ப்ளாக்கரில் பக்கங்களை உருவாக்குவது எப்படி?

ப்ளாக்கர் தளத்தில் Static Pages எனப்படும் தனி பக்கங்களை உருவாக்குவது எப்படி? என்று பார்ப்போம். இதன் மூலம் ABOUT US, CONTACT US போன்ற பக்கங்களை உருவாக்கலாம். (இறைவன் நாடினால்) அடுத்த பதிவு Static Page எனப்படும் இந்த தனி பக்கத்தை அடிப்படையாகக் கொண்டதால், புதியவர்களுக்காக இந்த பதிவு.


பக்கங்களை உருவாக்க:1. Blogger Dashboard => Edit Posts => Edit Pages என்பதை க்ளிக் செய்யவும்.


2. பிறகு New Pages என்பதை க்ளிக் செய்யவும்.


3.பிறகு வரும் பக்கத்தில், சாதரணமாக புதிய பதிவு எப்படி எழுதுவோமோ, அப்படி எழுதவும்.

குறிப்பு: இந்த பக்கங்களுக்கு நாம் குறிச்சொற்கள் கொடுக்க முடியாது.


4. பிறகு கீழே, Post Options என்பதை க்ளிக் செய்து, அதில் Reader Comments என்ற இடத்தில் வாசகர்கள் பின்னூட்டம் இடலாமா வேண்டாமா? என்பதனை தேர்வு செய்யவும்.

5.  பிறகு Preview பட்டனை அழுத்தி முன்னோட்டம் பார்க்கலாம், அல்லது Publish Page பட்டனை அழுத்தி Publish செய்துவிடலாம்.


6. பிறகு வரும் பக்கத்தில் நாம் உருவாக்கிய பக்கத்தை எப்படி வைக்க வேண்டும்? என்று கேட்கும். அந்த பக்கத்தை நாம் மூன்று விதமாக வைக்கலாம். 

Blog sidebar    –   Sidebar-ல் வைக்க இதனை தேர்வு செய்யவும்.
Blog tabs         –   Header-க்கும், பதிவிற்கும் இடையில் வைக்கஇதனை தேர்வு செய்யவும்.
No gadget       –  நாமாகவே சுட்டியாக (Link) வைக்க இதனை தேர்வு செய்யவும்.


7. பிறகு Save and Publish பட்டனை அழுத்தவும்.

அவ்வளவுதான். பக்கம் உருவாகிவிடும். அந்த பக்கத்தின் முகவரியை தெரிந்துக் கொள்ள, View Page என்பதை க்ளிக் செய்து, Address Bar-ல் உள்ள முகவரியை பார்க்கவும்.

குறிப்பு: அதிகபட்சம் நீங்கள் பத்து பக்கங்களை மட்டுமே உருவாக்க முடியும்.

இதையும் படிங்க:  பதிவர்களின் 5 கெட்ட பழக்கங்கள்

10 thoughts on “ப்ளாக்கரில் பக்கங்களை உருவாக்குவது எப்படி?”

 1. அஸ்ஸலாமு அலைக்கும், சகோ பாஸித்! இந்த ப்ளாக்கர் பக்கங்களினால் என்ன பலன்? எப்படி, எதற்கு இதைப் பயன்படுத்தலாம்? நம்முடைய போஸ்ட்டையே இதன் மூலம் பப்ளிஷ் பண்ணலாமா? என்பன போன்ற விளக்கங்களையும் சேர்த்து சொன்னால், என்னைப் போன்ற புதியவர்களுக்கு பயனாக இருக்குமே! இதுபற்றி சுத்தமாக ஒன்றுமே எனக்கு புரியவில்லை. சொல்லுங்களேன், ப்ளீஸ்.

