ப்ளாக்கரில் மறைந்திருந்த புதிய வசதி

ப்ளாக்கர் தளம் புதிய மாற்றம் அடைந்தது அனைவரும் அறிந்ததே! அதில் புதிய வசதிகள் பல இருக்கின்றன. அதில் (நான்) இதுவரை அறிந்திராத வசதிகளில் ஒன்றை இன்று தான் கண்டுபிடித்தேன், தற்செயலாக. அதை பற்றி தங்களுடன் இங்கு பகிர்கிறேன்.

அப்படி என்ன வசதி?

நமது  வலைப்பூவில் ப்ளாக்கின் பெயருக்கு கீழே Header Bar இருப்பதை பார்த்திருப்போம் அல்லவா? நாம் உருவாக்கும் பக்கங்கள் அங்கு வரும். ஆனால் நம்மில் பலர், பக்கங்களுக்கு பதில் நாம் விரும்பும் சுட்டிகளை (Links) வைக்கவே விரும்புவோம். மற்ற தளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் சில டெம்ப்ளேட்களில் அந்த வசதிகள் இருக்கும். ஆனால் அந்த வசதி இல்லாத டெம்ப்ளேட்டில் சுட்டிகள் வைப்பது எப்படி?

அதற்கான வழிமுறைகள் பற்றி இணையத்தில் கற்று, பதிவிட வந்த பொழுது, புதிய ப்ளாக்கரில் அந்த வசதி இருப்பதை கண்டேன். தற்போது அந்த வசதி எளிதாகிவிட்டது.

செய்முறை:

1. முதலில் Pages பக்கத்திற்கு செல்லுங்கள்.

2. அங்கு New Page என்பதை க்ளிக் செய்தால் இரண்டு விருப்பங்கள்(Options) வரும்.

   அ. Blank Page – புதிய பக்கங்கள் உருவாக்குவதற்கு

   ஆ. Web Address – சுட்டிகள் இணைப்பதற்கு

Web Address என்பதை தேர்வு செய்யவும்.

3. பிறகு வரும் பக்கத்தில் தலைப்பு ஏதாவது கொடுத்துவிட்டு, Web Address(URL) என்ற இடத்தில் நீங்கள் விரும்பும் தள முகவரியை அல்லது இணைய பக்கத்தின் முகவரியை கொடுத்து Save என்பதை க்ளிக் செய்யவும்.

4. நாம் உருவாக்கிய பக்கங்களை Header Bar-ல் தெரிய வைக்க “Show pages as” என்ற இடத்தில் க்ளிக் செய்தால் அங்கு மூன்று விருப்பங்கள் வரும்.

அ. Top Tabs – Header Bar-ல் வைக்க

ஆ. Side Links – Side Bar-ல் வைக்க

இ. Dont Show – பக்கங்களை எங்கும் தெரியாமல் இருக்க (உங்கள் டெம்ப்ளேட்டில் Default-ஆக header Bar Link வசதி இருந்தால் இதனை க்ளிக் செய்யவும்)

அதில் Top Tabs என்பதை தேர்வு செய்யவும்.

5. பிறகு மேலே, Save Arrangements என்பதை க்ளிக் செய்யவும்.

அவ்வளவு தான்!

இதையும் படிங்க:  தமிழ் ப்ளாக் மூலம் சம்பாதிக்க...

39 thoughts on “ப்ளாக்கரில் மறைந்திருந்த புதிய வசதி”

  1. நல்ல வசதி தான். ரொம்ப நாள் கழிச்சு வந்ததுனால ப்ளாக்கர் மாறுன விஷயம் தெரியல 🙁 படங்களூம் வித்தியாசமா இருக்கு…..

    Reply
  2. உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் பதிவர்களுக்கு பயனுள்ள புதிய தகவல்…. நன்றி

    Reply
  3. நல்ல வசதி தான். ரொம்ப நாள் கழிச்சு வந்ததுனால ப்ளாக்கர் மாறுன விஷயம் தெரியல 🙁 படங்களூம் வித்தியாசமா இருக்கு..

    Reply
  4. உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் பதிவர்களுக்கு பயனுள்ள புதிய தகவல்…. நன்றி

    Reply
  5. பிளாக்கர் தளம் மாறியதாக நீங்கள் சொல்கிறீர்கள்.ஆனால் எனது தளம் மாறவில்லையே.

    Reply
  6. //ஆமினா said… 2

    நல்ல வசதி தான். ரொம்ப நாள் கழிச்சு வந்ததுனால ப்ளாக்கர் மாறுன விஷயம் தெரியல 🙁 படங்களூம் வித்தியாசமா இருக்கு…..//

    வருகைக்கு நன்றி சகோதரி!

    Reply
  7. //koodal bala said… 3

    பதிவர்களுக்கு பயனுள்ள புதிய தகவல் …நன்றி !//

    நன்றி நண்பா!

    Reply
  8. //# கவிதை வீதி # சௌந்தர் said… 4

    தகவலுக்கு மிக்க நன்றி…//

    நன்றி நண்பா!

    Reply
  9. //மாய உலகம் said… 5

    உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் பதிவர்களுக்கு பயனுள்ள புதிய தகவல்…. நன்றி//

    நன்றி நண்பா!

    Reply
  10. //vivasaayi said… 7

    உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் பதிவர்களுக்கு பயனுள்ள புதிய தகவல்…. நன்றி

    நல்ல வசதி தான். ரொம்ப நாள் கழிச்சு வந்ததுனால ப்ளாக்கர் மாறுன விஷயம் தெரியல 🙁 படங்களூம் வித்தியாசமா இருக்கு..
    //

    நன்றி நண்பா!

    Reply
  11. //SURESH said… 9

    பிளாக்கர் தளம் மாறியதாக நீங்கள் சொல்கிறீர்கள்.ஆனால் எனது தளம் மாறவில்லையே.
    //

    நண்பா! தாங்கள் http://draft.blogger.com என்ற முகவரியை தானே பயன்படுத்துகிறீர்கள்?

    Reply
  12. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said… 18

    ஸலாம் சகோ.அப்துல் பாஸித்,
    நல்ல பகிர்வு சகோ. அதனை சொல்லிக்காட்டி இருப்பதும் அருமை.//

    வ அலைக்கும் ஸலாம்

    நன்றி சகோ.!

    Reply
  13. //Mahan.Thamesh said… 21

    பயனுள்ள தகவல் நன்றி பகிர்வுக்கு
    //

    நன்றி நண்பா!

    Reply
  14. //மாய உலகம் said… 25

    பதிவின் தலைப்புக்கேற்ற படம் – பூனை சோ க்யூட்
    //

    🙂 🙂 🙂

    நன்றி நண்பா!

    Reply
  15. COMMEENDS பக்கத்தில் வாசகர்கள் தமிழில் TYPE பண்ணுவதற்கு வசதியாக தினமணி வெப்சைட்ல உள்ள மாதிரி COMMEENDS யை அப்படியே தமிழில் டிபே பண்ணுவது எப்படி

    Reply

Leave a Reply