பேஸ்புக் டைம்லைனில் நமக்கு பிடிக்காத செய்திகளை பார்க்காமல் தவிர்ப்பதற்கு புதிய வசதியை சோதனை செய்கிறது பேஸ்புக் நிறுவனம். Keyword Snooze என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வசதி தற்போது சோதனை முறையில் சிலருக்கு மட்டுமே கொடுத்து வருகிறது.
உதாரணத்திற்கு உங்களுக்கு பிடித்தமான படம் வெளிவருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். கொஞ்ச நாள் கழித்து அந்த படத்தைப் பார்ப்பதற்கு நீங்கள் முடிவு செய்கிறீர்கள். ஆனால் பேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் யாராவது அந்த படத்தை விமர்சனம் என்கிற பெயரில் படத்தின் திருப்பத்தையோ அல்லது முழு கதையையோ பகிரலாம். இவற்றை தவிர்ப்பதற்கு இந்த வசதி பயன்படும்.
படம் என்றில்லை, உங்களுக்கு பிடிக்காத எந்த தலைப்பை வேண்டுமானாலும் இந்த வசதி மூலம் பேஸ்புக் டைம்லைனில் பார்ப்பதை தவிர்க்கலாம்.