புதிய யூட்யூப் சேனல் டிசைன் – One Channel

யூட்யூப் தளம் சேனல் வடிவமைப்பை மாற்றி One Channel என்ற புதிய வடிவமைப்பை கொடுத்துள்ளது. இது பற்றி கடந்த மாதம்  பிட்.. பைட்… மெகாபைட்….! பகுதியில் பார்த்தோம். ஒரு சில சேனல்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட இந்த டிசைன் தற்போது அனைத்து சேனல்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சேனலில், நமது சேனல் பக்கத்திற்கு Subscribe செய்திடாத வாசகர்கள் வரும் போது மட்டும் பிரத்யேக வீடியோவை வைக்கலாம். இது Channel Trailer எனப்படும். உதாரணத்திற்கு மேலே உள்ள படம். இது என்னுடைய யூட்யூப் சேனலான The Spider Tech. நீங்கள் இதுவரை அந்த சேனலை Subscribe செய்திருக்கவில்லை என்றால் கீழுள்ள வீடியோ தானாக ப்ளே ஆகும்.

 

Subscribe செய்தவர்கள் நமது சேனலுக்கு வந்தால் பின்வருமாறு காட்டும்.

இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், Subscribe செய்தவர்கள் பார்க்கும் போது, What to watch next என்ற இடத்தில் நமது வீடியோக்களில் அவர்கள் பார்க்காத வீடியோவைக் காட்டும்.

மேலும் அவற்றுக்கு கீழே Recent Uploads, Popular Uploads, Single Playlist, All Playlists என்று நமக்கு விருப்பமான முறையில் வீடியோக்களை தெரியவைக்கலாம்.

மேலும் பேஸ்புக் கவர் போன்று பெரிய படம் ஒன்றையும் வைக்கலாம். அதன் கீழே நமது தளத்திற்கான இணைப்பு மற்றும் நம்முடைய Google+, Facebook மற்றும் Twitter கணக்குகளுக்கும் இணைப்பு கொடுக்கலாம்.  இந்த படம் கணினி, மொபைல் மற்றும் டேப்லட் என்று நாம் பயன்படுத்தும் சாதனங்களுக்கு ஏற்ப பொருந்திக் கொள்ளும்.

இந்த சேனல் வடிவமைப்பை பெற http://www.youtube.com/onechannel என்ற முகவரிக்கு சென்று, அந்த பக்கத்தின் இறுயில் உள்ள Get Started என்பதை க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு புது சேனல் டிசைன் கிடைத்துவிடும். அங்கு உங்கள் சேனலை வடிவமைத்துக் கொள்ளலாம்.

புதிய டிசைன் பிடிக்காமல் மீண்டும் பழைய டிசைனுக்கு மாற நினைத்தால் மேலே உள்ள அதே முகவரிக்கு சென்று, இறுதியில் உள்ள Switch Back என்பதை க்ளிக் செய்து மாறிக் கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமிருந்தால் கீழே உள்ள Subscribe பட்டனை அழுத்தி எனது யூட்யூப் சேனலில் இணைந்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க:  குழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு!

7 thoughts on “புதிய யூட்யூப் சேனல் டிசைன் – One Channel”

  1. அவசியமான பதிவு…

    # சன் டிவி போல் தாங்களும் பல சேனல் தொடங்கி பல ஹீரோக்களை அறிமுகப் படுத்தவும் 🙂

  2. விண்டோஸ்7 இன்ஸ்ட்டால் செய்த பிறகு என்னிடம் உள்ள் acer motherbord cdயை எப்படி இன்ஸ்ட்டால் செய்யவேண்டும் விளக்கமாக செல்லுவும் cdயை computerரில் உள்ளே செலூத்திஉடன் என்னசெய்யவேண்டும்