பேஸ்புக் நிறுவனம் எந்தளவு பிரபலமடைந்துள்ளது என்பதை மற்றவர்களைவிட பதிவர்களுக்கு நன்றாக தெரியும். ப்ளாக்கில் பதிவெழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது பேஸ்புக்கில் மட்டுமே இயங்கி வருகின்றனர். தற்போது பேஸ்புக்கை திறந்தாலே வீடியோக்கள் தான் நிரம்பி வழிகின்றது. இந்த பதிவில் பேஸ்புக் வீடியோவை மிக எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?
- பேஸ்புக் வீடியோவை ப்ளே செய்யுங்கள்.
- வீடியோவில் ரைட் க்ளிக் செய்து “Show URL” என்பதை க்ளிக் செய்யுங்கள்.
- அந்த முகவரியை Address Bar-ல் Paste செய்யுங்கள்.
- அதில் www என்பதை நீக்கிவிட்டு m என்று கொடுங்கள்.
- புதிய முகவரி இப்படி இருக்கும். https://m.facebook.com/whatzupvidz/videos/826508124099459/
- இப்போது வீடியோவை ப்ளே செய்யுங்கள்.
- வீடியோவில் ரைட் க்ளிக் செய்து “Save Video as” என்பதை க்ளிக் செய்து உங்கள் கணினியில் சேமித்துக் கொள்ளுங்கள்.
நல்லது…!
தகவலுக்கு நன்றி!
வணக்கம் சகோ தங்களுக்கு கடுமையான பணிச்சுமை இருக்குமென தெரியும் இருந்தாலும் அடிக்கடி பதிவிடுங்கள் . தங்களின் தொழில்நுட்ப பதிவால்தான் வலைப்பூவிற்கு வந்தேன்
பயனுள்ளதகவல்
பயனுள்ள தகவல் அளித்தமைக்கு நன்றி சகோதரரே.
Unga blog Super sir.. Its very useful