பேஸ்புக் ரசிகர் பக்கத்தில் வரவேற்பது எப்படி?

சமூக வலையமைப்புத் தளங்களில் முன்னணியில் இருப்பது பேஸ்புக் தளம். இணையத்தளம்/வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் ரசிகர் பக்கம் (Fan Page) என்றதொரு வசதியை அறிமுகப்படுத்தியது. இதைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். தற்போது அதனை அழகுப்படுத்துவது எப்படி? என்று பார்ப்போம்.

UPDATE:

பேஸ்புக் வடிவமைப்பு மாறிவிட்டதால் இந்த வசதி வேலை செய்யாது.

பேஸ்புக் ரசிகர் பக்கம் பற்றிய முந்தைய பதிவுகள்:

நமக்கும் உருவாக்கலாம் Facebook Fan Page
பேஸ்புக் லைக் பாக்ஸ் (Like Box) வைக்க..
பேஸ்புக் பேன் பேஜ் – சில விளக்கங்கள்

Welcome Tab:

நம்முடைய பேஸ்புக் ரசிகர் பக்கத்திற்கு வரும் வாசகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அழகிய வரவேற்பு பக்கம் உருவாக்குவது எப்படி? என்று இங்கு பார்ப்போம். இதன் மூலம் நமது ரசிகர் பக்கத்திற்கு வரும் வாசகர்களை வரவேற்று, நம்முடைய ரசிகர் பக்கத்தை விரும்புமாறு கேட்டுக் கொள்ளலாம்.

1. முதலில் பேஸ்புக் கணக்கில் உள்நுழைந்துக் கொள்ளுங்கள். பிறகு https://www.facebook.com/apps/application.php?id=4949752878 என்ற முகவரிக்குச்சென்று அங்கு இடதுபுறத்தில் Add to my page என்பதை க்ளிக் செய்யுங்கள்.

2. பிறகு வரும் விண்டோவில் உங்கள் ரசிகர் பக்கத்துக்கு நேராக இருக்கும் Add to Page என்ற பட்டனை சொடுக்கவும். உடனே உங்களுக்கு தனி பக்கம் உருவாகிவிடும்.

3. பிறகு உங்கள் பேஸ்புக் ரசிகர் பக்கத்திற்கு சென்று, வலதுபுறம் மேலே உள்ள  Edit Page என்பதை க்ளிக் செய்து அங்கு Apps என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அங்கு FBML என்பதின் கீழே Go to Application என்பதை க்ளிக் செய்யுங்கள்.

4. பிறகு வரும் பக்கத்தில் Box Title என்ற பகுதியில் தலைப்பு இட்டு, FBML என்ற பகுதியில் தங்கள் வரவேற்பு செய்தியை இடவும்.

FBML பகுதியில் நீங்கள் HTML பயன்படுத்தி புகைப்படமும் இணைத்துக் கொள்ளலாம்.உங்களுக்கு போட்டோஷாப் தெரிந்திருந்தால் அழகிய படங்களை வைக்கலாம்.
படத்தை இணைப்பதற்கான நிரல்:
<img src=”http://3.bp.blogspot.com/-dCtYuDCoDSk/Tq6J175qmiI/AAAAAAAABgM/YM90ww-ETQE/s1600/like.jpg” />

மேலுள்ள நிரலில் http://3.bp.blogspot.com/-dCtYuDCoDSk/Tq6J175qmiI/AAAAAAAABgM/YM90ww-ETQE/s1600/like.jpg என்பதற்கு பதிலாக உங்கள் படத்தின் முகவரியை கொடுக்கவும். மேலும் பல HTML நிரல்களைக் கொண்டு அழகுப்படுத்தலாம்.

5. நிரலைக் கொடுத்தப் பின் Save Changes என்பதை க்ளிக் செய்யவும்.

6. பிறகு அதே Edit Page பக்கத்தில் Manage Permissions என்பதை க்ளிக் செய்து, அங்கு Default Landing Tab என்ற பகுதியில் நீங்கள் உருவாக்கிய வரவேற்பு பக்கத்தை தேர்வு செய்து, Save Changes என்பதை க்ளிக் செய்யவும்.

