பிட்.. பைட்… மெகாபைட்….! (27/03/2013)

இந்த வாரம்  (27/03/2013) “பிட்..பைட்..மெகா பைட்” பகுதியில் சற்று வித்தியாசமாக, இன்றைய தேதியை குறிக்கும் விதத்தில் இருபத்தி ஏழு தொழில்நுட்ப குறுஞ்செய்திகளைப் பார்ப்போம்.

 1. கடந்த பிட்..பைட்..மெகா பைட் பகுதியில் சொன்னதுபோல, கூகுள் நிறுவனம் “Google Keep” என்னும் குறிப்பெடுத்துக் கொள்ளும் சேவையை அறிமுகப்படுத்தியது.
 2. கூகுள் நிறுவனம் தனது நெக்ஸஸ் 7 டேப்லட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 15,999 ரூபாய் விலைக் கொண்ட இந்த டேப்லட்டை கூகுள் ப்ளே மூலம் வாங்கலாம்.
 3.  உள்ளரங்க இருப்பிடத்தை (Indoor Locations) அறிய உதவும் WiFiSLAM நிறுவனத்தை ஆப்பிள் கையகப்படுத்தியுள்ளது.
 4. விண்டோஸ் எட்டின் மேம்பட்ட பதிப்பாக விண்டோஸ் ப்ளூ (Windows Blue) இயங்குதளம் அறிமுகமாகவுள்ளது.
 5. மைக்ரோசாப்ட் நிறுவனம் வரும் ஜூன் 26, 27, 28 தேதிகளில் அமெரிக்காவில் Build 2013 என்னும் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. அதில் Windows Blue பற்றி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 6. இனி கூகுள் ப்ளஸ் ப்ரொபைல் படமாக அசையும் அனிமேசன் படங்களை வைக்கலாம்.
 7. அமெரிக்காவில் ஐபோனை ஆன்லைன் மூலம் வாங்கினால் அடுத்த நாளே இலவச டோர் டெலிவரி என்ற குறுகிய கால சலுகையை ஆப்பிள் அறிவித்துள்ளது.
 8. கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோனுக்கான கூகுள் ப்ளஸ் அப்ளிகேஷனை மேம்படுத்தியுள்ளது. இதில் முக்கிய மாற்றமாக Instagram அப்ளிகேசனில் உள்ளது போன்று புகைப்படங்களுக்கு Effect கொடுக்கும் வசதியை கொடுத்துள்ளது.
 9. Social Bookmarking தளமான Digg, கூகுள் ரீடருக்கு மாற்றாக புதிய தளத்தை திறக்கவுள்ளது.
 10.  கூகுள் நிறுவனம் கடந்த வாரம் Digg தளத்தை கூகுள் தேடல் முடிவுகள் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டது. Digg தளத்தில் உள்ள ஸ்பேம் முகவரிகளை நீக்குவதற்கு பதிலாக தவறுதலாக Digg தளத்தின் முகவரியை நீக்கிவிட்டதாக கூகுள் மன்னிப்புக்கேட்டது. (இந்த செய்திக்கும், முந்தைய செய்திக்கும் தொடர்பில்லை, நம்புங்க!)
 11. கடந்த வியாழக்கிழமை ட்விட்டர் தளம் ஏழு வருடத்தை நிறைவு செய்துள்ளது.
 12. ஒவ்வொரு ஆப்பிள் சாதனங்களுக்கும் பிரத்யேகமான எண்கள் உண்டு. அதற்கு Universal Device Identifier (UDID) என்று பெயர். வரும் மே ஒன்றாம் தேதி முதல், இந்த எண்களை அணுகும் அப்ளிகேசன்களை அனுமதிக்கப் போவதில்லை என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பயனாளர்களின் தனியுரிமைக்கு நன்மை ஆகும்.
 13. யூட்யூப் தளத்தில் தற்போது மாதம் நூறு கோடி பயனாளர்கள் வருகை தருவதாக கூகுள் அறிவித்துள்ளது.
 14. ஆப்பிள் மேக் கணினிகளில் Yontoo என்னும் Trojan வைரஸ் வேகமாக பரவியது. இது நீங்கள் பார்க்கும் தளங்களில் விளம்பரங்களை, அந்த தளத்தில் இருப்பது போலவே நிறுவிவிடும். தற்போது ஆப்பிள் இயங்குதளத்தை அப்டேட் செய்துள்ளது.
 15. ஆப்பிள் கணக்கை (Apple ID) பயனாளர்களின் ஐடி மற்றும் பிறந்த தேதி
  மட்டும் மட்டும் தெரிந்தாலே யார் வேண்டுமானாலும் பாஸ்வோர்டை மாற்ற முடியும்
