ப்ளாக்கரில் புதிய பட வசதி – LightBox

கூகிள் ப்ளஸ் வந்ததிலிருந்து கூகிள் தளம் தனது ப்ளாக்கர், யூட்யூப், ஆட்சென்ஸ், ஜிமெயில் போன்ற அனைத்து தளங்களையும் ஒரே மாதிரியான தோற்றமாக மாற்றி வருகிறது. தற்போது அதன் Sign-up பக்கங்களில் மாற்றம் வந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் ப்ளாக்கர் தளத்தில் Light Box எனப்படும் புதிய பட வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னர் நம் தளத்தில் சேர்த்துள்ள படங்களை க்ளிக் செய்தால் அது புதிய பக்கத்தில் அந்த படங்களை காட்டும். ஆனால் தற்போது Light Box என்னும் வசதியை சேர்த்தன் மூலம் நமது தளத்தில் உள்ள படங்களை க்ளிக் செய்தால், தனி பக்கத்திற்கு செல்லாமல் அதே பக்கத்திலேயே பெரிதாய் காட்டும். இது கூகிள் ப்ளஸ் தளத்தில் உள்ளது போன்ற தோற்றமாகும். அதற்கு  கீழே உள்ள சுட்டியை க்ளிக் செய்தால் அந்த படத்தின் பக்கத்திற்கு செல்லலாம்.

ஆனால்  சிலருக்கு இந்த வசதி பிடிக்காமல் இருக்கலாம். மேலும் சிலருக்கு இதன் மூலம் Read More Button வேலை செய்யாமல் இருக்கலாம். அதனால் இதனை நீக்குவது எப்படி? என்று பார்ப்போம்.

1. ப்ளாக்கரில்  Edit Html பக்கத்திற்கு செல்லுங்கள்.

2. உங்கள் டெம்ப்ளேட்டை Back-up எடுத்துக் கொள்ளுங்கள்.

3. பிறகு

</head>

என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால்

<script type=’text/javascript’> //<![CDATA[ function killLightbox() { var images = document.getElementsByTagName( ‘img’); for (var i = 0 ; i < images.length ; ++i) { images[i].onmouseover=function() { var html = this.parentNode.innerHTML; this.parentNode.innerHTML = html; this.onmouseover = null; }; } } if (window.addEventListener) { window.addEventListener(‘load’,killLightbox,undefined); } else { window.attachEvent(‘onload’,killLightbox); } //]]> </script>

என்ற Code-ஐ Paste செய்யுங்கள்.

4. பிறகு Save Template பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

இனி உங்கள் படங்கள் பழைய வடிவிலே காட்டும்.

மேலும்  இது பற்றி தகவல்கள் கிடைத்தால்  அப்டேட் செய்கிறேன்.

நன்றி: இது பற்றிய சந்தேகத்தை கேட்டு இந்த வசதியை எனக்கு தெரிவித்த சகோ. முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு நன்றி!

இதையும் படிங்க:  டைனமிக் டெம்ப்ளேட்டில் Gadget வைக்கலாம்

25 thoughts on “ப்ளாக்கரில் புதிய பட வசதி – LightBox”

  1. நல்ல தகவல் சகோ. ஆனால் எந்த லிங்க் கிளிக் செய்தாலும் எக்ஸ்டெர்னல் டேப் மூலம் ஓபன் ஆகும் படி செய்து இருந்தால் இது புதிய டேப் இல் தான் ஓபன் ஆகும். இதற்கு எதாவது மாற்று வழி உண்டா? #அனுபவம்

  2. பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே

    தொடரட்டும்…

    நட்புடன்
    சம்பத்குமார்
    நண்பர் முஹம்மது ஆஷிக் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்

  3. எனக்கு நீங்கள் கூறியபடிதான் வருகிறது(i am using External tab Option for external links). இது நல்லாவே இருக்கு. Read More க்கு படம் வைத்து இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை வரலாம்.

  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
    சகோ.அப்துல் பாஸித்,

    //இது பற்றிய சந்தேகத்தை கேட்டு இந்த வசதியை எனக்கு தெரிவித்த சகோ. முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு நன்றி!//

    —நான் எங்கே "இந்த வசதியை" தெரிவித்தேன்..?!

    நேத்துலேர்ந்து 'ரீட்மோர்' பட்டன் வேலை செய்யலையே என்று குழம்பி கடைசியில் தங்கள் உதவியை கேட்டேன். நீங்கள்தான் இந்த 'light box' blogger invention-ஐ (வசதியை) discovery செய்தீர்கள்..!

    என் ப்ராப்ளத்தை சால்வ் பண்ணியமைக்கும் நன்றி சகோ..!

  5. //சம்பத்குமார் said… 1

    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே

    தொடரட்டும்…

    நட்புடன்
    சம்பத்குமார்
    நண்பர் முஹம்மது ஆஷிக் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்//

    நன்றி நண்பரே

  6. //Prabu Krishna said… 2

    நல்ல தகவல் சகோ. ஆனால் எந்த லிங்க் கிளிக் செய்தாலும் எக்ஸ்டெர்னல் டேப் மூலம் ஓபன் ஆகும் படி செய்து இருந்தால் இது புதிய டேப் இல் தான் ஓபன் ஆகும். இதற்கு எதாவது மாற்று வழி உண்டா? #அனுபவம்//

    //எனக்கு நீங்கள் கூறியபடிதான் வருகிறது(i am using External tab Option for external links). இது நல்லாவே இருக்கு.//

    நன்றி சகோ.!

    // Read More க்கு படம் வைத்து இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை வரலாம்.//

    ஆஷிக் சகோவும் இதில் பிரச்சனை உள்ளதாகத் தான் சொன்னார் சகோ.!

  7. //
    ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said… 4

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
    சகோ.அப்துல் பாஸித்,

    வ அலைக்கும் ஸலாம்.

    //இது பற்றிய சந்தேகத்தை கேட்டு இந்த வசதியை எனக்கு தெரிவித்த சகோ. முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு நன்றி!//

    —நான் எங்கே "இந்த வசதியை" தெரிவித்தேன்..?!

    நேத்துலேர்ந்து 'ரீட்மோர்' பட்டன் வேலை செய்யலையே என்று குழம்பி கடைசியில் தங்கள் உதவியை கேட்டேன். நீங்கள்தான் இந்த 'light box' blogger invention-ஐ (வசதியை) discovery செய்தீர்கள்..!

    என் ப்ராப்ளத்தை சால்வ் பண்ணியமைக்கும் நன்றி சகோ..!//

    நன்றி சகோ!

  8. //ஆமினா said… 11

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

    நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி சகோ//

    வ அலைக்கும் ஸலாம்.

    நன்றி சகோதரி!

  9. இப்பொழுது, பிளாகரின் அமைப்புகள் பகுதியில் உள்ள Posts and Comments பிரிவிலேயே 'Showcase images with Lightbox' என ஒரு பொத்தான் உள்ளது. இதை 'No' என வைத்தாலே இந்தப் பட வசதியை அணைத்துவிடலாம் என நினைக்கிறேன். சரிதானே?