கூகிள் தளத்தின் சமூக வலைத்தளமான கூகிள் ப்ளஸ் தனது கள சோதனையை (Field Trial) முடித்துக் கொண்டு சோதனைக் களத்தில் (Beta Version) இறங்கியுள்ளது. தற்போது அழைப்பிதழ் இல்லாமலேயே யார் வேண்டுமானாலும் இணையலாம். அத்துடன் மேலும் சில புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகிள் ப்ளஸ் பற்றிய முந்தைய பதிவுகள்:
சாதனை படைக்குமா கூகிள் ப்ளஸ்(Google+)?
கூகிள் ப்ளஸ், ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக்கர்
கூகிள் ப்ளஸ்ஸில் ஆட்டம் ஆரம்பம்
கூகிள் ப்ளஸ் கேம்ஸ் – ஒரு பார்வை
மொபைல் போன்களிலும் Hangouts வசதி மூலம் அதிகபட்சமாக ஒன்பது நபர்களுடன் (நம்மை சேர்த்து பத்து) முகம் பார்த்து உரையாடலாம். ஆனால் தற்போது ஆன்ட்ராய்ட் மொபைல்களில் மட்டுமே இவ்வசதி உள்ளது. ஐபோன்களுக்கான வசதி விரைவில் வரவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.
Hangout வசதியில் பத்து நபர்கள் மட்டும் தான் உரையாடலாம். ஆனால் நாம் உரையாடும் வீடியோவை மற்றவர்களும் காண்பதற்கு இந்த Hangouts On Air வசதி பயன்படுகிறது. தற்போது சிறிய அளவிலான பயனாளர்களுக்கு மட்டும் இவ்வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
Hangout என்னும் குழு வீடியோ சாட்டில் மேலும் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
Screensharing – வீடியோ சாட் செய்து கொண்டிருக்கும்போது, நமது கணினித் திரைகளில் உள்ளவற்றை சாட்டில் உள்ளவர்களும் பார்க்கும் வசதி.
Sketchpad – குழுவாக இணைந்து படம் வரையும் வசதி.
Google Docs – குழுவாக இணைந்து Documents உருவாக்கும் வசதி.
Named Hangouts – நமது குழு சாட்டிங்கிற்கு பெயர் வைக்கலாம்.
கூகிள் ப்ளஸ் தளத்தில் நமக்கு விருப்பமானதை தேடலாம். அது பற்றிய கூகிள் ப்ளஸ் பகிர்வுகள், பயனாளர்கள், மற்றும் இணையத்தில் இருந்து முடிவுகள் காட்டும். முன்பு Sparks என்று Sidebar-ல் இருந்தது தான். இனி முகப்பு பக்கத்திலேயே தேடலாம்.
Google+ Sms:
இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்கள் இனி SMS மூலம் கூகிள் ப்ளஸ்ஸில் பகிரலாம், குழு சாட் செய்யலாம். இதனை ஆக்டிவேட் செய்ய Account Settings => Google+ => Phone பக்கத்திற்கு சென்று உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்ய வேண்டும்.கட்டணம் குறித்து தெரியவில்லை. எஸ்.எம்.எஸ் கட்டணம் இலவசமாக இருந்தால் இதுவும் இலவசம் என்று நினைக்கிறேன்.
Google+ Messenger:
மொபைலில் Text குழு சாட்டிங் செய்யும் வசதி. இதில் புகைப்படங்களையும் பகிரலாம். முன்பு Huddle என்ற பெயரில் இருந்தது தான் தற்போது Messenger என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் ஆன்டிராய்ட் மொபைல்களுக்கு மட்டும் தான்.
இந்த புதிய வசதிகளில் Hangout with Extras வசதி மட்டும் தான் பிடித்திருக்கிறது. மற்றவைகள் நன்றாக இருந்தாலும் அவைகள் ஆன்ராய்ட் பயனாளர்களுக்காகவே இருக்கிறது.
