பிட்.. பைட்… மெகாபைட்….! (31/10/2012)

விண்டோஸ் 8

இந்த வாரம் (31/10/2012) தொழில்நுட்ப உலகில் பல புதிய வரவுகளும், முக்கிய நிகழ்வுகளும் நடந்துள்ளன. அவற்றைப்பற்றிய சிறு தகவல்களை இன்றைய “பிட்.. பைட்… மெகாபைட்….!” பகுதியில் பார்ப்போம்.

விண்டோஸ் எட்டு – Windows 8:

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை விண்டோஸ் எட்டு இயங்குதளம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. முதல் மூன்று நாட்களில் விண்டோஸ் 8 Upgrade மட்டும் நான்கு மில்லியன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

(அதில் நானும் ஒருவன். விண்டோஸ் 8 சிறப்பம்சங்கள் மற்றும் சிறப்பு சலுகைகள் பற்றி இறைவன் நாடினால் விரிவாக வேறொரு பதிவில் பார்ப்போம்.)

இதுவரை வந்துள்ள விண்டோஸ் பதிப்புகளில் விண்டோஸ் 7 தான் அதிக விற்பனையாகியுள்ளது. 2009 ஆம் ஆண்டு அறிமுகமான விண்டோஸ் 7, மூன்று வருடங்களில் 670 மில்லியன்கள் விற்பனையாகியுள்ளது.

ஆன்ட்ராய்ட் 4.2:

கூகுள் தனது ஆன்ட்ராய்ட் ஜெல்லிபீனில் 360 டிகிரி கோணங்களில் படம் எடுக்கும் வசதி, டேப்லட்களிலும் கணினிகளில் இருப்பது போல பல்பயனர் (Multi-user) வசதி, கம்பியில்லா தந்தி (Wireless) மூலம் ஆன்ட்ராய்ட் திரையில் தெரிவதை (கம்பியில்லா தந்தி வசதிக் கொண்ட) டிவியில் தெரியவைக்கும் வசதி போன்ற புதிய வசதிகளுடன் சேர்த்து 4.2 பதிப்பை  வெளியிட்டுள்ளது.

மூன்று அளவுகளில் கூகுள் நெக்ஸஸ்:

கூகுள்  நிறுவனம் தற்போது மூன்று புதிய நெக்ஸஸ் சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மூன்றிலும் ஆன்ட்ராய்ட் ஜெல்லிபீன் 4.2 இயங்கும்.

Nexus 4 – LG நிறுவனத்துடன் இணைந்து 4 இன்ச் அளவிலான ஸ்மார்ட்போன்.

Nexus 7 – Asus நிறுவனத்துடன் இணைந்து 7 இன்ச் அளவிலான (புதிய) டேப்லட்.

Nexus 10 – Samsung நிறுவனத்துடன் இணைந்து 10 இன்ச் அளவிலான டேப்லட்.

இதில் Nexus 7 விற்பனை மாதம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் விற்பனையை நெருங்கிவருவதாக Asus நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆன்ட்ராய்டில் மால்வேர் ஆதிக்கம்:

கடந்த ஒரு வருடத்தில் ஆன்ட்ராய்ட் சாதனங்களில் மால்வேர் எண்ணிக்கை 580 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் அதிகமானவை கூகுள் ப்ளே அல்லாத வேறு தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டவைகளாகும்.

அன்றும், இன்றும்:வாரம் ஒரு கேள்வி :

நீங்கள் எந்த இயங்குதளம் (Operating System) பயன்படுத்துகிறீர்கள்?

என் பதில்: விண்டோஸ் 8.

உங்கள் பதில்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

டிஸ்கி: நமது சிறப்பு நிருபர் விண்டோஸ் எட்டில் மூழ்கிவிட்டதால் அதிக செய்திகளை சேகரிக்க முடியவில்லை.

Log Out!
இதையும் படிங்க:  பிட்.. பைட்... மெகாபைட்....! (16/01/2013)

27 thoughts on “பிட்.. பைட்… மெகாபைட்….! (31/10/2012)”

  1. எல்லாரும் windows7 தான் அதிகபட்சம் பயன்படுதுவதாய் சொல்லுவாங்க,,,நீங்க பயன்படுத்தறது நேர்மையான சாப்ட்வேர்ரான்னு கேட்க வேண்டியது தானே

  2. மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

    //இதில் அதிகமானவை கூகுள் ப்ளே அல்லாத வேறு தளங்களில்…//

    இதன் அர்த்தம், குறைவானவை கூகுள் ப்ளேயில் உள்ளது.

    🙂 🙂 🙂