பேஸ்புக்கில் உள்ள Photo Tag வசதி பற்றி அறிந்திருப்பீர்கள். நம் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த அல்லது நண்பர்களின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிரும்போது அந்த போட்டோவில் உள்ள நண்பர்களை குறிப்பதற்கு இது பயன்படுகிறது. ஆனால் அதிகமானவர்கள் தொடர்பில்லாத பொதுவான புகைப்படங்களில் நண்பர்களை டேக் செய்கிறார்கள். இதனால் அந்த நண்பர்களுக்கு பிரச்சனை வரும் என்று உங்களுக்கு தெரியுமா?
பேஸ்புக் பயனர்களுக்கு சில சமயம் பல்வேறு காரணங்களால் கணக்கு முடக்கப்படும். அதை சரி செய்து மீண்டும் பேஸ்புக் பயன்படுத்த அவர்களுக்கு (அநேகமாக) நான்கு வழிகள் தான் உள்ளது.
1. எஸ்எம்எஸ் மூலம் Verification Code பெறுதல் – ஆனால் இதற்கு நீங்கள் பேஸ்புக் கணக்கில் உங்கள் மொபைல் எண்ணை சேர்த்திருக்க வேண்டும்.
2. புகைப்படங்களில் உள்ள உங்கள் நண்பர்களை சரியாக சொல்லுதல் – இதைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்
3. சமீபத்தில் நீங்கள் எந்த கணிணியில் இருந்து பேஸ்புக் பயன்படுத்துனீர்களோ? அதிலிருந்து உள்நுழைய வேண்டும்.
4. இந்த மூன்றும் முடியாத பட்சத்தில் இறுதியாக இருக்கும் ஒரே வழி, நமது அரசாங்க அடையாள அட்டை நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
பொதுவாக பேஸ்புக் பயன்படுத்தும் அதிகமானவர்கள் தங்கள் மொபைல் எண்ணை கொடுத்திருக்க மாட்டார்கள். அதனால் மொபைல் என்னை கொடுத்திருந்தால் மட்டுமே முதல் வழி மூலம் கணக்கை திரும்ப பெறமுடியும்.
அதிகமானவர்கள் தங்கள் அடையாள அட்டை நகலை கொடுப்பதற்கு விரும்ப மாட்டார்கள்.
மூன்றாவது வழி எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை. இதை பயன்படுத்தியவர்கள் சொல்லவும்.
இதனால் கணக்கை திரும்ப பெறுவதற்கு நம்மிடம் முக்கியமான வழி புகைப்படங்களில் உள்ள நண்பர்களை சரியாக சொல்லுதல்.
புகைப்படங்களில் உள்ள நண்பர்கள் யார் என்று ஐந்து முறை கேட்கும். ஒவ்வொரு முறையும் ஒரு நண்பரின் மூன்று புகைப்படங்களைக் காட்டும். இந்த ஐந்து தடவையில் குறைந்தபட்சம் மூன்று முறை சரியாக சொன்னால் மட்டுமே உங்கள் கணக்கை திரும்ப பெற முடியும்.
மேலே உள்ளது மாதிரி புகைப்படம். அதில் முதல் புகைப்படம் மூலம் நண்பர் யார் என்று சொல்லிவிடலாம். மற்ற இரண்டு புகைப்படங்களைப் பாருங்கள்.
நண்பர் இல்லாத பொதுவான புகைப்படங்களில் நண்பர்களை டேக் செய்யும் புகைப்படங்கள் இவைகள்.
இவற்றின் மூலம் கண்டுபிடிக்க முடியுமா? முடியாது தானே? அப்படியென்றால் உங்கள் நண்பர்கள் இல்லாத பொது புகைப்படங்களில் உங்கள் நண்பர்களை டேக் செய்யாதீர்கள்!
“அதெல்லாம் நான் கேட்கமாட்டேன். டேக் செய்தே தீருவேன்” என்று அடம்பிடிக்கிறீர்களா? அப்படியென்றால் அதற்கு வேறொரு வழி இருக்கிறது.
Status Bar-ன் கீழே முதல் ஐகானை க்ளிக் செய்து, Who were you with? என்ற இடத்தில் உங்கள் நண்பர்களை டேக் செய்துக் கொள்ளலாம்.
இதனால் Tag-ம் செய்துவிடலாம், நண்பர்களுக்கும் பிரச்சனை ஏற்படுத்தாமல் இருக்கலாம்.
“என்னங்க, எங்களை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே?” அப்படீன்னு நெனச்சா, நீங்க பேஸ்புக்கில் Tag செய்வதை தடுக்க என்ற பதிவை பாருங்கள்.
துபாய்ல நட்ட நடுவுல செல வைக்க அனுமதி கொடுப்பாய்ங்களா பாஸ்… கொடுத்தா மொத செல உங்களுக்குத்தான்.
தல பகிர்வுக்கு நன்றி தல
நன்றி நன்றி நன்றி
சிலைக்கு மறக்காமல் குடை வைத்து விடவும் 🙂
நடக்கட்டும்…
இப்பொழுது 150 நண்பர்கள்
வரை போட்டோ இணைப்பு குடுக்கும் வசதியை அறிமுகடுத்தி உள்ளது
இடுகைத்தலைப்பு:
பேஸ்புக்கில் டேக் செய்ய போறீங்களா?
உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!
நன்றி தெய்வமே,இந்த டாக் (Tag) தொல்லை தாங்க முடியல்ல….
ஆமாங்க வெளியூர் சென்றபோது இதுபோன்றதொரு பிரச்சனை எனக்கும் ஏற்பட்டது… ஏதோ அன்றைக்கு டேக் செய்த படமாக இருந்ததால் என்னால் கண்டுபிடிக்க முடிந்தது…. அதனால் டேக் அப்ரூவல் செய்துள்ளேன் அது போன்ற டேக்களை அனுமதிப்பதேயில்லை… உங்கள் பகிர்வுக்கு நன்றி
அநேகருக்கு தேவைப்படும் நல்ல பதிவு… நன்றி அண்ணா…
நட்ட நடுவுல சிலை வச்சா வண்டியெல்லாம் எப்படி போகும்?
🙂
தமிழ்நாட்டுல காசுகொடுத்தா எங்க வேண்டுமானாலும் சிலை வைக்கலாமே…துபாய்ல எப்படின்னு தெரியலையே..
Thank you gee
நான் பலமுறை செக்யூரிட்டி செக்கப்ல மாட்டியிருக்கேன்
பல பேக் ஐடி ஆரம்பிச்சு ஒரே கம்ப்யூட்டர்ல உள் நுழைந்ததுதான் காரணம் என்று சொன்னார்கள் .
இப்போ ஒரே ஒரு பேக் ஐடி மட்டும் என்னோட செல் நெம்பர் கொடுத்து நிரந்தரமாக்கி கொண்டேன்…
இருந்தாலும் பேஸ் புக் ரொம்ப கட்டு பெட்டி …
இந்தமாதிரி ரெஸ்ட்ரிக்ஸ்னெல்லாம் இருக்க கூடாது …
அதான் தொந்தரவு தந்தால் ப்ளாக் ஆப்ஷன் இருக்கே ….
அப்புறம் எத்தனை ஐடி ஆரம்பிச்சா என்ன ?