ப்ளாக்கரில் கூகுள் ப்ளஸ் கம்மென்ட் பாக்ஸ் வசதி

ப்ளாக்கரில் பல்வேறு கூகுள் ப்ளஸ் வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது கூகுள் ப்ளஸ் தளம். தற்போது பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸ் வசதிக்கு போட்டியாக ப்ளாக்கரில் கூகுள் ப்ளஸ் கம்மென்ட் பாக்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள். இதனை நமது ப்ளாக்கில் வைப்பது பற்றி பார்ப்போம்.

கூகுள் ப்ளஸ் கம்மென்ட் பாக்ஸ் வசதியின் சிறப்பம்சங்கள்:

நம்முடைய பதிவில் பதியப்படும் சாதாரண பின்னூட்டங்கள், கூகுள்+ மூலம் இடப்படும் பின்னூட்டங்கள், கூகுள்+ தளத்தில் பகிரப்படும் அந்த பதிவுகள் என்று அனைத்தும் தெரியும்.

மேலும் கம்மென்ட் செய்யும்போது Public-ஆக இடாமல் குறிப்பிட்ட Google+ Circles-களுக்கு மட்டும் தெரியும்படி கம்மென்ட் செய்யலாம். வாசகர்கள் பகிரும் கூகுள் ப்ளஸ் வட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே அந்த கம்மென்ட்ஸ் தெரியும். அந்த வட்டத்தில் தள முதலாளிகள் (Site Owners) இல்லை என்றால் அவர்களுக்கும் கூட தெரியாது.

தளத்தில் வாசகர்கள் பின்னூட்டம் இடும்போது அதனை கூகுள் ப்ளஸ் தளத்திலும் பகிரலாம்.

இதனை செயல்படுத்துவது எப்படி?

இந்த வசதியை பெற நீங்கள் ப்ளாக்கர் ப்ரொபைலுக்கு பதிலாக கூகுள் ப்ளஸ் ப்ரொபைலை பயன்படுத்த வேண்டும். அதற்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்.

1. Blogger Dashboard => Google+ பக்கத்திற்கு செல்லுங்கள்.

2.  Use Google+ Comments on this blog என்பதற்கு பக்கத்தில் உள்ள பெட்டியில் டிக் செய்யுங்கள்

அவ்வளவு தான்! கூகுள் ப்ளஸ் கம்மென்ட் பாக்ஸ் உங்கள் தளத்தில் தெரியும்.

சில கஸ்டம் டெம்ப்ளேட்களில் இது வேலை செய்யாது. அதல் செயல்படுத்த,

1. Blogger Dashboard => Template பகுதிக்கு செல்லுங்கள்

2. டெம்ப்ளேட்டைபேக்கப் எடுத்துக்கொள்ளுங்கள்.

3. Edit Html என்பதை க்ளிக் செய்யுங்கள்

4.பின்வரும் நிரலை தேடி

<b:if cond=’data:post.showThreadedComments’>

அதற்கு முன்னாள் பின்வரும் நிரலை சேருங்கள்.

<div class=’cmt_iframe_holder’
expr:data-href=’data:post.canonicalUrl’
expr:data-viewtype=’data:post.viewType’/>

அந்த நிரல் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் இருந்தால், அனைத்துக்கும் முஉன்னால் இரண்டாவது நிரலை சேருங்கள்.

6. Save Template என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான்! இதில் ஏதும் பிரச்சனை இருந்தால் கேளுங்கள்.

இதில் உள்ள ஒரே குறை என்னவென்றால், கூகுள்+ மூலம் அல்லாமல், சாதாரணமாக பதியப்படும் பின்னூட்டங்களுக்கு Reply வசதி இல்லை.

இத கம்மென்ட் பாக்ஸ் பிடித்துள்ளதா? என்பதையும் தெரிவிக்கவும்.

Update:

இந்த புதிய கம்மென்ட் பாக்ஸில் மேலும் சில பிரச்சனைகள் உள்ளன. இன்னும் சில நாட்களில் பழைய கம்மென்ட் முறைக்கு மாற்றிவிடுவேன்.

இதையும் படிங்க:  ப்ளாக்கரில் HTTPS பாதுகாப்பு வசதி அறிமுகம்

13 thoughts on “ப்ளாக்கரில் கூகுள் ப்ளஸ் கம்மென்ட் பாக்ஸ் வசதி”

  1. நீங்கள் இல்லை என்றால் பதிவுலகம் ஸ்தம்பிக்குமோ இல்லையோ நான் ஸ்தம்பித்து விடுவேன் 🙂

    இந்த வசதி எனது டெம்ப்ளட்டில் வேலை செய்யவில்லை… என்ன பிரச்னை என்று தெரியவில்லை

  2. அதுவும் ஒரு கரணம், மேலும் சில பிரச்சனைகளும் உள்ளன. நேரம் கிடைத்தால் அது பற்றி எழுதுகிறேன்.