பிளாக்கரில் புதிய/பழைய கூகிள்+ வசதிகள்

பல பதிவுகளில் சொன்னது போல, கூகுள் ப்ளஸ் வசதியை கிட்டத்தட்ட தனது எல்லா சேவைகளிலும் அறிமுகப்படுத்தி வருகிறது கூகுள் நிறுவனம். அதில் ஒரு பகுதியாக ப்ளாக்கரில் சமீப காலமாக பல கூகிள் ப்ளஸ் வசதியை கொண்டு வந்தது.

அவைகள்:

1. கூகிள் ப்ளஸ் Share பட்டன்

2.  கூகிள் ப்ளஸ்ஸில் இணைகிறது ப்ளாக்கர்

3. கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages

4. கூகிள்+ பக்கத்தில் வாசகர்களை அதிகரிக்க..

5. ப்ளாக்கரில் புதிய கூகுள் ப்ளஸ் வசதி

இந்த பழைய வசதிகளுடன் சேர்த்து தற்போது ப்ளாக்கரில் Google+ என்னும் தனி Tab-ஐ வைத்துள்ளது. நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்கள் வைத்திருந்தால், ஒவ்வொன்றிருக்கும் தனித் தனியாக இருக்கும்.

 நீங்கள்  ப்ளாக்கர் ப்ரொபைல் பயன்படுத்தி வந்தால், கூகிள் ப்ளஸ் ப்ரொபைலுக்கு Upgrade பண்ண சொல்லும். கூகிள் ப்ளஸ் ப்ரொபைல் பற்றித் தான் மேலே சொன்ன இரண்டாவது பதிவில் பார்த்தோம்.

கூகுள் ப்ளஸ் ப்ரொபைலுக்கு மாறியதும் பின்வருமாறு காட்டும்.

உங்கள் கூகுள் ப்ளஸ் கணக்கையும், நீங்கள் உருவாக்கிய கூகுள் ப்ளஸ் பக்கங்களையும் காட்டும். இது மேலே சொன்ன ஐந்தாவது பதிவில் உள்ள வசதியாகும்.

அதாவது, நாம் புதிய பதிவு பதிவிட்ட பிறகு நமது
தளத்திற்கு செல்லாமலேயே, டாஸ்போர்ட் பகுதியில் இருந்தே பதிவுகளை கூகுள்
ப்ளஸ் தளத்தில் பகிரலாம். 



இதனை எங்கே? பகிர வேண்டும் என்பதை தான் இங்கே தேர்வு செய்ய வேண்டும். உங்கள் தள கூகுள் ப்ளஸ் பக்கத்தையோ அல்லது உங்கள் கூகுள் ப்ளஸ் கணக்கையோ தேர்வு செய்யலாம்.


இந்த வசதி வேண்டாம் என்றால், கீழே Share my posts from this account to Google+ என்ற இடத்தில் உள்ள டிக்கை நீக்கிவிடுங்கள்.


கூகுள் ப்ளஸ்ஸில் நாம் பகிர்வதை எத்தனை நபர்கள் +1 மற்றும் Share செய்துள்ளார்கள் என்பதை Google+ Ripples வசதி மூலம் நாம் பார்க்கலாம். அது பற்றி கூகுள் ப்ளஸ்ஸில் யூட்யூப் பார்க்கலாம் பதிவில் பார்க்கலாம்.

மேலும் பல வசதிகளை கொண்டுவரப்போவதாக ப்ளாக்கர் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:  ப்ளாக்கரில் கூகுள் ப்ளஸ் கம்மென்ட் பாக்ஸ் வசதி

12 thoughts on “பிளாக்கரில் புதிய/பழைய கூகிள்+ வசதிகள்”

  1. இருந்தாலும் blogger profile தான் நல்ல advertisement என்னைய மாதிரி நிறைய இடங்கள்ல comments போடுற ஆளுகளுக்கு 😀

    பகிர்வுக்கு நன்றி நண்பா!

  2. blogger profile தான் உடனே திறக்கிறது. google plus ரொம்ப நேரம் ஆவதால் நான் இன்னும் profile, Google + க்கு மாற்றவில்லை.

    சில தளங்களில் இரண்டுமே வைத்துள்ளார்களே…? எப்படி என்று ஒரு பதிவு எழுதவும்.

    நன்றி.
    (த.ம. 3)

  3. இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.எனது கேள்வி என்னவென்றால் Bloggerன் Home Page அல்லாத ஒரு புதிய பக்கத்தில் எவ்வாறு பல பதிவுகளை இடுவது.

    http://hacking4200.blogspot.com/

    இது தான் எனது வலைத்தளம்

  4. பேஸ் புக்-ஐ வீழ்த்த பல வசதிகளை கொண்டுவருகிறார்கள் .!!

    யார் ஜெயிக்கிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்போம் !

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

  5. நண்பா நீ ரொம்ப ஸ்பீட் நேற்று தான் வந்தது வசதி அதுக்குள்ள பதிவு எழுதி இருக்க ரொம்ப நன்றி