பேஸ்புக்கில் Tag-ஐ நீக்குவது எப்படி?

பேஸ்புக் தளத்தில் அதிகமானவர்களுக்கு பிடிக்காத ஒன்று, Tagging. நமது பேஸ்புக் பகிர்வுகளில் நண்பர்களை இணைப்பது Tag எனப்படும். நாம் டேக் செய்யப்பட போட்டோ மற்றும் மற்ற பேஸ்புக் பகிர்வுகளில் இருந்து நம்மை விடுவிப்பது எப்படி? என்று பார்ப்போம்.

பேஸ்புக் Tag-ஐ நீக்குவது எப்படி?

நம்மை யாராவது டேக் செய்திருந்தால் நமக்கு அதுபற்றி Notification வரும்.

மேலும் அந்த புகைப்படம் Public-ஆக பகிரப்பட்டிருந்தால், நம் நம் நண்பர்கள் அனைவரின்  பேஸ்புக் பக்கத்திலும் இந்த புகைப்படம் தெரியும். மேலும் நமது பேஸ்புக் Timeline பக்கத்திலும் அந்த படம் இருக்கும்.

இதனை நீக்க,

படத்தை க்ளிக் செய்து, “Allowed on Timeline” என்பதை க்ளிக் செய்து, “Hide from Timeline” என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான். அந்த படம் உங்கள் பக்கத்திலோ, உங்கள் நண்பர்கள் பக்கத்திலோ தெரியாது. ஆனால் உங்கள் Tag அப்படியே தான் இருக்கும்.

Tag-ஐ நீக்க, படத்தை க்ளிக் செய்யாமல், படத்திற்கு கீழே படம் பகிரப்பட்ட நாள், நேரம் இருக்குமல்லவா? அதனை க்ளிக் செய்யுங்கள். அப்படி க்ளிக் செய்தால் பின்வருமாறு தெரியும்.

அந்த பக்கத்தில் போட்டோவுக்கு கீழே Report/Remove Tag என்று இருக்கும். அதை க்ளிக் செய்யுங்கள்.

அதில் “I want to untag myself” என்பதை தேர்வு செய்யுங்கள். அந்த படம் பேஸ்புக்கில் இருப்பதை விரும்பவில்லை என்றால் இரண்டாவதையும் தேர்வு செய்யுங்கள். பிறகு Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான்! உங்கள் பெயர் அதிலிருந்து நீக்கப்பட்டுவிடும். பிறகு Ok என்பதை க்ளிக் செய்யுங்கள்.

டிஸ்கி: எப்போதும் கடினமான வழியை தெரிந்தப் பிறகு தான் எனக்கு எளிமையான வழி தெரிகிறது. மேலே சொன்னது பற்றிய எளிய வழியையைப் பற்றி இறைவன் நாடினால் அடுத்த பதிவில் பார்ப்போம். மேலும் இது போன்று தானாக பகிரப்படுவதை தவிர்ப்பதற்கான வழியையும் விரைவில் பார்ப்போம்.

நன்றி: இந்த பதிவிற்காக, சிரமம் பார்க்காமல் என்னை டேக் செய்த நண்பர் திடங்கொண்டு போராடு சீனு அவர்களுக்கு நன்றி!

இதையும் படிங்க:  பங்கு வர்த்தகத்தில் கால் பதித்தது பேஸ்புக்

12 thoughts on “பேஸ்புக்கில் Tag-ஐ நீக்குவது எப்படி?”