ப்ளாக்கரில் புதிய (இப்ப பழைய) வசதி: Mobile Template


ப்ளாக்கர் தளம் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. தற்போது அது நமது வலைப்பதிவுகளை மொபைல்களில் பார்க்க வசதியாக Mobile Template- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகமெங்கும் மொபைல்களில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் தற்போது பன்னிரெண்டு மில்லியன் நபர்கள் மொபைல்களில் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு சர்வே கூறுகிறது(கொசுறு: அதில் நானும் ஒருவன்).
இதை மையப்படுத்தி வேர்ட்பிரஸ் தளம் ஆரம்பத்திலேயே மொபைல்களில் வலைப்பதிவுகளை பார்க்கும் வசதியை அளித்துள்ளது. ஆனால் ப்ளாக்கர் தளம் தற்போது தான் (இன்று தான் என நினைக்கிறேன்) இந்த வசதியை அளித்துள்ளது.
இந்த வசதியை செயல் படுத்த,
Blogger Dashboard => Settings => Email & Mobile பக்கத்திற்கு செல்லுங்கள்.
அந்த பக்கத்தில் Show Mobile Template என்ற இடத்தில் Yes என்பதை க்ளிக் செய்யவும்.
பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.
** Save செய்வதற்கு முன்னால், Mobile Preview என்பதை க்ளிக் செய்து மாதிரி பார்த்துக் கொள்ளலாம்.
இனி மொபைல்களில் உங்கள் ப்ளாக் பின்வருமாறு காட்சி அளிக்கும்.

என்ன கொடுமை சார் இது?

மன்னிக்கவும். வேறு பதிவு எழுத தொடங்கிய நான் இந்த வசதியை பார்த்ததும் “நாம் தான் முதலில் எழுத போகிறோம்” என்ற நினைப்பில் எழுதி முடித்துவிட்டேன். பிறகு மீண்டும் அந்த பக்கத்திற்கு சென்று பார்த்தால் அந்த வசதி இல்லை. காரணம் அது Beta Version (சோதனை ஓட்டம்). மீண்டும் அந்த வசதி கண்டிப்பாக (இறைவன் நாடினால்)வரும். அது வரை காத்திருக்கவும்( என்னை திட்டிக் கொண்டிருக்காமல்..).


டவுட்டு:


பிரபலங்களுக்கு புது படத்தோட preview show காட்டுற மாதிரி, எனக்கு ப்ளாக்கர் தளம் காட்டிருக்கோ..?


இப்பொழுது மீண்டும் இந்த வசதி வந்துள்ளது.இதைப் பற்றிய ப்ளாக்கரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

New mobile templates for reading on the go

சும்மா  ஒரு தகவல்:

இதை பற்றி நான் பதிவிட்ட நாள்: December 09, 2010

ப்ளாக்கர்  தளம் பதிவிட்ட நாள்:   December 17, 2010

Update (07/08/2012):

 புதிய டாஷ்போர்டில் மொபைல் டெம்ப்ளேட்டை செயல்படுத்த, Blogger Dashboard => Template பகுதிக்கு செல்லுங்கள்.

அங்கே Mobile என்பதற்கு கீழே Disabled என்று இருந்தால், Settings Button-ஐ கிளிக் செய்யுங்கள்.

அங்கே “Yes, Show mobile template on mobile devices” என்பதை தேர்வு செய்து, கீழே (Custom Template என்பதைத் தவிர) உங்களுக்கு பிடித்த டெம்ப்ளேட்டை தேர்வு செய்து Save என்பதை கிளிக் செய்யுங்கள்.

இதையும் படிங்க:  கூகிளின் அதிரடி மாற்றங்கள்

இது பற்றி கற்போம் தளத்தின் பதிவு: Blogger : Mobile View என்றால் என்ன? அது ஏன் அவசியம் ?

