பேஸ்புக்கை பின்தொடரும் ட்விட்டர்

பேஸ்புக், கூகுள் ப்ளஸ் போட்டிக்கு இடையே ட்விட்டர் தளமும் முன்னணியில் இருந்துக் கொண்டிருக்கிறது. சமூக இணையதளங்களின் வெற்றி அது அறிமுகப்படுத்தும் புதிய வசதிகளில் தான் இருக்கிறது. இந்த வகையில் பேஸ்புக் தளத்தின் Cover Photo வசதியைப் போலவே ட்விட்டர் தளமும் Header என்னும் புதிய வசதியைத் தந்துள்ளது.

பேஸ்புக் கவர் போட்டோ போல இருக்கும் இதில் உள்ள வித்தியாசம், ப்ரொஃபைல் போட்டோ Header படத்தின் நடுவே உள்ளது.

நீங்களும் இதே போல header படம் வைக்க.,

1. ட்விட்டர் தளத்தில் Settings => Design பக்கத்திற்கு செல்லுங்கள்.

2. Customize your own என்பதற்கு கீழே Change Header என்பதை கிளிக் செய்து, உங்கள் படத்தை தேர்வு செய்து Save கொடுங்கள்.

அவ்வளவுதான்! உங்கள் ட்விட்டர் ப்ரொஃபைல் பக்கத்தில் படம் வந்துவிடும்.

இது பற்றிய வீடியோ விளக்கம்:

இதையும் படிங்க:  ட்வீட்களை பதிவில் இணைப்பது எப்படி?

16 thoughts on “பேஸ்புக்கை பின்தொடரும் ட்விட்டர்”

  1. நல்ல பயன்னுள்ள பதிவு….. பகிர்வுக்கு நன்றி….

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  2. பேஸ்புக்கை பின்தொடரும் ட்விட்டர் என்றதும் இப்ப தான் ட்விட்டர்காரனுங்க facebokk use பண்ண ஆரம்பிக்கிரானுகளோ என நினைச்சுட்டேன்……