பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸில் மட்டுறுத்தல்

பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸ் ப்ளாக்கரில் இணைப்பது பற்றி பார்த்தோம் அல்லவா?அதில் வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்தல் (Moderate) செய்யும் வசதியையும் பேஸ்புக் தளம் நமக்கு வழங்குகிறது. அதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

பேஸ்புக் தளத்தில் உள்நுழைந்திருக்கும் நிலையில், பதிவில் உள்ள பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸில் வாசகர்களின் பின்னூட்டங்கள் பின்வருமாறு தெரியும்.

பாக்ஸின் மேலே Public Comments, Moderate view என்று காட்டும். மேலே வலது ஓரம் Settings என்று இருக்கும்.

இவை மூன்றும் அட்மினாகிய நீங்கள் பார்க்கும் போது மட்டும் தான் தெரியும். மற்றவர்களுக்கு தெரியாது.

முதலில்  Settings பற்றி பார்ப்போம். Settings என்பதை கிளிக் செய்தால் பின்வருமாறு காட்டும்.

இதில் தேவையானதை மட்டும் பார்ப்போம்.

Moderate Application comments – இதனை கிளிக் செய்தால், உங்கள் ப்ளாக்கில் அனைத்து பதிவுகளிலும் வந்துள்ள பின்னூட்டங்களை ஒரே பக்கத்தில் பார்க்கலாம்.  அங்கே நீங்கள் மட்டுறுத்தல் (Moderate) செய்யலாம்.

Moderators – இதில் உங்கள் பேஸ்புக் நண்பர்களையும் Moderator-களாக சேர்க்கலாம். இதனால் அவர்களும் பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்யலாம்.

Moderation Mode – ப்ளாக்கரில் உள்ள Comment Moderation போல் தான். Make every post public by default என்பதை தேர்வு செய்தால், எல்லா பின்னூட்டங்களும் உடனே பப்ளிஷ் ஆகிவிடும். Let me approve each comment before it appears என்பதை தேர்வு செய்தால் பின்னூட்டங்களை நீங்கள் அனுமதித்த பின்பே பிரசுரம் ஆகும்.

Blacklisted words – சில குறிப்பிட்ட வார்த்தைகள் பின்னூட்டங்களில் இருந்தால் அதை தானாக நீக்கும் வசதி. இதில் மூன்று தேர்வுகள் இருக்கும். அதில் Create Custom List என்பதை தேர்வு செய்து, நீங்களாக தடை செய்ய வேண்டிய வார்த்தைகளை சேர்க்கலாம். பல வார்த்தைகளை சேர்க்க கமா ( , ) குறியீட்டை பயன்படுத்துங்கள்.

Other login Providers -பேஸ்புக் கணக்கு மட்டுமல்லாமல் Yahoo, AOL, Hotmail ஆகிய கணக்குகளின் மூலமாகவும் கருத்திடும் வசதி. இது டிக் செய்து இருக்கட்டும்.

Comments Composer – அனைத்து பின்னூட்டங்களும் தெரிய வேண்டுமா? அல்லது ஐந்து பின்னூட்டங்கள் மட்டும் தெரிய வேண்டுமா? என்பதை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். இரண்டாவதை தேர்வு செய்தால், ஐந்து பின்னூட்டங்கள் மட்டும் தெரியும். மற்றவைகளை View More என்பதை கிளிக் செய்து படிக்கலாம்.

மாற்றங்கள் செய்த பிறகு Save என்பதை கிளிக் செய்யுங்கள்.

இறைவன் நாடினால் மீதம் உள்ளதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

இதையும் படிங்க:  ஃபேஸ்புக்கில் பதிவுகளை பகிர்வது எப்படி?

10 thoughts on “பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸில் மட்டுறுத்தல்”

  1. சென்ற பதிவில் ஆர்வத்தை ஏற்படுத்திய விஷயம் இது! அதாவது பேஸ்புக்கில் comments moderation!

    விரிவாகவும் சுலபமாக புரியும் படியும் எழுதிய நண்பருக்கு நன்றி!

  2. நண்பா என்னுடைய பேஸ்புக் கமென்ட் பாக்ஸ் செட்டிங் தெரியவில்லை

    எப்படி செட்டிங் சேர்ப்பது நீங்கள் எழுதிய முந்தைய பதிவு பேஸ்புக்

    கமெண்ட்ஸ் பாக்ஸ் எப்படி சேர்ப்பது அந்த பதிவில் உள்ள கோடிங் தான்

    சேர்த்தேன்

  3. இன்று உங்கள் தளத்தை தாறுமாறாக பதிவு எழுதி இருக்கேன் தைரியம்

    இருந்தால் வா நண்பா சண்டைக்கு பேஸ்புக் கமென்ட் பெட்டி ப்ளாக்யில்

    சேர்ப்பது எப்படி ? என்ற பதிவை பார்க்கவும்