பேஸ்புக் பகிர்வுகளை பதிவில் இணைக்கலாம்

பேஸ்புக் தளம் சமூக வலைத்தள போட்டியில் முதல் நிலையை தக்கவைக்க தொடர்ந்து புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துகிறது. தற்போது பேஸ்புக்கில் பொதுவில் (Public) பகிர்பவைகளை நமது பதிவுகளில் இணைக்கும் வசதியைத் தந்துள்ளது.

பேஸ்புக் பகிர்வுகளை பதிவில் இணைக்க:

பேஸ்புக் பகிர்வுகளில் மவுஸை நகர்த்தினால் சிறிய அம்புக்குறி காட்டும். அதை க்ளிக் செய்து Embed Post என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அதில் நிரலும் (Code), முன்னோட்டமும் இருக்கும். அந்த நிரலை காப்பி செய்து உங்கள் பதிவுகளில் இணைக்கலாம். அப்படி இணைத்த பகிர்வு பின்வருமாறு தெரியும்.

இந்த வசதி ஏற்கனவே ட்விட்டர் தளத்தில் இருக்கிறது. அதுபற்றி பார்க்க, ட்வீட்களை பதிவில் இணைப்பது எப்படி?

இதையும் படிங்க:  பங்கு வர்த்தகத்தில் கால் பதித்தது பேஸ்புக்

5 thoughts on “பேஸ்புக் பகிர்வுகளை பதிவில் இணைக்கலாம்”

  1. பேஸ்புக்கில் மொபைல் குறுந்தகவல் மூலம் ஸ்டேடஸ் போடுவது பற்றி ஏதேனும் பதிவெழுதினீரா நண்பரே :-))))