பேஸ்புக்கில் புது வசதி: File Sharing

பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தும் அனைவரும் அதில் உள்ள குழுமங்கள் (Groups) பற்றி தெரிந்திருப்போம். இதுவரை பேஸ்புக் குழுமங்களில் தகவல்கள் (Status message), இணைப்பு (link), போட்டோ, வீடியோக்களை பகிரும் வசதி மட்டும் தான் இருந்தது. தற்போது கிட்டத்தட்ட அனைத்துவிதமான கோப்புகளையும் பகிரும் (File Sharing) வசதியை தந்துள்ளது.

நீங்கள் இருக்கும் குழுமத்திற்கு சென்றால் அங்கே Upload File என்றொரு தேர்வு இருக்கும்.

படத்தை பெரிதாக காண படத்தின் மேல் கிளிக் செய்யவும்.

அதை கிளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள ஃபைலை தேர்வு செய்து Upload என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

உங்கள் ஃபைலின் அளவைப் பொறுத்து பதிவேற்ற நேரம் எடுக்கும். பதிவேறிய பிறகு மேலே உள்ளது போல வரும்.

Download – அந்த ஃபைலை பதிவிறக்கம் செய்ய

Upload Revision -அந்த ஃபைலில் மாற்றம் செய்து பதிவேற்றம் செய்ய

இதற்கு முன்னர் இருந்த Doc என்னும் Tab-ற்கு பதிலாக Files என்ற Tab இருக்கும்.

அதை கிளிக் செய்தால் பதிவேற்றிய அனைத்து கோப்புகளும் அங்கே இருக்கும். மேலும் அங்கே உள்ள + பட்டனை கிளிக் செய்தும் கோப்புகளை பதிவேற்றலாம்.

அதிகபட்சமாக 25 MB அளவுள்ள கோப்புகளை பதிவேற்றலாம். இசை கோப்புகள் (Music Files) மற்றும் கணினி மென்பொருள்களை (.exe files) பதிவேற்றமுடியாது.

தற்போது சில குழுமங்களுக்கு மட்டுமே இந்த வசதி வந்துள்ளது. விரைவில் அனைத்து குழுமங்களுக்கும் வந்துவிடும்.

வலைச்சரத்தில் நான்…:

இந்த வார வலைச்சரத்தில் நான் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுள்ளேன். அங்கும் தங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நானாகிய என்னைப் பற்றி நான்

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி

இவர்கள் பதிவுலக டாக்டர்கள்

நான் வீழ்வேன் என நினைத்தாயோ?

பயனுள்ள தொழில்நுட்பப் பதிவுகள்

சமூகம், அறிவியல் மற்றும் சில

இதையும் படிங்க:  பேஸ்புக்கில் புதிய Threaded Comments வசதி

15 thoughts on “பேஸ்புக்கில் புது வசதி: File Sharing”

  1. தொடர்ந்து புதுபுது வசதிகள்

    பகிர்வுக்கு நன்றி சகோ

    Reply
  2. தினந்தோறும் ஏதாவது சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள் போல இந்த பேஸ்புக்காரர்கள் ..!

    Reply
  3. நல்ல தகவல்….
    EXE வகை கோப்புகளை அனுமதிக்காதற்கு காரணம் வரஸ் பரவலாம் என்கிற பயமாக இருக்க்கும்..

    நன்றி நண்பரே!

    Reply
  4. நல்ல வசதியாக உள்ளது. இதை குரூப் மட்டுமின்றி அனைத்துக்கும் விரிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.

    Reply

Leave a Reply