ப்ளாக்கரில் பிக்னிக் வசதி

பிக்னிக் (Picnik) என்பது புகைப்படங்களை அழகுப்படுத்துவதற்கும், திருத்துவதற்கும் பயன்படும் இணையத்தளமாகும். 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இணையத்தளத்தை கூகிள் நிறுவனம் கடந்த வருடம் (2010) வாங்கியது. புதிய ப்ளாக்கர் தோற்றத்தில் பதிவில் நாம் சேர்க்கும் புகைப்படங்களை பிக்னிக் மூலம் திருத்தம் செய்யும் வசதியை அளித்துள்ளது ப்ளாக்கர் தளம்.

முதலில் பதிவு எழுதும் போது புகைப்படம் ஒன்றை இணைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அந்த படத்தை க்ளிக் செய்தால் பல தேர்வுகள் வரும். அதில் Edit Image என்பதை சொடுக்கவும்.

புதிய சாளரம் (Window) ஒன்று உருவாகும். அதில் உங்கள் படத்தை திருத்தம் செய்யவும், அழகுப்படுத்தவும் நிறைய வசதிகள் இருக்கும். அவற்றில் சில இலவசமாகவும், சில பணம் கட்டி பயன்படுத்தும்படியும் இருக்கும். நம் வழக்கப்படி இலவச வசதிகளையே பயன்படுத்துவோம்.

முழு வசதியையும் விளக்க முடியாது என்பதால் எனக்கு பிடித்த சில இலவச வசதிகளை மட்டும் இங்கு பகிர்கிறேன்.

Vampire Eyes:

ரத்தக் காட்டேரிகளின் (பயப்படாதீங்க..!) கண்கள். புகைப்படத்தில் உள்ள கண்களை ரத்தக் காட்டேரிகளின் கண்கள் போல மாற்றலாம். இவ்வசதி Featured என்னும் Tab-ல் இருக்கும். நான்கு வித கண்களில் ஒன்றை தேர்வு செய்து, படத்தில் உள்ள கண்களில் சொடுக்கினால் மாறிவிடும்.

Mask:

அதே Featured என்னும் Tab-ல் Mask என்பதை சொடுக்கி நமக்கு விருப்பமான முகமூடிகளை படத்தில் சேர்க்கலாம்.

Halloween Stickers:

அதே Featured என்னும் Tab-ல் Halloween Stickers என்பதை சொடுக்கினால், விதவிதமான ஹால்லோவீன் படங்கள் சின்னசின்னதாக இருக்கும். நமக்கு பிடித்தமானதை இணைத்துக் கொள்ளலாம்.

Pencil Draw:

Effect என்னும் Tab-ல் Pencil Draw என்பதை சொடுக்கினால், நமது புகைப்படம் பென்சிலால் வரைந்தது போல மாறிவிடும்.

Before & After

“எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்” என்பது போல முன்னும், பின்னும் உள்ள வித்தியாசங்களை படங்களில் காட்டுவதற்கு இந்த வசதி பயன்படுகிறது. இதனை பயன்படுத்த Frame என்னும் Tab-ல் Before & After என்பதை சொடுக்கவும்.

எல்லா மாற்றங்களும் செய்த பிறகு Save என்பதை க்ளிக் செய்யுங்கள்.

ப்ளாக்கர் பதிவில் இல்லாமல் வேறு பயன்பாட்டிற்காகஇந்த வசதியை பெற வேண்டுமெனில் www.picnik.com என்ற முகவரிக்கு சென்று பயன்படுத்தலாம். கணக்கு துவக்க வேண்டிய அவசியமில்லை.

Picnik Logo Credit: http://facebooklayouts.com/
Mr. Bean Image Credit: http://www.mrbean.co.uk/

இதையும் படிங்க:  ப்ளாக்கரில் புதிதாக +1 Counter வசதி

41 thoughts on “ப்ளாக்கரில் பிக்னிக் வசதி”

  1. நான் கூட தலைப்பைப்பார்த்து மிரண்டுவிட்டேன் நண்பா…. ஒரு வேளை கதைக்கான தலைப்பாக இருக்குமோவென…..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  2. மாப்ள தொழில் நுட்பம் எம்புட்டு வளருதுய்யா…விஷயம் அறிய வைத்த பகிர்வுக்கு நன்றி!

  3. //Heart Rider said… 1

    பயனுள்ள விஷயத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி நண்பா…
    //

    நன்றி நண்பா!

  4. //மாய உலகம் said… 2

    நான் கூட தலைப்பைப்பார்த்து மிரண்டுவிட்டேன் நண்பா…. ஒரு வேளை கதைக்கான தலைப்பாக இருக்குமோவென…..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    //

    //நம் வழக்கப்படி இலவச வசதிகளையே பயன்படுத்துவோம். //

    ஹா ஹா நாம யாரு…. ;-)))))))))
    //

    🙂 🙂 🙂

    //நல்லாயிருக்கு நண்பா… பகிர்வுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
    //

    நன்றி நண்பா!

  5. //விக்கியுலகம் said… 5

    மாப்ள தொழில் நுட்பம் எம்புட்டு வளருதுய்யா…விஷயம் அறிய வைத்த பகிர்வுக்கு நன்றி!//

    நன்றி நண்பா!

  6. //ஆமினா said… 6

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    அப்பவே நெனச்சேன்…………

    தகவலுகு நன்றி சகோ…
    //

    வ அலைக்கும் ஸலாம்.

    🙂 🙂 🙂

    நன்றி சகோ.!

  7. //anbu said… 12

    அருமையான வசதி, இனி நானும் பயன்படுத்திப் பார்க்கிறேன்.
    //

    நன்றி நண்பரே!

  8. //சி.பிரேம் குமார் said… 16

    EDIT IMAGE என்ற OPTION வர வில்லையே அன்பரே படத்தை இணைக்கும் போது ..//

    நண்பா! நீங்கள் draft.blogger.com முகவரியை தானே பயன்படுத்துகிறீர்கள்?

    Add image மூலம் படத்தை இணைத்துவிடுங்கள். post editor-ல் படம் வந்த பிறகு அதனை க்ளிக் செய்தால் edit image வரும்.

  9. //Hari said… 22

    Me too! not come 🙁 How to get it?

    By
    H@r!//

    நண்பா! நீங்கள் draft.blogger.com முகவரியை தானே பயன்படுத்துகிறீர்கள்?

    Add image மூலம் படத்தை இணைத்துவிடுங்கள். post editor-ல் படம் வந்த பிறகு அதனை க்ளிக் செய்தால் edit image வரும்.

  10. தெரிந்த தகவல்தான், என்றாலும் தெளிவாக பதிவிட்டுள்ளீர்கள்.. பாராட்டுகள் நண்பரே..!