32 thoughts on “ப்ளாக்கரில் புதிய (இப்ப பழைய) வசதி: Mobile Template”

  1. மொபைல் டெம்ப்ளேட் beta என்கிற option இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்

  2. //மன்னிக்கவும். வேறு பதிவு எழுத தொடங்கிய நான் இந்த வசதியை பார்த்ததும் "நாம் தான் முதலில் எழுத போகிறோம்" என்ற நினைப்பில் எழுதி முடித்துவிட்டேன். பிறகு மீண்டும் அந்த பக்கத்திற்கு சென்று பார்த்தால் அந்த வசதி இல்லை. காரணம் அது Beta Version (சோதனை ஓட்டம்). மீண்டும் அந்த வசதி கண்டிப்பாக (இறைவன் நாடினால்)வரும். அது வரை காத்திருக்கவும்( என்னை திட்டிக் கொண்டிருக்காமல்..).//

    பரவாயில்லை நண்பரே இந்த வசதி வரும்போது பயன்படுத்திக்கொள்வோம்,
    தகவலை பகிர்ந்தமைக்கைக்கு மிக்க நன்றி நண்பா

    தொடரடும் உங்கள் பணி

  3. நானும் போய் பார்த்தேன் ஆனால் அந்த வசதி தற்போதைக்கு இல்லை போலும்..வந்தால் மிகவும் நல்லது….முதலில் தெரிவித்ததற்கு மிகவும் நன்றி நண்பா..!

    //// மீண்டும் அந்த வசதி கண்டிப்பாக (இறைவன் நாடினால்)வரும். அது வரை காத்திருக்கவும்( என்னை திட்டிக் கொண்டிருக்காமல்..). ////

    கண்டிப்பாக

  4. //sathish said…

    மொபைல் டெம்ப்ளேட் beta என்கிற option இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்
    //

    இந்த வசதி தற்போது இல்லை நண்பா..

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா..!

  5. //Praveen-Mani said…
    நானும் போய் பார்த்தேன் ஆனால் அந்த வசதி தற்போதைக்கு இல்லை போலும்..வந்தால் மிகவும் நல்லது….முதலில் தெரிவித்ததற்கு மிகவும் நன்றி நண்பா..!

    //// மீண்டும் அந்த வசதி கண்டிப்பாக (இறைவன் நாடினால்)வரும். அது வரை காத்திருக்கவும்( என்னை திட்டிக் கொண்டிருக்காமல்..). ////

    கண்டிப்பாக
    //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா..!

  6. //மாணவன் said… 3

    //மன்னிக்கவும். வேறு பதிவு எழுத தொடங்கிய நான் இந்த வசதியை பார்த்ததும் "நாம் தான் முதலில் எழுத போகிறோம்" என்ற நினைப்பில் எழுதி முடித்துவிட்டேன். பிறகு மீண்டும் அந்த பக்கத்திற்கு சென்று பார்த்தால் அந்த வசதி இல்லை. காரணம் அது Beta Version (சோதனை ஓட்டம்). மீண்டும் அந்த வசதி கண்டிப்பாக (இறைவன் நாடினால்)வரும். அது வரை காத்திருக்கவும்( என்னை திட்டிக் கொண்டிருக்காமல்..).//

    பரவாயில்லை நண்பரே இந்த வசதி வரும்போது பயன்படுத்திக்கொள்வோம்,
    தகவலை பகிர்ந்தமைக்கைக்கு மிக்க நன்றி நண்பா

    தொடரடும் உங்கள் பணி
    //

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா!

  7. //ஆமினா said…

    நல்ல தகவல் பாஸித்

    வரும் வரை காத்திருப்போம் 🙂
    //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, சகோதரி!

  8. பயனுள்ள பதிவு…. இந்தப் பக்கத்தை புக்மார்க் செய்துக்கொள்கிறேன்… பிறிதொரு நாளில் நேரம் கிடைக்கும்போது செயல்படுத்தி பார்க்கிறேன்…

  9. //philosophy prabhakaran said…

    பயனுள்ள பதிவு…. இந்தப் பக்கத்தை புக்மார்க் செய்துக்கொள்கிறேன்… பிறிதொரு நாளில் நேரம் கிடைக்கும்போது செயல்படுத்தி பார்க்கிறேன்…//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா!

