பிட்.. பைட்… மெகாபைட்….! (26/09/2012)

இந்த வாரம் (26/09/2012) இணையத்தில் அதிகம் பேசப்பட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

எச்சரிக்கை: மைக்ரோசாப்ட் பெயரில் மோசடி:

தற்போது மைக்ரோசாப்ட் பெயரில் ஒரு ஏமாற்று ஈமெயில் வந்துக் கொண்டிருக்கிறது. privacy@microsoft.com என்ற முகவரியில் இருந்து வரும் அந்த ஈமெயில், விண்டோஸ் அப்டேட் செய்யப்படவில்லை எனவும், அதற்கு ஈமெயில் முகவரியை மைக்ரோசாப்டுடன் இணைக்க வேண்டும் எனவும் சொல்லும். அப்படி வந்தால் அதனை உடனே அழித்துவிடுங்கள்.

Google News – பத்து வயது:

இணையதளங்களில் வெளிவரும் செய்திகளை திரட்டி தரும் கூகுள் சேவையான “Google News” தளம் தொடங்கப்பட்டு கடந்த 22-ஆம் தேதியுடன் பத்து வருடங்கள் நிறைவடைந்துள்ளது. 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கப்பட்ட “கூகுள் செய்திகள்” தற்போது 72 பதிப்புகளுடன், 30 மொழிகளில் இயங்குகிறது. மேலும் இது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தளங்களில் இருந்து செய்திகளை சேகரிக்கிறது.

இந்தியாவை ஏமாற்றிய ஆன்ட்ராய்ட்:

ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களில் பணம் கட்டி வாங்கும் அப்ளிகேசன்களும் உண்டு என்பது நமக்கு தெரியும். இது போன்ற அப்ளிகேசன்களால் மென்பொருள் உருவாக்குனர்கள் (App Developers) பணம் ஈட்ட முடியும். ஆனால் குறிப்பிட்ட சில நாடுகளில் உள்ளவர்கள் மட்டுமே இது போன்ற அப்ளிகேசன்களை Google Play தளத்தில் விற்க முடியும். கடந்த 22-ஆம் தேதி இந்தியாவை அந்த நாடுகளின் பட்டியலில் சேர்த்தது கூகுள். இந்திய மென்பொருள் உருவாக்குனர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், சில மணி நேரங்களில் இந்தியாவை அந்த பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது. இது பற்றி கூகுள் எந்த பதிலையும் சொல்லவில்லை.

அந்த  நாடுகளின் பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.


ஆப்பிள் ஐந்தும், ஐஓஎஸ் ஆறும்:

ஆப்பிளின் சமீபத்திய அறிமுகமான ஐபோன் 5 மொபைல்கள் முதல் மூன்று நாட்களில் ஐந்து மில்லியன் மொபைல்கள் விற்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது. மேலும் இதுவரை நூறு மில்லியனுக்கும் அதிகமான ஐபோன் மொபைல்கள் ஐஓஎஸ் 6 பதிப்புக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்சங் சாப்பிடப் போகும் ஜெல்லி பீன்:

சாம்சங் மொபைலின் சமீபத்திய அறிமுகமான Samsung Galaxy S3 மொபைல்களுக்கு, ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பான Android 4.1 ஜெல்லி பீன் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது போலன்ந் (Poland) நாட்டு பயனாளர்கள் இதனை பெறலாம். மற்ற நாடுகளிலும் விரைவில் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Samsung Galaxy S3 மட்டுமின்றி,  Galaxy S2, Galaxy S2 LTE, Galaxy Beam,Galaxy Ace 2 ஆகிய மொபைல்களுக்கும், Galaxy Tab 2 7.0, Galaxy Tab 7.0 Plus, Galaxy Tab 2 10.1, Galaxy Note 10.1. ஆகிய டேப்லட்களுக்கும் விரைவில் வரவிருக்கிறது.

இதையும் படிங்க:  பிட்.. பைட்... மெகாபைட்....! (05/06/2013)

மீண்டும் களமிறங்கும் மைஸ்பேஸ்?

பேஸ்புக் தளம் வருவதற்கு முன்னால் முன்னணியில் இருந்த சமூக வலைத்தளம் மைஸ்பேஸ் (Myspace.com). பேஸ்புக் வந்த பிறகு அந்த தளம் ஆட்டம் கண்டது. 2005-ஆம் ஆண்டு 580 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட மைஸ்பேஸ் தளம், கடந்த வருடம் 35 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. இந்த தளத்தை Specific Media நிறுவனத்துடன் இணைந்து வாங்கியது, அமெரிக்க பாடகர் மற்றும் நடிகரான ஜஸ்டின் டிம்பர்லேக் (Justin Timberlake).