கூகிள் ப்ளஸ் பயன்படுத்தும் போது தனியாக பயன்படுத்துவது போலவே இருக்கிறது. மேலும் தொழில்நுட்ப ஆர்வலர்களை மட்டும் தான் இது கவர்ந்திருக்கிறது. மற்றவர்களில் ஒரு சிறு அளவினரையே கவர்ந்திருக்கிறது. பேஸ்புக் பயன்படுத்தும் அதிகமானோருக்கு கூகிள் ப்ளஸ் என்றாலே என்னவென்று தெரியவில்லை. கூகிள் ப்ளஸ் பிரபலமாக இன்னும் சில காலங்கள் ஆகலாம் என்றே தோன்றுகிறது. ஏனெனில் பேஸ்புக் தளம் 750 மில்லியன் பயனாளர்களை அடைய ஏழு ஆண்டுகள் ஆனது. அப்படி இருக்கும் போது கூகிள் ப்ளஸ் தளத்திற்கும் சிறிது காலம் எடுக்கத் தான் செய்யும்.
பேஸ்புக் மாற்றங்கள்:
நாளை (22.09.2011) நடைபெறவுள்ள F8 எனப்படும் நிகழ்ச்சியில் புதிய வசதிகளை அறிவிக்க இருந்தது பேஸ்புக் தளம். கூகிள் ப்ளஸ் தளத்தின் இந்த அறிவிப்பால் தான் அறிவிக்கவிருந்த வசதிகளில் சிலவற்றை நேற்றே அறிமுகப்படுத்திவிட்டது. நாளையும் சில வசதிகளை அறிவுக்கவுள்ளது. அதில் குறிப்பிட்ட ஒன்று, இசை தொடர்பான Music Integration. பேஸ்புக்கை பற்றி தொடர் எழுதும் எண்ணம் உள்ளதால் புதிய வசதிகளை இங்கு பகிரவில்லை.
கவனிக்க: கூகிள் ப்ளஸ் வசதிகளின் புகைப்படங்களை பயன்படுத்த கூகிளிடம் அனுமதி கேட்டிருக்கிறேன். இதுவரை பதில் இல்லாததால் புகைப்படங்களை இங்கு இணைக்கவில்லை.
மேலும் விவரங்கள் அறிய: Google+: 92, 93, 94, 95, 96, 97, 98, 99… 100.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
நிறைய தெரியாத விஷயங்களை தெரிந்துக் கொண்டேன்
பகிர்வுக்கு நன்றி சகோ
இந்த புதிய வசதிகளில் Hangout with Extras வசதி மட்டும் தான் பிடித்திருக்கிறது. மற்றவைகள் நன்றாக இருந்தாலும் அவைகள் ஆன்ராய்ட் பயனாளர்களுக்காகவே இருக்கிறது.
—-
அதே அதே
வந்தாச்சு சகோ. ஹி ஹி ஹி எல்லாமே பதிவு எழுதறதுக்கு முன்னமே சொல்லியாச்சே. இது ரிவிஷன் பண்றது போல இருக்கு. ஹி ஹி ஹி
//கூகிள் ப்ளஸ் பிரபலமாக இன்னும் சில காலங்கள் ஆகலாம் என்றே தோன்றுகிறது.//
எனக்கும்தான்…
Screen Lock – இந்த மென்பொருள் என்னால் உருவாக்கப்பட்டது
புதிய செய்திகளைத் தரும் உங்களின் வேகம் பிடித்திருக்கிறது.
புதுமைகளை தேடிப்பிடித்து பதிந்துள்ளீர்கள்
மிக்க நன்றி நண்பா பகிவிற்க்கு
நட்புடன்
சம்பத்குமார்
இனி கூகுள்+ ஐ அசைக்க முடியாது
ஆஹா…. ஃபேஸ்புக்கை பற்றிய தொடர் இதை இதை தான் எதிர் பார்க்கிறேன் நண்பரே…. பயனுள்ள பதிவு… பகிர்வுக்கு நன்றி நண்பரே
புது விஷயம் அறிந்து கொண்டேன் நண்பரே
பகிர்வுக்கு நன்றி நண்பரே
புதிய விஷயங்களை தமிழில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி..! வாழ்த்துக்கள்..!!
Thanks Abdul
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….
அருமையான பதிவு சகோ
வாழ்த்துக்கள் நண்பா (ஒரு லட்சம் பார்வைக்கு )
இன்னும் வளருவீர்கள் …
sms free thaan