  10. //Premkumar Masilamani said… 11

    nice to see humour in your blogs… I like this style… reading will be easy… keep it up 🙂
    //

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா!

  11. //ந.ர.செ. ராஜ்குமார் said…

    அருமையான தகவல் தலைவரே.//

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா!

  12. //தல தளபதி said…பாஸ் கொஞ்சம் இந்த பதிவ பாருங்க http://thalathalabathi.blogspot.com/2010/12/ad.html என்னால பாக்க முடியல என் பதிவ. என்ன பிரச்சனைனு தெரிஞ்சா சொல்லுங்க..//

    என்னால் பார்க்க முடிகிறது நண்பா! உங்கள் கணினியில் அல்லது உலவியில் தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். சிறிது நேரம் கழித்து பாருங்கள்..

  13. //என்னால் பார்க்க முடிகிறது நண்பா! உங்கள் கணினியில் அல்லது உலவியில் தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். சிறிது நேரம் கழித்து பாருங்கள்.//

    கடைசியா உள்ள பதிவு மட்டும் படிக்க முடியல, மத்ததெல்லாம் வழக்கம்போல இருக்கு…சரி நீங்க சொன்னமாதிரி கொஞ்சம் பொறுமையா பாப்போம்..

  14. //தல தளபதி said…

    //என்னால் பார்க்க முடிகிறது நண்பா! உங்கள் கணினியில் அல்லது உலவியில் தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். சிறிது நேரம் கழித்து பாருங்கள்.//

    கடைசியா உள்ள பதிவு மட்டும் படிக்க முடியல, மத்ததெல்லாம் வழக்கம்போல இருக்கு…சரி நீங்க சொன்னமாதிரி கொஞ்சம் பொறுமையா பாப்போம்..
    //

    இப்பொழுது தெரிகிறதா நண்பா?

  15. //Assouma Belhaj said…

    Thnx ஆனா காணேல்ல…!!!
    //

    அதை தான் சகோதரி கடைசியாக கூறியிருக்கிறேன். அது சோதனை ஓட்டம் நடந்திருக்கிறது. விரைவில் வரும் என எதிர்பார்ப்போம்.

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, சகோதரி!

  16. மொபைல் டெம்ப்லேட்டில் ஒரு பிரச்சினை இருக்கிறது.மொபைல் டெம்ப்லேட் வைத்திருந்தால் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் வாக்களிக்க முடியாது.

  17. பயனுள்ள தகவல் நண்பரே
    ஒரு சில தளத்திற்கு செல்லும்போது account suspended என்று வருகிறது அப்படி என்றால் என்ன நண்பரே
    திரட்டியில் நம் பதிவுகளை இணைப்பது எப்படி நண்பரே?

  18. அன்பரே! பதிவிட்ட தேதியை பார்க்கவும். இது 2010-ல் எழுதப்பட்ட பதிவு. கற்போம் தளத்தில் வந்துள்ள பதிவால் (அவரைக் கேட்டுக் கொண்டப் பின்) மீள்பதிவு செய்துள்ளேன்.

    🙂 🙂 🙂

  19. பயனுள்ள தகவல் இதன் மூலமும் பார்வையாளர்களை அதிகரித்துக்கொள்ளலாம் பதிவுக்கு நன்றிகள்

  20. ஆனால் இந்த மொபைல் template opera mini browser தவிர மற்ற மொபைல் browser தெரிவது இல்லை…..சுத்தம்மா இந்த mobile template நல்லாவே இல்லை இருந்தாலும் வைத்து இருக்கேன்…இப்போது எல்லாம் நாம வைபதற்கு முன்பு இருந்தே இருக்கிறது