  என்ற பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது. மிகுந்த சர்ச்சைக்கு பிறகு இதனை சரி
  செய்துள்ளது ஆப்பிள்.
 16. ஐபோனின் அடுத்த பதிப்பான iPhone 5S வரும் ஜூன் மாதத்திலும், குறைந்தவிலை ஐபோன் செப்டெம்பர் மாதத்திலும் வெளிவரலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
 17. கடந்த வருடம் மட்டும் பேஸ்புக் கேம்ஸ் டெவலப்பர்கள் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளனர்.
 18. பேஸ்புக் ப்ரொபைலில் About பகுதியில் “Games Collections” என்ற புதிய பகுதி வரவிருக்கிறது. இதில் நாம் விளையாடிய, லைக் செய்த பேஸ்புக்விளையாட்டுக்களை காட்டும்.
 19. பேஸ்புக் நிறுவனம் வருமானம் ஈட்டபல்வேறு முயற்சிகளை கையாள்கிறது. Newsfeed பகுதியில் Sponsored Stories என்ற பெயரில் பேஸ்புக் பக்கங்களின் விளம்பரம் வருமல்லவா? இனி இணையதள முகவரிகளும் விளம்பரமாக வரவுள்ளது.
 20. கூகுள் ரீடர் போன்று நமக்கு பிடித்த தளங்களின் பதிவுகளை படிக்க உதவும் Flipboard அப்ளிகேசன் 500 மில்லியன் பயனாளர்களை தாண்டியுள்ளது. இதை முன்னிட்டு ஐஒஎஸ் அப்ளிகேஷனை மட்டும் மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாமும் ஆன்லைனில் மின்னிதழ் உருவாக்கும் வசதியைக் கொடுத்துள்ளது.
 21. ப்ளாக்கர் போன்று, சற்று வித்தியாசமாக, வலைப்பதிவு உருவாக்க உதவும் பிரபலமான Tumblr தளத்தில் இதுவரை நூறு மில்லியன் வலைப்பதிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 44.6 பில்லியன் பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.
 22. ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களை அடுத்து கூகுள் நிறுவனம் சொந்தமாக ஆண்ட்ராய்ட் SmartWatch தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 23. அமெரிக்க நிறுவனம் ஒன்று நடத்திவரும் கருத்துக்கணிப்பில், வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தை பெற்றுள்ளது. நோக்கியா இரண்டாவது இடத்தையும், சாம்சங் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.
 24. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது கடைகளை2015-ற்குள் மும்மடங்காக விரிவுப்படுத்தவுள்ளது.
 25. சில புதிய வசதிகளுடன் கூகுள் க்ரோம் புதிய பதிப்பாக Chrome 26 வெளிவந்துள்ளது.
 26. கூகுள் நிறுவனம் தயாரித்த உயர்தொழில்நுட்ப கண்ணாடியை இலவசமாகப் பெற அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு மட்டும் போட்டி வைத்தது. அந்த போட்டி முடிந்த நிலையில் வெற்றிபெற்றவர்களுக்கு விரைவில் கண்ணாடியை அனுப்பவுள்ளது.
 27. Iron Man படத்தின் மூன்றாம் பாகம் இவ்வருடம் வெளிவருவதை முன்னிட்டு, Gameloft நிறுவனம் இன்று மொபைல் விளையாட்டை  மொபைல் விளையாட்டின் ட்ரைலரை வெளியிடவுள்ளது வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 25-ஆம் தேதி விளையாட்டு வெளியாகிறது.
இதையும் படிங்க:  பிட்.. பைட்... மெகாபைட்....! (02/01/2013)

இந்த வார “சிரிப்பு” படம்:

Log Out!

9 thoughts on “பிட்.. பைட்… மெகாபைட்….! (27/03/2013)”

 1. தமிழில் சமீப தொழில்நுட்ப செய்திகளை அறிய பயனுள்ள பதிவுகளை தொடர்ந்து தருவது சிறப்பு .

  நன்றி நண்பா .