பிட்.. பைட்… மெகாபைட்….! (24/10/2012)

கடந்த வார ‘பிட்.. பைட்… மெகாபைட்….!’ பகுதி செய்திகளில் சிலவற்றின் Follow-Up செய்திகளையும், ஆப்பிள் பற்றிய ஸ்பெசல் செய்திகளையும், மேலும் சில இணைய செய்திகளையும் இந்த வாரம் பார்ப்போம்.

இந்த வாரம் ஆப்பிள் ஸ்பெஷல்…!

ஆப்பிள் ஐபேட் மினி (Apple iPad Mini):

கடந்த இரு வாரங்களாக சொன்னது போல ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் சாதனத்தின் சிறிய அளவாக iPad Mini-யை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. 7.87 இன்ச் அளவு திரை, 5MP கேமரா, HD video ஆகியவற்றைக் கொண்ட iPad Mini 16GB, 24GB, 32GB ஆகிய கொள்ளளவுகளில் கிடைக்கும். மேலும் இதன் விலை 329 அமெரிக்க டாலர்கள் ஆகும். வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து முன்பதிவு செய்யலாம்.

இது  மட்டுமின்றி iBook 3, 4th Generation iPad, Ulltra-thin Macbook ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் அறிமுகப்படுத்திய 16GB Nexus 7 டேப்லட் விலை 249 அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் வாங்குவதாக இருந்தால் என்னுடைய விருப்பம் iPad Mini-யாகத் தான் இருக்கும்.

நூறு மில்லியன் ஐபேட்கள்:

ஆப்பிள் ஐபேட் கடந்த 2010-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரண்டரை வருடங்களில் நூறு மில்லியன் ஐபேட்களை விற்பனை செய்துள்ளது. 60 சதவீத ஆப்பிள் சாதனங்களில் ஐஒஎஸ் பயன்படுத்தப்பட்டு வருவதாக Chitika என்னும் விளம்பர நிறுவனம் தெரிவித்துள்ளது.

200 மில்லியன் சாதனங்களில் ஐஒஎஸ் ஆறு:

ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட ஆப்பிள் இயங்குதளமான iOS 6 இதுவரை இருநூறு மில்லியன் ஆப்பிள் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கொள்ளைப்போன ஆப்பிள் ஐபோன்கள், ஐபேட்கள்:

பிரேசில்
நாட்டில் ஏர்போட்டின் சரக்கு பகுதியில் துப்பாக்கி முனையில் இரண்டு
மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபேட்கள்
கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Sony Nexus X – ஒரு புரளியின் உருவாக்கம்:

கடந்த வார பகுதியில் சோனி நிறுவனமும், கூகுளும் இணைந்து Sony Nexus X என்னும் மொபைலை உருவாக்கி வருவதாக படத்துடன் இணையத்தில் செய்தி பரவியது என்று பார்த்தோம் அல்லவா? அது உண்மை இல்லை. அந்த படத்தை உருவாக்கியது பற்றி  Anatomy of a Hoax (ஒரு புரளியின் உடற்கூறியல்) என்ற டம்(ப்)ளர் தளத்தில் இதனை உருவாக்கியவர் விரிவாக சொல்லியுள்ளார்.

WOWZAPP 2012 – Microsoft Hackathon:

மைக்ரோசாப்ட் நிறுவனம் WOWZAPP என்னும் Windows 8 இயங்குதளத்திற்கான  மென்பொருள் உருவாக்கும் போட்டியை (Hackathon) பல்வேறு நாடுகளில் நடத்துகிறது. இந்தியாவில் மட்டும் சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட 14 இடங்களில் இதனை நடத்துகிறது.

இதையும் படிங்க:  பிட்.. பைட்... மெகாபைட்....! (13/02/2013)

இது பற்றிய விவரங்கள்: Microsoft WOWZAPP 2012

 Google Chromebook:

Google நிறுவனம் Samsung நிறுவனத்துடன் இணைந்து க்ரோம்புக் (ChromeBook) என்னும் லேப்டாப்பை முன்பு அறிமுகப்படுத்தியது. தற்போது குறைந்த விலையில் புதிய க்ரோம்புக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை 249 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இது பற்றிய விவரங்கள்: New Samsung Chromebook

நூறு கோடி ஸ்மார்ட்ஃபோன் பயனாளர்கள்:

உலகமெங்கும்  ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நூறு கோடியை தாண்டியுள்ளது. இதன்படி ஏழு பேருக்கு ஒருவர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். இன்னும் மூன்று வருடங்களில் இருநூறு கோடியை த்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளிக்கிழமை  முதல் விண்டோஸ் 8:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான விண்டோஸ் 8 வரும் வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. எந்தெந்த மென்பொருள்கள் விண்டோஸ் எட்டில் வேலை செய்கிறது என்பதை பார்த்த பிறகுதான் மாறுவது பற்றி யோசிக்க வேண்டும்.

வாரம் ஒரு கேள்வி:

நீங்கள் ஐபோன், ஐபேட், ஐபோட், மேக் போன்ற ஆப்பிள் சாதனங்கள் ஏதாவது பயன்படுத்துகிறீர்களா?
 
(நான் பயன்படுத்தியது இல்லை!)

உங்கள் பதிலை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Log Out!

17 thoughts on “பிட்.. பைட்… மெகாபைட்….! (24/10/2012)”

 1. ஸலாம்

  //நீங்கள் ஐபோன், ஐபேட், ஐபோட், மேக் போன்ற ஆப்பிள் சாதனங்கள் ஏதாவது பயன்படுத்துகிறீர்களா? //

  நீங்க இலவசமா வாங்கி கொடுத்தால் தாராளமா யூஸ் பண்ணுவோம் …

  இல்லை …

 2. Until now Nexus 7 32 GB didn't hit the store. It may be unveiled on coming 29th on Android event.

  Ofcourse, some sources telling that 32GB price is 249$. Let we wait and see!

  You are thinking to get android, but now i am thinking to get apple device.

  😀 😀 😀

 3. நீங்கள் ஐபோன், ஐபேட், ஐபோட், மேக் போன்ற ஆப்பிள் சாதனங்கள் ஏதாவது பயன்படுத்துகிறீர்களா?

  Yes. iPod touch 4th genration, iPhone 4S and iPhone 5

 4. நீங்கள் ஐபோன், ஐபேட், ஐபோட், மேக் போன்ற
  ஆப்பிள் சாதனங்கள் ஏதாவது பயன்படுத்துகிறீர்களா?

  இதுவரை அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

 5. நான் இரண்டுமே உபயோகப்படுத்தியுள்ளேன் ,OS ஐ விட Android
  நல்லதாக தெரிகிறது மற்றும் ஆப்பிளை [OS] விட Samsung [Android] போன்
  விலை மிகவும் குறைவு …என் முதல் சாயிஸ் Samsung Android