புதிய Google Bar-ஐ உடனே பெறுவது எப்படி?

 கடந்த பதிவில் கூகிளின் புதிய தோற்றம் – New Google Bar பற்றி  பகிர்ந்தேன் அல்லவா? இன்னும் அந்த தோற்றம் (என்னையும் சேர்த்து) பலருக்கு வரவில்லை. அதனை உடனடியாக பெறுவது எப்படி? என்று இங்கு பார்ப்போம்.

இதனைப் பெற கூகிள் க்ரோம் (Google Chrome) உலவியை பயன்படுத்த வேண்டும்.

1. கூகிள் க்ரோம் உலவியில் திறந்து, இங்கே க்ளிக் செய்துEdit This Cookie” என்னும் நீட்சியை நிறுவிக் கொள்ளுங்கள்.

2. பிறகு Google.com தளத்திற்கு செல்லுங்கள். அங்கு Rigt Click செய்து Edit Cookies என்பதை கிளிக் செய்யுங்கள்.

3. பிறகு வரும் பக்கத்தில் PREF என்பதை கிளிக் செய்து, அங்கு Value என்ற இடத்தில் பின்வருபவற்றை பேஸ்ட் செய்யுங்கள்.

ID=03fd476a699d6487:U=88e8716486ff1e5d:FF=0:LD=en:CR=2:TM=1322688084:
LM=13226880­85:S=McEsyvcXKMiVfGds

அவ்வாறு கொடுத்தப் பின் கீழே Submit Cookie Changes என்பதை கிளிக் செய்யுங்கள்.

4. இப்பொழுது மீண்டும் Google.com தளத்திற்கு சென்றால் புதிய Google Bar இருக்கும்.

இதில் More என்பதை கிளிக் செய்தால் மேலும் பல தளங்களின் பட்டியலைக் காட்டும்.

ஜிமெயில் தளத்திலும் இந்த புதிய மாற்றங்கள் இருக்கும்.

இதனை பெற்ற பிறகு நாம் நிறுவிய “Edit This Cookies” நீட்சியை நீக்கிவிடலாம். உலவியின் மேலே வலதுபுறம் உள்ள Cookies படத்தில் Right Click செய்து, Uninstall என்பதை கிளிக் செய்தால் அந்த நீட்சி நீங்கிவிடும்.

கவனிக்க: க்ரோமில் இந்த வசதியை பெற்று பிறகு மற்ற உலவிகளைப் பயன்படுத்தினால் பழையபடி தான் இருக்கும். க்ரோம் உலவியில் மட்டும் தான் இதனை பெற முடியும்.

நன்றி: Maximilian Majewski

இதையும் படிங்க:  தமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்

25 thoughts on “புதிய Google Bar-ஐ உடனே பெறுவது எப்படி?”

  1. பயனுள்ள பகிர்விற்க்கு மிக்க நன்றி நண்பரே..

    நானும் ஆக்டிவேட் செய்து விட்டேன்

    தோற்றம் அழகாக உள்ளது

    நன்றியுடன்
    சம்பத்குமார்

  2. ஸலாம் சகோ.அப்துல் பாஸித்,
    மாற்றி விட்டேன். அருமையாக உள்ளது. மிக்க நன்றி சகோ.
    //இதனை பெற்ற பிறகு நாம் நிறுவிய "Edit This Cookies" நீட்சியை நீக்கிவிடலாம்.//–அதை அவசியம் நீக்கியாக வேண்டுமா..? நீக்காவிட்டால் இதனால ஏதும் பிரச்சினை வருமா..? uninstall கொடுத்துவிட்டேன். இருந்தாலும், மேலதிக தகவலுக்காக கேட்கிறேன். 🙂

  3. //சம்பத் குமார் said… 1

    பயனுள்ள பகிர்விற்க்கு மிக்க நன்றி நண்பரே..

    நானும் ஆக்டிவேட் செய்து விட்டேன்

    தோற்றம் அழகாக உள்ளது

    நன்றியுடன்
    சம்பத்குமார்//

    நன்றி நண்பரே!

  4. //~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said… 3

    ஸலாம் சகோ.அப்துல் பாஸித்,
    மாற்றி விட்டேன். அருமையாக உள்ளது. மிக்க நன்றி சகோ.
    //இதனை பெற்ற பிறகு நாம் நிறுவிய "Edit This Cookies" நீட்சியை நீக்கிவிடலாம்.//–அதை அவசியம் நீக்கியாக வேண்டுமா..? நீக்காவிட்டால் இதனால ஏதும் பிரச்சினை வருமா..? uninstall கொடுத்துவிட்டேன். இருந்தாலும், மேலதிக தகவலுக்காக கேட்கிறேன். :-)//

    வ அலைக்கும் ஸலாம் சகோ.!

    பிரச்சனை எதுவுமில்லை. ஆனால் அது தேவையில்லாதது என்பதால் நீக்கும் வழியையும் சொன்னேன்.

  5. //திண்டுக்கல் தனபாலன் said… 4

    நானும் செய்து பார்க்கிறேன்… நன்றி நண்பரே!//

    நன்றி நண்பரே!

  6. //கக்கு – மாணிக்கம் said… 6

    தகவல்களுக்கு நன்றி நண்பரே !
    நானும் அமைத்துவிட்டேன். வழக்கம் போலவே பிரமாதம்.//

    நன்றி நண்பரே !

  7. //நல்ல ப்ளாக்கரை ஆதரிப்பவன் said… 8

    ஸலாம்
    பாசித் சகோ
    நல்ல வேகம் … விவேகம் ….

    ஓய்வு இருந்தால் இதையும் படிங்களேன் …

    ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி//

    வ அலைக்கும் ஸலாம்

    நன்றி சகோ.

    அப்புறம், அது என்னுடைய தள முகவரி.

  8. //Loganathan Gobinath said… 13

    சூப்பர் பாஸ். இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்.//

    நன்றி நண்பா!