ப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி?

கடந்த பதிவில் சொன்னது போல், நம்முடைய வலைப்பதிவை எத்தனை பேர் பார்க்கிறார்கள்? எங்கிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள்? எந்த பதிவை அதிகம் படித்திருக்கிறார்கள்? போன்றவற்றை தெரிந்துக் கொள்ள பயன்படுவது Stats Counter. அந்த வசதியை பல தளங்கள் தந்தாலும் அவற்றில் முக்கியமானது கூகிளின் Analytics.

Goole Analytics-ஐ நம் தளத்தில் நிறுவுவது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
1. முதலில் Google.com/analytics சென்று உங்கள் கூகிள் கணக்கு மூலம் உள்நுழையவும்.
2. Sign Up என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.

3. உங்கள் தளத்தின் முகவரி, கணக்கு பெயர், நாடு ஆகிய தகவல்களை கொடுத்து Continue பட்டனை அழுத்தவும்.

4. உங்கள் முதல் மற்றும் கடைசி பெயர், நாடு ஆகிய தகவல்களை கொடுத்து Continue பட்டனை அழுத்தவும்.
5. Terms of service பக்கத்தின் கீழே உள்ள Check Box-ஐ க்ளிக் செய்து, Create New Account பட்டனை க்ளிக் செய்யவும்.

6. உங்கள் தளத்திற்கான பிரத்யேகமான Code-ஐ அது கொடுக்கும். அதனை Copy செய்து கொள்ளுங்கள். பிறகு Save and Finish என்ற பட்டனை அழுத்தி Save செய்யவும்.

7. பிறகு Blogger தளத்தில் Blogger Dashboard=>Design=>Edit Html செல்லவும்.
Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.
8. பிறகு Cntrl+F அழுத்தி

</head>

என்பதை தேடவும். தேடிய பின் அதற்கு மேலே ஏற்கனவே Copy செய்து வைத்திருந்த Code-ஐ Paste செய்யவும்.

பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.
9. பிறகு மீண்டும் google.com/analytics தளத்திற்கு செல்லவும்.
அங்கு உங்கள் தளத்தின் தகவல்களின் வலதுபுறம் உள்ள Edit என்ற பட்டனை அழுத்தவும்.

10. பிறகு Check Status என்பதை க்ளிக் செய்யவும்.

11. பிறகு Save and Finish என்ற பட்டனை அழுத்தவும்.

அவ்வளவு தான்… இனி உங்கள் ப்ளாக்கின் நிலவரங்களை நீங்கள் google analytics மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க:  ப்ளாக்கரில் New Post, Home, Older Post -ஐ மாற்ற

14 thoughts on “ப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி?”

 1. @அதிரைநிருபர் குழு
  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!
  தொடர்ந்து வருகை தரவும்..

 2. Hi Basith – I was using google analytics for a while and removed it eventually. Our blogger stats gives pretty much the same information if you are using blogger for blogging.

  In future, if I move to my own hosting solutions, then I would install it again. 🙂

 3. //Premkumar Masilamani said… 11

  Hi Basith – I was using google analytics for a while and removed it eventually. Our blogger stats gives pretty much the same information if you are using blogger for blogging.

  In future, if I move to my own hosting solutions, then I would install it again. :)//

  Hi Prem! even blogger stats gives the same info., it only shows top ten stats. And Google analytics shows some more useful datas like bouncing rates, Times spent on sites.

  Thank You!

 4. @ Abdul Basith

  சார்,

  நீங்க இந்த பதிவு போட்டதுக்கப்புறம் கூகுள் அனலடிக்ஸ்ல நிறைய மாறுதல் செஞ்சிருப்பாங்க போலிருக்கு. ரொம்ப தடுமாறி எல்லாத்தையும் பண்ணிட்டேன். ஆனா, கீழே இருக்கும் செய்தி வருது, இன்னும் சேர்க்கப் படலை போலிருக்கு. நான், .in என்று முடியும் முகவரியில் இருந்து நீங்க இன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்த .com க்கு மாற்றி இருக்கிறேன், இதனால் ஏதாவது பிரச்சினையா? கொஞ்சம் உதவ முடியுமா? நன்றி.

  ஜெயதேவ்.

  Property Name jayadevdas2007
  Website URL http://jayadevdas.blogspot.com/
  Tracking Status Tracking Not InstalledLast checked: Oct 6, 2012 9:51:14 PM PDT
  The Google Analytics tracking code has not been detected on your website's home page. For Analytics to function, you or your web administrator must add the code to each page of your website.

 5. பதிவு போட்டு ரெண்டு வருஷம் ஆச்சே…!

  😀 😀 😀

  உங்க ப்ளாக்கில் கோட் சரியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அனலிடிக்ஸ் பக்கத்தை refresh செய்து பாருங்கள்,(Tracking Not Installed இதை க்ளிக் செய்ய முடிந்தால் க்ளிக் செய்து பாருங்கள்).

  அனலிடிக்சில் .com முகவரியை தானே கொடுத்துள்ளீர்கள்?