பூமி தினம் கொண்டாடும் கூகுள்

இன்று ஏப்ரல் 22-ஆம் தேதி உலகம் முழுவதும் பூமி தினமாக (Earth Day)  கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு அனிமேசன் டூடுலை வெளியிட்டுள்ளது.

இந்த டூடுலை நீங்கள் பார்த்திருந்தாலும் அதில் சிலவற்றை கவனித்திருக்க மாட்டீர்கள். மேலுள்ள வீடியோவில் அவை அனைத்தும் உள்ளது.

இந்த அனிமேசன் டூடுலில் இலையுதிர் காலம், குளிர் காலம், வசந்த காலம், கோடை காலம் என நான்கு காலங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

அதில் உள்ள இரண்டு குகைகளில் க்ளிக் செய்தால் கரடிகள் எட்டி பார்க்கும்.

அதில் உள்ள குழியில் க்ளிக் செய்தால் Badger எனப்படும் விலங்கினம் எட்டிப் பார்க்கும்.

மேகங்களை க்ளிக் செய்தால் மழை பெய்யும்.மழை பெய்த பிறகு மரத்தில் இலைகள் வளரும்.

Dandelion என்னும் பூக்களை க்ளிக் செய்தால் பிரகாசமாக மலரும்.

வேறு என்னவெல்லாம் உள்ளது என்று வீடியோவை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். பிறகு கூகுள் தளத்தில் செய்து பாருங்கள்.

சரி, இனி சமூக பார்வை!

சுற்றுசூழல் பற்றி பாடம் எடுக்க அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன். நாம் பல்வேறு வகையில் சுற்றுசூழலை மாசுப்படுத்தி வருகிறோம். அதில் சிலவற்றை தவிர்க்க முடியாது என்றாலும் அதற்கு மாற்றாக நாம் செய்ய வேண்டிய ஒன்று, மரம் வளர்ப்பது! இது ஒன்று தான் நாம் நம்முடைய எதிர்கால சந்ததிகளுக்கு விட்டுச்செல்லும் மிகப்பெரும் சொத்தாக அமையும்!

இதையும் படிங்க:  கேள்வியும் நீங்களே! பதிலும் நீங்களே!

6 thoughts on “பூமி தினம் கொண்டாடும் கூகுள்”