பேஸ்புக்கில் புதிய Threaded Comments வசதி

Threaded Comments பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அதாவது யாராவது கருத்திடும் போது அந்தந்த கருத்துக்களுக்கு அதற்கு கீழேயே தொடரிழையாக கருத்திடும் வசதி. ப்ளாக்கரில் கூட Threaded Comments வசதி உள்ளது. தற்போது பேஸ்புக் தளம் இந்த வசதியைக் கொண்டுவந்துள்ளது.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடரும் பயனாளர்களுக்கு அவர்கள் ப்ரொபைலில் இவ்வசதி தானாக செயலுக்கு வந்துவிடும்.

வரும் ஜூலை 10-ஆம் தேதியன்று அனைத்து பேஸ்புக் பக்கங்களும் இவ்வசதியை பெற்றுவிடும்.

இருந்தாலும், இவ்வசதியை நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் இப்போதே வைக்கலாம்.

உங்கள் பேஸ்புக் பக்கத்திற்கு சென்று, அங்கே மேலே Edit Page கிளிக் செய்து, Manage Permissions என்பதை கிளிக் செய்யுங்கள்.

அங்கே Replies என்ற இடத்தில் உள்ள பெட்டியில் டிக் செய்து Save Changes என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அவ்வளவுதான்! இனி உங்கள் பக்கத்தில் Comment Reply வசதி வந்துவிடும்.

இதையும் படிங்க:  ஃபேஸ்புக் பட்டனை நம் வலைப்பதிவில் இணைப்பது எப்படி?

6 thoughts on “பேஸ்புக்கில் புதிய Threaded Comments வசதி”

  1. //10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடரும் பயனாளர்களுக்கு இவ்வசதி தானாக செயலுக்கு வந்துவிடும்.// மத்தவங்களுக்கெல்லாம் வராதா ?

  2. பதிவில் இப்போது மாற்றம் செய்துள்ளேன்.

    //10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடரும் பயனாளர்களுக்கு அவர்கள் ப்ரொபைலில் இவ்வசதி தானாக செயலுக்கு வந்துவிடும்.//

  3. நண்பரே ஒரு உதவி தங்களின் அடுத்த பதிவில் வீடியோ எடிட்டிங் பற்றி எழுதினால் உதவியாக இருக்கும்…………….