின்வரும் Code-Paste செய்யவும்.

<img src='http://1.bp.blogspot.com/-hLxdSApl1YA/TeHmc6wB5JI/AAAAAAAAAqE/3rRPD0h65Tg/s1600/Newer_post_icon.png'/>



5. Older Post என்பதை மாற்ற:

 பின்வரும் Code-ஐ தேடவும்:

<data:olderPageTitle/>

பின் மேலுள்ள Code-ஐ நீக்கிவிட்டு, பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.

<img src='http://2.bp.blogspot.com/-Js5C9X3cvuU/TeHmh1MxPgI/AAAAAAAAAqI/FH1JrFP4sqc/s1600/older_post_icon.png'/>

6. Home என்பதை மாற்ற:

பின்வரும் Code-ஐ தேடவும்:

<data:homeMsg/>

பின் மேலுள்ள Code-ஐ நீக்கிவிட்டு, பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.

<img src='http://4.bp.blogspot.com/-ujJajgZaO0w/TeHmodAKg5I/AAAAAAAAAqM/IBVglzId_vM/s1600/home_icon.png'/>

7. Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

அவ்வளவு தான்.. இப்பொழுது உங்கள் பதிவுகளின் கீழே பாருங்கள். பின்வருமாறு காட்சி அளிக்கும்:

கவனிக்க:

நீங்கள் டெம்ப்ளேட்டை மாற்றியிருந்தால், code-ம் மாறுபடலாம்.

நன்றி: http://www.anshuldudeja.com/

இதையும் படிங்க:  ப்ளாக்கரில் புதிய பட வசதி - LightBox

17 thoughts on “ப்ளாக்கரில் New Post, Home, Older Post -ஐ மாற்ற”

  1. //அஸ்மா said…

    என் ப்ளாக்கிலும் செய்துவிட்டேன். அழகா இருக்கு, நன்றி சகோ.
    //

    நன்றி சகோதரி!

  2. //Rafas said…

    http://www.fatihsyuhud.com/why-sites-deindexed-by-google-and-how-to-fix/

    இந்தக் கட்டுரையை தமிழில் தரமுடியுமா?
    //

    மன்னிக்கவும் நண்பா! அதை பற்றி பதிவெழுத வேண்டுமெனில், அதற்கு முன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள சில விசயங்களைப் பற்றி தனியாக பதிவெழுத வேண்டும். அது மட்டுமல்லாமல் அதில் உள்ள சில விஷயங்கள் தமிழ் தளத்திற்கு பொருந்தாது.

    மன்னிக்கவும்!

  3. http://get.2leep.com/

    என்ற தளம் புதிதாக இந்த கேட்ஜெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை எமது தளத்தில் இனைப்பதால் ஏதேனும் ஸ்பாம் பரவுமா?
    இந்த கேட்ஜேட் பற்றி ஆராய்ந்துவிட்டு அதுபற்றி ஒரு பதிவிட முடியுமா?

  4. //Rafas said…

    http://get.2leep.com/

    என்ற தளம் புதிதாக இந்த கேட்ஜெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை எமது தளத்தில் இனைப்பதால் ஏதேனும் ஸ்பாம் பரவுமா?
    இந்த கேட்ஜேட் பற்றி ஆராய்ந்துவிட்டு அதுபற்றி ஒரு பதிவிட முடியுமா?
    //

    நண்பா! தங்கள் தகவலுக்கு நன்றி. ஆனால் அது போன்ற widget-ஐ நமது ப்ளாக்கில் நிறுவினால், ஆபாச தளங்களுக்கும், spam தளங்களுக்கும் link கொடுக்கும். அதனால் அதை தவிர்ப்பது நன்று.

  5. @ d

    நண்பா! பயனுள்ள தகவலுக்கு நன்றி! விரைவில் அதை பற்றி பதிவிட முயற்சிக்கிறேன்.