இந்த வாரம் (28/11/2012) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய “பிட்..பைட்…மெகாபைட்….!” பகுதியில் பார்ப்போம்.
விண்டோஸ் 8 – 40 மில்லியன் விற்பனை:
மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஒரு மாதத்தில் நாற்பது மில்லியன் விண்டோஸ் 8 காப்பியை விற்றுள்ளது. முதல் மூன்று நாட்களில் நான்கு மில்லியன் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
அதிக வரவேற்பு பெற்ற கூகுள் நெக்சஸ் 4:
கூகுள் நிறுவனம் எல்ஜி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த நெக்சஸ் 4 மொபைலை கடந்த 13-ஆம் தேதி விற்பனைக்கு கொண்டுவந்தது. விற்பனைக்கு வந்த சிலமணி நேரங்களிலேயே அதிகமான நாடுகளில் விற்றுத் தீர்ந்துவிட்டது. அதிலும் ஜெர்மனியில், விற்பனைக்கு வந்து பதினைந்து நிமிடங்களுக்குள் அனைத்தும் விற்றுவிட்டது.
இந்நிலையில் நேற்று மீண்டும் இரண்டாவது விற்பனை தொடங்கியது. அதிகமானவர்கள் மொபைலை கூகுள் ப்ளே தளத்தில் வாங்க முயற்சித்ததால் சிலமணி நேரம் கூகுள் ப்ளே தளம் ஸ்தம்பித்தது.
அவுட்லுக் – 25 மில்லியன் பயனாளர்கள்:
மைக்ரோசாப்டின் மின்னஞ்சல் சேவையான அவுட்லுக்.காம் தளத்தின் செயல்படும் பயனாளர்கள் (Active Users) எண்ணிக்கை 25 மில்லியனைத் தாண்டியுள்ளது. ஹாட்மெயிலை மேம்படுத்தி அறிமுகமான அவுட்லுக் முதல் நாளிலேயே ஒரு மில்லியன் பயனாளர்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
எப்படி ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் சந்தையான கூகுள் ப்ளே தளத்தை பயன்படுத்த கூகுள் கணக்கு வேண்டுமோ? அதே போல விண்டோஸ் 8 அப்ளிகேசன் ஸ்டோரை பயன்படுத்த மைக்ரோசாப்ட் கணக்கு அவசியம் என்பதும் இந்த வளர்ச்சிக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பது என் கணிப்பு.
பேஸ்புக்கில் ஆப்பிள் ஐட்யூன்ஸ்:
கடந்த செப்டெம்பர் மாதம் பேஸ்புக் நிறுவனம் Facebook Gifts என்னும் நண்பர்களுக்கு அன்பளிப்புகளை அளிக்கும் வசதியை (அமெரிக்காவில் மட்டும்) அறிமுகப்படுத்தியது. அதில் தற்போது ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தும் நண்பர்களுக்கு iTunes அன்பளிப்பு கார்டுகளை அனுப்பும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. $10, $15, $25, $50 என்ற விலைகளில் அன்பளிப்பு அளிக்கலாம். மேலும் படங்கள், பாடல்கள், அப்ளிகேசன்கள், விளையாட்டுக்களையும் பரிந்துரைக்கலாம்.
நன்றி தெரிவித்தல்- இன்ஸ்டாக்ராம் சாதனை:
அமெரிக்காவில் கடந்த 22-ஆம் தேதி நன்றி தெரிவித்தல் (Thanksgiving) நாளாகும். அதனையொட்டி அன்று ஒரு நாள் மட்டும் இன்ஸ்டாகிராம் அப்ளிகேசனில் பத்து மில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் பகிரப்பட்டு சாதனைப் படைத்துள்ளது. அதில் அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 226 புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் கூகுள் Street View:
கூகுள் நிறுவனம் இந்தோனேசியாவில் Street View வசதியைக் கொண்டு வருவதற்கான முயற்சியை தொடங்கியுள்ளது. ஆசியக் கண்டத்தில் இது ஒரு பெரிய திட்டமாகும்.
வாரம் ஒரு கார்டூன் (ஹிஹிஹிஹி):
அறியாத் தகவலை அறிந்து கொண்டேன் நன்றி
நல்லதொரு தகவல்கள்..
இந்த வார தகவல்கள் மிகவும் சிறப்பாக இருந்தது.
தகவல்களுக்கு நன்றி
Now I'm one of the big fan of bit byte megabyte……. 🙂
கார்ட்டூன் செம! காலம் அப்படிதான் போய்க்கிட்டிருக்கு.