பிட்.. பைட்… மெகாபைட்….! (29/05/2013)

இந்த வாரம் (29/05/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும்,
அறிமுகங்களையும் இன்றைய “பிட்.. பைட்… மெகாபைட்….!” பகுதியில்
பார்ப்போம்.

ட்விட்டரில் இரண்டடுக்கு பாதுகாப்பு:

அதிகமான ட்விட்டர் கணக்குகள்ஹேக் செய்யப்படுவதையொட்டி ட்விட்டர் தளம் இரண்டடுக்கு பாதுகாப்பு (2 step Verification) முறையை கொண்டுவரப்போவதாக கடந்த மாத பிட்..பைட்..மெகாபைட் பகுதியில் பார்த்தோம் அல்லவா? தற்போது அதனை கொண்டுவந்துள்ளது ட்விட்டர் தளம்.

இதனை செயல்படுத்த ட்விட்டரில் Settings => Account பகுதிக்கு சென்று, Account Security என்ற இடத்தில் Add a phone என்பதை க்ளிக் செய்து உங்கள் மொபைல் என்னைக் சேர்க்க வேண்டும்.

பிறகு அதே பக்கத்தில் “Require a verification code when I sign in.” என்பதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு ஒவ்வொரு முறை ட்விட்டரில் நீங்களோ அல்லது வேறு யாரோ உள்நுழைந்தால் நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணுக்கு எஸ்எமெஸ் வரும். அதில் உள்ள பாதிகாப்பு எங்களைக் கொடுத்தால் மட்டுமே உள்ளே போகமுடியும்.

கூகுள் நடத்தும் பாடம்:

கூகுள் தேடுதல் பற்றிய நுட்பங்களைத் தெரிந்துக் கொள்வதற்காக Power Searching with Google என்னும் ஆன்லைன் பாட வகுப்பை முன்பு கூகுள் நடத்தியது அல்லவா? அதுபோன்று தற்போது கூகுள் மேப், கூகுள் எர்த்பற்றிய பாட வகுப்பை நடத்துகிறது கூகுள். வரும் ஜூன் 10 முதல் ஜூன் 24 வரைநடக்கும் இந்த பாடத்தில் சேர இங்கே க்ளிக் செய்து உங்கள்மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துக் கொள்ளுங்கள். பாடத்தை முடிப்பவர்களுக்கு சான்றிதழும் தருகிறது.

Samsung Galaxy S4 – பத்து மில்லியன் விற்பனை:

கடந்த மாதம் விற்பனைக்கு வந்த சாம்சங் நிறுவனத்தின் Galaxy S4 மொபைல் ஒரு மாதத்தில் பத்து மில்லியன் போன்கள் விற்று சாதனைப் படைத்துள்ளது. (இது கடைகள் மற்றும் மொபைல் ஆப்பரேட்டர்களுக்கு விற்கப்பட்ட போன்கள் ஆகும், வாடிக்கையாளர்கள் விலைக்கு வாங்கிய எண்ணிக்கை இல்லை)

Samsung Galaxy S4 Mini:

Samsung நிறுவனம் வரும்ஜூன் 20-ஆம் தேதி லண்டனில் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. இதில் சில புதிய மொபைல்களை அறிமுகபடுத்தவுள்ளது. அநேகமாக சாம்சங் கேலக்ஸி S4 மினி அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடைக்குறிப்பு: நேரமில்லாத காரணத்தால் அதிக செய்திகளை எழுத முடியவில்லை.

இந்த வார “சிரிப்பு” படம்:

Log Out!
இதையும் படிங்க:  பிட்.. பைட்... மெகாபைட்....! (10/10/2012)

1 thought on “பிட்.. பைட்… மெகாபைட்….! (29/05/2013)”