ப்ளாக்கரில் HTTPS பாதுகாப்பு வசதி அறிமுகம்

ஒவ்வொரு நாளும் இணையம் வளர்ச்சி அடைந்துக் கொண்டே வருகிறது. அதே நேரம் இணைய தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இணைய தாக்குதலிலிருந்து பாதுகாப்பு பெற HTTPS வசதியை ப்ளாக்கர் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது.


HTTPS என்றால் என்ன?

பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை (HTTPS) என்பது ஒரு கணினி பிணைய இயக்க இணையத்தில் பாதுகாப்பான முறையில் எந்த ஒரு தகவலையும் (Software deployment) பயன்படுத்தும் ஒரு தகவல் தொடர்பு நெறிமுறை ஆகும். இதுவரை இணையத்தில் ஒரு முகவரியைக் கொடுக்கும் போது ஹெடிடிபி(http) என்றே கொடுக்கப்பட்டு வந்தது. அறிவியல் வளர்ச்சியின் போக்கால் நமது இணைய தகவல் திருடப்பட்டு தவறான வழிகாட்டுதலுக்கு உள்ளாக்கப்படக்கூடாது என்ற யோசனையில் httpயை விடுத்து போக்குவரத்து அடுக்கு பாதுகாப்புக்காக (SSL/TLS) https (hyper text transfer protocol secure) அதாவது பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை பயன்படுத்தப்படுகிறது.- Wikipedia

சுருக்கமாக சொன்னால் ஒரு இணையதளத்திற்கும், அதன் பார்வையாளர்களுக்கும் இடையில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை பாதுகாக்கும் முறை ஆகும்.

விரிவாக காண இணைய பாதுகாப்பு தொடரை படிக்கவும்.

தற்போது இந்த வசதியை ப்ளாக்கர் தளம் இலவசமாக வழங்குகிறது.

ப்ளாக்கரில் Settings => Basic பகுதிக்கு சென்று, அங்கு “HTTPS availability” என்ற பகுதியில் Yes என்பதை தேர்வு செய்து சேமிக்கவும். அவ்வளவு தான்!

இதனை செய்த பிறகு உங்கள் ப்ளாக் முகவரிக்கு முன் https:// என்று வரும்.உதாரணத்திற்கு,

http://nanbanpakkam.blogspot.com/ என்ற முகவரி இந்த வசதியை வைத்த பிறகு https://nanbanpakkam.blogspot.com/ என்று வரும்.

கவனிக்க:

 1. இந்த வசதியை வைத்த உடனேயே பழைய முகவரிக்கு செல்லும் போது தானாக புதிய தளத்திற்கு செல்லாது. சிறிது காலம் ஆகும்.
 2. இந்த வசதியை வைத்தால் சில டெம்ப்ளேட் வசதிகள் அல்லது விட்ஜட்கள் வேலை செய்யாது.
 3. டாட் காம் போன்ற கஸ்டம் டொமைன்களுக்கு இந்த வசதி பொருந்தாது.

உண்மையில் இந்த பாதுகாப்பு வசதிஅனைத்து தளங்களுக்கும் அவசியமானதாகும்.

மேலும் இந்த வசதியைப் பற்றி உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவும்!.

இதையும் படிங்க:  இலவசமாக பதிவேற்ற Google Sites

8 thoughts on “ப்ளாக்கரில் HTTPS பாதுகாப்பு வசதி அறிமுகம்”

 1. வணக்கம் நண்பரே! தங்களது "எப்படி "என்கிற மின்னுலை படித்துதான் எனக்கும் வலைத்தளம் ஆரம்பித்து எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது! இப்பொழுது 3மாதமாக எழுதிவருகிறேன்! அதுவும் கைபேசியில்! அதனால் சிறு சிறு தடங்கள் ஏற்படுகிறது! எப்பாடு பட்டாவது சரி செய்து விடுவேன்! தங்களுக்குத்தான் நன்றியும் வாழ்த்தும் சொல்வேண்டும்! இதற்குமுன் இப்படி வலைதளம் இருப்பது கூட தெரியாது! மிக்க நன்றி!

 2. வணக்கம் அன்புச் சகோதரனே !
  நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் உங்களைக் கண்டத்தில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் மிக்க நன்றி சகோதரா இனி நீங்கள் இங்கு இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை ?…வாழ்த்துக்கள் சகோதரா என்றும் போல் ஆக்கங்கள் ஒளிரட்டும் .

 3. வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் தங்கள் பதிவைப் படிப்பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா! எப்படி இருக்கிறீர்கள்?

  https வசதி பற்றி மிக மேலோட்டமாக அறிவேன். நம் வலைப்பூக்களும் இனி அந்தப் பாதுகாப்பைப் பெறும் என்பதில் மகிழ்ச்சியே! ஆனால், இதனால் நம் வலைப்பூ முகவரி மாறுதலுக்குள்ளாகி பீட்பர்னர் போன்ற மின்னஞ்சல் வழிச் சேவைகள் பாதிக்கப்பட மாட்டாவா? இந்த ஓர் ஐயம்தான் எனக்கு. தாங்கள் தீர்த்து வைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்!

  நன்றி! வணக்கம்!

 4. வணக்கம் சகோ நலமா , இறைவனின் ஆசி என்றென்றும் உங்களோடு இருப்பதாக ,என்ன சகோ வலைப்பக்கம் தாங்கள் வருவதே இல்லை , உங்களுக்கு கடுமையான வேலைப்பளு இருந்தாலும் அடிக்கடி பதிவிடுங்கள் சகோ