 2. //அஸ்மா said…

  அஸ்ஸலாமு அலைக்கும், சகோ பாஸித்! இந்த ப்ளாக்கர் பக்கங்களினால் என்ன பலன்? எப்படி, எதற்கு இதைப் பயன்படுத்தலாம்? நம்முடைய போஸ்ட்டையே இதன் மூலம் பப்ளிஷ் பண்ணலாமா? என்பன போன்ற விளக்கங்களையும் சேர்த்து சொன்னால், என்னைப் போன்ற புதியவர்களுக்கு பயனாக இருக்குமே! இதுபற்றி சுத்தமாக ஒன்றுமே எனக்கு புரியவில்லை. சொல்லுங்களேன், ப்ளீஸ்.
  //

  வ அலைக்கும் ஸலாம் சகோ.!
  பதிவுகள் தவிர்த்து வேறு விசயங்களை பகிர்ந்துக் கொள்வதற்காக இந்த பக்கங்கள் பயன்படுகின்றன. உதாரணத்திற்கு,

  About Us பக்கம் – பதிவர்கள் தங்களைப் பற்றியோ, அல்லது தன் ப்ளாக்கை பற்றியோ எழுத…

  Contact Us பக்கம் – தன்னை தொடர்புக்கொள்ள மெயில் ஐடி, தொலைபேசி எண், முகவரி போன்றவற்றை பகிர்ந்துக் கொள்ள…

  இறைவன் நாடினால், அடுத்த பதிவு, "அனைத்து பதிவுகளையும் ஒரே பக்கத்தில் (static page) பட்டியலிடுவது" பற்றி எழுத உள்ளேன்.

  இது போன்று நாம் விரும்பும் செய்திகளை பகிர்ந்துக் கொள்ள Static Page பயன்படுகிறது.

  Static
  பொருள்: நிலையான

 3. விளக்கத்திற்கு நன்றி சகோ. (ஜஸாகல்லாஹு ஹைர்). அடுத்த பதிவையும் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.

 4. //அஸ்மா said…

  விளக்கத்திற்கு நன்றி சகோ. (ஜஸாகல்லாஹு ஹைர்). அடுத்த பதிவையும் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.
  //

  நன்றி சகோ.!

 5. அஸ்ஸலாமு அலைக்கும், சகோ பாஸித்!

  பத்திற்கும் அதிகமான பக்கங்களை எவ்வாறு உண்டாக்குவது?

 6. //Admin TNTJLBK said… 7

  அஸ்ஸலாமு அலைக்கும், சகோ பாஸித்!

  பத்திற்கும் அதிகமான பக்கங்களை எவ்வாறு உண்டாக்குவது?//

  வ அலைக்கும் ஸலாம்

  அதற்கான வசதி தற்போது இல்லை சகோ.!

 7. சகோதரரே!நான் முன்பு உங்களிடம் எனது templateன் மேற்ப்பகுதி மறைக்கப்பட்டுள்ளது என்று ஆலோசனை கேட்டபொழுது, படம் ஒன்றை உருவாக்கி பயன்படுத்த சொன்னீர்கள். அவ்வாறு செய்ய இயலாததால் தற்ப்போது வேறொரு templateஐ பயன்படுத்திவருகிறேன். இதற்க்கு காரணம் உங்களது சிறப்பான ஆலோசனையே. அதற்க்கு என் முதல் நன்றி . தற்ப்போது ப்ளாக்கரில் பக்கங்களை உருவாக்குவது எப்படி?என்ற இந்த பதிவில் தங்களின் சில சந்தேகங்கள்…. 1)நாம் உருவாக்கிய பக்கத்தை எப்படி வைக்க வேண்டும்? என்ற வினவளுடன் ஒரு பக்கம் வரும் என்று தாங்கள் குறிப்பிட்ட அந்த பக்கம் open ஆகவே இல்லை.
  2)about me, conduct us போன்ற பக்கங்களைத்தான் உருவாக்க முடிமா? முகப்பு பக்கத்தைப்போன்று பல இடுகைகளை one by one ஆக read more button னுடன் காண்பிக்கும் பக்கங்களை உருவாக்க முடியாதா? தங்களது ஆலோசனைகளை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.நன்றி சகோதரரே!

 8. அஸ்ஸலாமு அலைக்கும் பாஸித் அவர்களே ரொம்ப நண்றி உங்களது பதிவுகல் மிக மிக அருமையாகவுள்ளது