தற்போது மைஸ்பேஸ் தளம் இசையை மையமாக வைத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. https://new.myspace.com/ என்ற தளத்தில் உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்தால் உங்களுக்கு அழைப்பிதல் வரும். அப்படி வந்தால் நீங்கள் புதிய தோற்றத்தைப் பெற முடியும்.

வாரம்  ஒரு கேள்வி:

உலவியை திறந்ததும் நீங்கள் முதலில் பார்ப்பது எந்த தளம்?

உங்கள் பதிலை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Log Out!

20 thoughts on “பிட்.. பைட்… மெகாபைட்….! (26/09/2012)”

 1. >>>இந்தியாவை ஏமாற்றிய ஆன்ட்ராய்ட்<<<

  இந்தியாக்காரங்க இதுக்கு லாயக்குபட மாட்டாங்கன்னு கூகிள்ளுக்கும் தெரிஞ்சிருக்கு பாருங்க! 🙂

 2. >>>உலவியை திறந்ததும் நீங்கள் முதலில் பார்ப்பது எந்த தளம்<<<

  நான் என்னுடைய உலவியில் ஹோம் பேஜ்ஜாக என்னுடைய தளத்தைதான் வைத்துள்ளேன்! இதைத்தவிர்த்து முதலில் ஓபன் செய்வது நியூஸ் தளம் தான்! 🙂

 3. தமிழில் பிளாக்கர் நண்பன் மிகச்சிறந்த தளங்களுள் ஒன்று என்பதை இன்றும் நிருபித்துவிட்டது,,

  தொடருங்கள் சகோ,,,

 4. //உலவியை திறந்ததும் நீங்கள் முதலில் பார்ப்பது எந்த தளம்?//கூகிள் தான்

  வாரந்தோறும் பிட்.. பைட்… மெகாபைட்….! வருவதுபோல தெரிகிறதே இது தொழில்நுட்ப கொத்துபரோட்டா

 5. \எச்சரிக்கை: மைக்ரோசாப்ட் பெயரில் மோசடி\

  ஹிஹி… நாங்க ஏமாற மாட்டோம்ல..(அதான் பிளாகர் நண்பன் உ ஷார் சிக்னல் கொடுத்துட்டார்ல!)

  \இந்தியாவை ஏமாற்றிய ஆன்ட்ராய்ட்\
  ஏமாற்றியது கூகிள் தானே??

  \ வாரம் ஒரு கேள்வி: உலவியை திறந்ததும் நீங்கள் முதலில் பார்ப்பது எந்த தளம்?\
  இது இரண்டாவது கேள்விங்க…
  முதல் கேள்வி: \மீண்டும் களமிறங்கும் மைஸ்பேஸ்?\

  \உலவியை திறந்ததும் நீங்கள் முதலில் பார்ப்பது எந்த தளம்?\
  வேற யார்ங்க? நம்ம கூகிள் அண்ணாச்சியைத் தான்

 6. இந்தியாவை யார் தான் ஏமாற்றவில்லை …..

  //உலவியை திறந்ததும் நீங்கள் முதலில் பார்ப்பது எந்த தளம்?// கூகுள் எண்டு உண்மையைச் சொல்லவா …..

  //
  பிட்.. பைட்… மெகாபைட்….! // #டவுட்டு

  என் டவுட்டை கண்டுபிடித்து தீர்த்து வைப்பவர்களுக்கு… ஒரு கமென்ட் அவர்கள் தளத்திற்கு வந்து இலவசமாக இடப்படும்

 7. முதலில் கூகிள் ஹோம் ஃபேஜ் ஆக செட் செய்யபட்டுள்ளது.அடுத்துபார்க்கும் தளம் நம்மஇன்ட்லி தளம் தான்.ஒவ்வொரு தலைப்ப படிச்சு பிடித்த தளத்தை நியூடேப்பில் திறப்பது.கடைசியாக ஒவ்வொரு தளமா
  படிக்க வேண்டியதுதான்.

 8. தகவல்களுக்கு நன்றி சகோ.

  கூகுள் கூகுள் கூகுள் கூகுள் கூகுள் கூகுள். பயன்படுத்தும் அனைத்திலும் கூகுள் தான். :-)))))

 9. பகிர்வுக்கு நன்றிங்க

  உலவியை திறந்ததும் நான் பார்க்கும் முதல் தளம் எனது ஜி மெயில் கணக்கு

  பிறகு எழுத்தாளர்கள் ஜெயமோகன், சாரு நிவேதிதா ஆகியோரின் தளங்களை…

 10. நல்ல பயன்னுள்ள தகவல்……உங்கள் பகிர்வுக்கு நன்றி……..

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

 11. சாம்சங் அப்டேட்டும் ஐபோன் பத்தியும் ஒரு போஸ்ட் போடலாம்ன்னு இருந்தேன் அதுக்குள்ள நீங்களே போட்டு விடீங்க….