ப்ளாக்கரில் அதிரடி மாற்றம்

ப்ளாக்கர் தளத்தில் உள்ள வசதிகளில் ஒன்று, நம்முடைய டெம்ப்ளேட்களை நம்முடைய விருப்பம் போல மாற்றி அமைக்கலாம். இதற்கு Edit HTML வசதி பயன்பட்டுவருகிறது. தற்போது இந்த Edit HTML வசதியை மாற்றியுள்ளது ப்ளாக்கர்.

Blogger Dashboard => Template பகுதிக்கு சென்று Edit HTML பகுதியை க்ளிக் செய்தால் பின்வருமாறு புதிய தோற்றத்தில் இருக்கும்.



டெம்ப்ளேட் நிரல்களில் வரிசை எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். சில சமயம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது “இத்தனையாவது வரியில் பிழை” என்று காட்டும். ஆனால் அந்த வரியை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். தற்போது எண்கள் இருப்பதால் எளிதாக கண்டுபிடிக்கலாம்.

Jump to Widget என்பதை க்ளிக் செய்தால், நம்முடைய ப்ளாக்கில் நாம் வைத்துள்ள கேட்ஜட்களின் பெயர்களைக் காட்டும்.

கேட்ஜட்களின் பெயரைக் க்ளிக் செய்தால் அதன் நிரலுக்கு நேரடியாக செல்லும். அதில் மாற்றம் செய்ய வேண்டுமானால் செய்யலாம்.


Preview Template க்ளிக் செய்தால் அதே பக்கத்திலேயே முன்னோட்டம் பார்க்கலாம்.


Format Template & Revert widget templates to default தேவையில்லை (அல்லது அதுபற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை)

Revert Changes என்பதை க்ளிக் செய்தால் டெம்ப்ளேட்டில் நாம் செய்த மாற்றங்களை (Save Template கொடுப்பதற்கு முன்) பழையபடி மாறிவிடும்.

டெம்ப்ளேட்டில் குறிப்பிட்ட நிரலை தேடுவதற்கு டெம்ப்ளேட்டின் உள்ளே க்ளிக் செய்து “Cntrl + F” அழுத்துங்கள். அடுத்தடுத்த வார்த்தைகளை தேட Enter பட்டனை அழுத்துங்கள்.

டெம்ப்ளேட்டில் ஒரு வார்த்தையை இன்னொரு வார்த்தையாக ஒவ்வொன்றாக மாற்ற (Replace) “Cntrl + Shift +F” அழுத்துங்கள்.

டெம்ப்ளேட்டில் ஒரு வார்த்தையை இன்னொரு வார்த்தையாக ஒட்டுமொத்தமாக மாற்ற (Replace All) “Cntrl + Shift +F” அழுத்துங்கள்.

இந்த மாற்றம் எனக்கு 90 சதவீதம் பிடித்துள்ளது. உங்களுக்கு?

இதையும் படிங்க:  சுட்டிகள் புதிய விண்டோவில் திறக்க..

23 thoughts on “ப்ளாக்கரில் அதிரடி மாற்றம்”

  1. Html பகுதி எடிட் செய்வதுஎல்லாம் உங்க அறிவுரைப்படியேதான் நடந்து வர்றேன்.ஏன்னா எனக்கு அதப்பத்தி ஒண்ணும் தெரியாது. அதனால உங்களுக்கு பிடிச்சா எனக்கும் ஓகேதான் அப்பு!

  2. Format Template & Revert widget templates to default தேவையில்லை (அல்லது அதுபற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை)///

    எனக்கும் இதே டவுட்….

    third party template வைத்திருந்தால் கூகுளின் default மாறிவிடும் என நினைக்கிறன்.

  3. இதனை நான் நேற்றைய தினமே பார்த்தேன் மிகவும் இலகுவாக இருக்கின்றது…

    இதனை பற்றி எழுத நினைத்தேன் நேரம் போதாமையால் விட்டு விட்டேன்…

    நன்றி சகோ! பாசித் அவர்களே….. உங்கள் பயணம் மென்மேலும் தொடரட்டும்….

  4. ஈசியாக இருக்கா அப்ப சரி பாஸ் நான் ஏதாவது செய்யவேண்டி வந்தால் இங்குதான் வந்து பார்ப்பேன் அப்ப தொல்லை கொடுக்கிறேன்

  5. நான் சமீபத்தில்தான் ப்ளாக் எழுத ஆரம்பித்திருக்கிறேன். எனது முகவரி http://silanerangalilsilakaruththukkal.blogspot.in/ நான் என்னுடைய ப்ளாக்கில் (1) postகளை PDF ஆக ஆக்குவதற்கு (2) தமிழ்மண ஓட்டுப் பட்டை மற்றும் இதர தளங்களின் ஓட்டுப்பட்டை (3) மேலும் படிக்க என்கிற வசதிகள் பெய edit html பகுதிக்குச் சென்று என்கிற பகுதிக்குச் சென்று மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பல தொழிற்நுட்பத் தளங்களில் படித்தேன்.. ஆனால் என்னுடைய ப்ளாக்கர் new design ப்ளாக்கர் ஆகும்.. பலர் கூறுவது பழைய template designல் உள்ளவற்றைக் கூறுகிறார்கள்.. ஆகையால் நான் மேற்கண்ட (1) to (3) வசதிகளைப் பெற எனக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன், நன்றி,