கூகுள்தளம் இன்று (08/11/2020) மராத்திய எழுத்தாளர் மற்றும் நகைச்சுவையாளர், புருசோத்தம் லட்சுமண் தேசுபாண்டேஅவர்களின் 101-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
புருசோத்தம் லட்சுமண் தேசுபாண்டே(Purushottam Laxman Deshpande) (பிறப்பு: 1919 நவம்பர் 8 – இறப்பு: 2000 சூன் 12), தனது பெயரிலுள்ள முதலெழுத்துக்களால் (” பு. ல “) என பிரபலமாக அறியப்பட்டார். இவர் இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த மராத்திய எழுத்தாளர் மற்றும் நகைச்சுவையாளர் என அறியப்பட்டார். மேலும் ஒரு திறமையான திரைப்பட மற்றும் மேடை நடிகர், திரைக்கதை எழுத்தாளர், எழுத்தாளர், இசையமைப்பாளர், இசைக்கலைஞர் (ஆர்மோனியம் வாசிப்பவர்), பாடகர் மற்றும் சொற்பொழிவாளர் என பன்முகக் கலைஞராகவும் இவர் இருந்தார். பெரும்பாலும் “மகாராட்டிராவின் அன்பான ஆளுமை” என்று அழைக்கப்பட்டார்.
தேசுபாண்டேவின் படைப்புகள் ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன
You must log in to post a comment.