பேஸ்புக் பேன் பேஜ் – சில விளக்கங்கள்

பேஸ்புக் பேன் பேஜ் (Facebook Fan Page) பற்றி கடந்த இரண்டு பதிவுகளில் பார்த்தோம். நீளம் கருதி அனைத்தையும் ஒரே பதிவில் சொல்ல முடியாததால் அதைப் பற்றி மூன்றாவது பதிவு எழுதுவதை தவிர்க்க முடியவில்லை. இந்த பதிவில் அதனை பற்றிய சின்ன சின்ன விசயங்களை பார்ப்போம்.

 பெயர் மாற்றம்:

நீங்கள் உருவாக்கிய பக்கத்தின் முகவரி சற்று நீளமாக இருக்கும். உதாரணத்திற்கு

http://www.facebook.com/pages/வலைப்பூ/135662416511018

இதனை சுருக்கமாக மாற்றும் வசதியையும் பேஸ்புக் தளம் தருகிறது. ஆனால் அவ்வாறு செய்வதற்கு உங்கள் பக்கத்தை குறைந்தது 25 நபர்கள் Like செய்திருக்க வேண்டும். அப்படி  25 நபர்கள் Like செய்திருந்தால், நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு, facebook.com/tamilblog

அவ்வாறு மாற்ற 

1. உங்கள் பக்கத்தில் Edit Page என்பதை க்ளிக் செய்து, Basic Information என்பதை க்ளிக் செய்யவும்.

2. Username என்பதற்கு பக்கத்தில் Create a username for this page? என்பதை க்ளிக் செய்யவும்.

3. பிறகு வரும் பக்கத்தில் நீங்கள் விரும்பும் பெயரை கொடுத்துவிட்டு ஓகே கொடுக்கவும். [கவனிக்க: ஒரு முறை நீங்கள் பெயரை மாற்றிவிட்டால் மீண்டும் அதனை மாற்ற முடியாது.]

4. மீண்டும் ஒரு முறை நீங்கள் கொடுத்த பெயரை உறுதி செய்ய சொல்லும். Confirm என்பதை க்ளிக் செய்யவும்.

5. உங்கள் பக்கத்தின் பெயர் மாற்றப்பட்டதை அறிவிக்கும். அப்பொழுது ஓகே அழுத்தவும்.

அவ்வளவு தான்.

User Mode & Page Mode:

நீங்கள் Facebook Fan Page-ஐ உருவாக்கிய பின் இரண்டு Modes இருக்கும்.

ஒன்று User Mode, மற்றொன்று Page Mode.

உதாரணத்திற்கு என்னுடைய User Mode,  Abdul Basith என்பதாகும்.

என்னுடைய Page Mode ப்ளாக்கர் நண்பன் என்று நான் உருவாக்கிய பக்கம்.

User Mode ஆகவும், Page Mode ஆகவும் நாம் விரும்பும் நேரத்தில் மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு மாற்றுவதற்கு பேஸ்புக் தளத்தின் மேலே வலது ஓரம் Account Settings என்பதை க்ளிக் செய்தால் அங்கு “Use Facebook as Fan Page” என்று இருக்கும். அதை க்ளிக் செய்தால் நான் உருவாக்கிய பக்கங்கள் பெயர் இருக்கும். அதன் பக்கத்தில் Switch என்பதை க்ளிக் செய்தால் நமது கணக்கு Page Mode-ற்கு மாறிவிடும். மீண்டும் User Mode-ற்கு மாற மீண்டும் Account Settings என்பதை க்ளிக் செய்து அங்கு “Switch Back to [your name]” என்று இருக்கும். அதை க்ளிக் செய்து User Mode-ற்கு மாறிக் கொள்ளலாம்.

இதையும் படிங்க:  பேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி

User Mode:
 
இது சாதாரணமாக நாம் Facebook-ஐ பயன்படுத்தும் முறை.