அவ்வளவு தான்! இனி வாசகர்கள் நமது ரசிகர் பக்கத்திற்கு வரும்போது நேராக வரவேற்பு பக்கம் காட்டும். ஏற்கனவே நமது ரசிகர் பக்கத்தில் அவர்கள் இணைந்திருந்தால் அவர்களுக்கு Wall பகுதி காட்டும்.

27 thoughts on “பேஸ்புக் ரசிகர் பக்கத்தில் வரவேற்பது எப்படி?”

  1. ரொம்ப நாளாக இதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் பகிர்வுக்கு நன்றி…

  2. மிக்க நன்றி நண்பா!நீங்கள் கூறிய படிமுறைகள் அனைத்தும் செய்து விட்டேன்.. ஆனால் எனது பேஸ்புக்கில், Manage Permissions ல் Default Landing Tab என்பது தென்படவே இல்லையே? உதவுவீர்களா?

  3. //மாய உலகம் said… 1

    facebook பற்றி முகவும் பயனுள்ள பதிவு நண்பரே!… பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா..//

    நன்றி நண்பா!

  4. //Heart Rider said… 2

    ரொம்ப நாளாக இதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் பகிர்வுக்கு நன்றி…
    //

    நன்றி நண்பா!

  5. //சம்பத் குமார் said… 3

    பயனுள்ள பகிர்விற்க்கு நன்றி நண்பரே..

    நானும் முயற்ச்சித்துப் பார்க்கின்றேன்

    நன்றியுடன்
    சம்பத்குமார்//

    நன்றி நண்பரே!

  6. //கறுவல் said… 4

    மிக்க நன்றி நண்பா!நீங்கள் கூறிய படிமுறைகள் அனைத்தும் செய்து விட்டேன்.. ஆனால் எனது பேஸ்புக்கில், Manage Permissions ல் Default Landing Tab என்பது தென்படவே இல்லையே? உதவுவீர்களா?//

    Wall Tab Shows என்பதற்கு அடுத்ததாக இருக்கும் நண்பா! அனைத்து பேஸ்புக் ரசிகர் பக்கத்திலும் இந்த தேர்வு இருக்கும். உங்கள் பேஸ்புக் ரசிகர் பக்க முகவரியை சொல்ல முடியுமா?

  7. //~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said… 7

    ஸலாம் சகோ.அப்துல் பாஸித்…
    நானும் இதேபோல செய்துவிட்டேன்…
    எனவே…
    என்னையும் சகோஸ்…

    …"Like"…-க்கும்படி

    அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.//

    வ அலைக்கும் ஸலாம்.

    நன்றி சகோ.!

  8. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ.,,
    டைம் இல்லை இன்ஷாஅல்லாஹ் ஈத் விடுமுறையில் ட்ரை பண்ணுகிறேன். பதிவுக்கு நன்றி

  9. //thariq ahamed said… 15

    அஸ்ஸலாமு அழைக்கும் சகோ.,,
    டைம் இல்லை இன்ஷாஅல்லாஹ் ஈத் விடுமுறையில் ட்ரை பண்ணுகிறேன். பதிவுக்கு நன்றி//

    வ அலைக்கும் ஸலாம்

    நன்றி சகோ. நேரமிருக்கும் போது முயற்சி செய்யுங்கள்.

  10. //கறுவல் said… 12

    இதை நான் எங்களது நிறுவன பக்கத்திற்கு முயற்சித்தேன்.
    //

    நண்பா! இன்னொரு நண்பருக்கும் தங்கள் சொன்னது போல இருக்கிறது. காரணம் என்னவென்று தற்போது தெரியவில்லை. தெரிந்ததும் சொல்கிறேன் நண்பா!

  11. மன்னிக்கவும்! பேஸ்புக் வடிவமைப்பு மாறிவிட்டதால் இந்த வசதி வேலை செய்யாது. தற்போது பதிவிலும் தெரிவித்துள்ளேன்.