Page Mode:
 
இந்த Mode-ற்கு மாறினால் தான் நமது பக்கத்தை நாம் Edit செய்யலாம். இந்த Mode-ல் இருக்கும் போது மற்றவர்களின் Profile-ல்  நாம் கருத்துக்கள் கொடுக்க முடியாது. இன்னும் சில விசயங்களை செய்ய முடியாது. சில சமயம் பின்வரும் படத்தில் உள்ளது போல கேட்கும். அப்பொழுது Continue என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

நமது  பதிவுகளை பகிர:

ஃபேஸ்புக்கில் பதிவுகளை பகிர்வது எப்படி? என்று சமீபத்தில் பதிவிட்டேன். அவ்வாறு தானியங்கியாக பகிர்வதில் தற்போது ஏதோ ஒரு சிக்கல் உள்ளது. அது சரியாகும் வரை நீங்கள் உங்கள் பேஸ்புக் பேன் பேஜின் முகப்பு பக்கத்தில் Share என்பதற்கு பக்கத்தில் Link என்பதை க்ளிக் செய்து உங்கள் பதிவின் URL-ஐ கொடுத்து பகிரவும்.

மறுபடியும்….  நீளம் கருதி அனைத்தையும் ஒரே பதிவில் சொல்ல முடியாததால்….. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

மேலும் இதனை மேம்படுத்துவது பற்றி இறைவன் நாடினால் நான் கற்றுக் கொண்டபின் பகிர்கிறேன்.

11 thoughts on “பேஸ்புக் பேன் பேஜ் – சில விளக்கங்கள்”

 1. இதுவரை எத்தனை பேஜ் கிரியேட் செய்திருக்கிறோம் என்பதை எப்படி கண்டுபிடிப்பது தேவையில்லாத பேஜ்களை ரீமூவ் செய்வது எப்படி???? நல்ல பதிவுகள் எழுதுகிறீர்கள் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

 2. //Vadivelan R said…

  இதுவரை எத்தனை பேஜ் கிரியேட் செய்திருக்கிறோம் என்பதை எப்படி கண்டுபிடிப்பது தேவையில்லாத பேஜ்களை ரீமூவ் செய்வது எப்படி???? நல்ல பதிவுகள் எழுதுகிறீர்கள் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்
  //

  வாழ்த்துக்கு நன்றி நண்பா!

  facebook முகப்பு பக்கத்தில் இடதுபுறம் News Feed, Friends, message என்று இருக்கும். அதற்கு கீழே Pages என்பதை க்ளிக் செய்தால் நீங்கள் உருவாக்கிய பக்கங்கள் இருக்கும்.

  அதனை Delete செய்ய, உங்கள் பக்கத்தில் Edit Info என்பதை க்ளிக் செய்து, Manage Permissions என்பதை க்ளிக் செய்தால், அங்கு கீழே Delete Page என்று இருக்கும். அங்கே க்ளிக் செய்தால் உங்கள் பக்கம் நீக்கப்படும். அப்படி நீக்கப்பட்ட பக்கங்களை திரும்ப பெற முடியாது.

 3. வணக்கம்,
  நான் என் ப்ளாக்கிற்கு fan page creat செய்துவிட்டேன்.ஆனால் ப்ளாக்கில் like box வைக்க code வரவில்லை.
  என் ப்ளாக்கில் இணைக்கவேண்டிய code ஐ எனக்கு தருவிக்கமுடியுமா?
  fan page url=
  http://www.facebook.com/pages/வெங்கடேச-குருக்களின்-பக்கங்கள்/286924964655466?v=wall

  MY MAIL ID
  gvsivam@gmail.com

  நன்றி.வணக்கம்,
  நான் என் ப்ளாக்கிற்கு fan page creat செய்துவிட்டேன்.ஆனால் ப்ளாக்கில் like box வைக்க code வரவில்லை.
  என் ப்ளாக்கில் இணைக்கவேண்டிய code ஐ எனக்கு தருவிக்கமுடியுமா?
  fan page url=
  http://www.facebook.com/pages/வெங்கடேச-குருக்களின்-பக்கங்கள்/286924964655466?v=wall

  MY MAIL ID
  gvsivam@gmail.com

  நன்றி.