பிட்.. பைட்… மெகாபைட்….! (24/04/2013)

இந்த வாரம் (24/04/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும்,
அறிமுகங்களையும் இன்றைய “பிட்.. பைட்… மெகாபைட்….!” பகுதியில்
பார்ப்போம்.

Facebook Home

நம்மூரில் “சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது” என்று சொற்றொடர் உண்டு. அது போல பேஸ்புக் நிறுவனம் தனது தொழில்போட்டி நிறுவனமான கூகுள் நிறுவனத்தை அதனுடைய தயாரிப்பான ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை வைத்தே வீழ்த்த “Facebook Home” என்ற ஆண்ட்ராய்ட் மென்பொருளை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் உங்கள் மொபைலை பேஸ்புக் மொபைலாக மாற்றிக் கொள்ளலாம்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் அறிமுகமான இவ்வசதி பல்வேறு எதிர்மறையான கருத்துக்களையே எதிர்கொண்டது. கூகுள் ப்ளே தளத்தில் பயனாளர்கள் இதற்கு கொடுத்த சராசரி மதிப்பு 2.2/5 நட்சத்திரங்கள்.


Facebook Chat Head

Facebook Home-ல் Chat Heads என்னும் வசதியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக். நாம் வேறொரு அப்ளிகேசனில் இருக்கும் போது அதனைவிட்டு வெளியேறாமலேயே பேஸ்புக் நண்பர்களுடன் சாட் செய்யலாம். நமது நண்பர்களின் ப்ரொபைல் படம் வட்டமாக திரையில் தெரியும். அதனை க்ளிக் செய்து சாட் செய்யலாம். முடிந்ததும் மீண்டும் படத்தை க்ளிக் செய்தால் மறைந்துவிடும்.

இந்த வசதியை தற்போது ஐஓஸ், ஆண்ட்ராய்ட் Messenger அப்ளிகேசன்களில் கொண்டுவந்துள்ளது பேஸ்புக்.

Google Now – விரைவில் கணினியில்!

ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீனில் அறிமுகப்படுத்தப்பட்ட Google Now
வசதி விரைவில் கூகுள் முகப்பு பக்கத்தில் இணைக்கவுள்ளது கூகுள் நிறுவனம்.
அதுமட்டுமின்றி ஆப்பிள் ஐபோன், ஐபேட்களில் பயன்படுத்தவும் ஐஒஎஸ் அப்ளிகேசன்
விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது.

50 நாட்டுகளில் கூகுள் மேப் தெருப்பார்வை (Street View)

கூகுள் மேப்பில் Street View வசதி பற்றி அறிந்திருப்பீர்கள். முக்கிய இடங்களை 360 டிகிரியில் நேரில் பார்ப்பது போன்றே பார்க்கலாம். இதுவரை 48 நாடுகளில் இந்த வசதி இருந்தது. தற்போது Hungary, Lesotho ஆகிய நாடுகளில் இந்த வசதியை கொண்டு வந்தவுடன் அந்த எண்ணிக்கை ஐம்பதை தொட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் குண்டுவெடிப்பா?

உலகிலுள்ள பல நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் AP என்ற
Associated Press செய்தி நிறுவனம் கொடுக்கும் செய்திகளைத் தான் பிரசுரிக்கின்றன. (இல்லையென்றால் நம்முடைய நாளிதழ்களில் உலக செய்திகளை பார்க்க முடியாது). இந்த AP நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கு நேற்று ஹேக் செய்யப்பட்டது. அந்த கணக்கு மூலம் “வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டுவெடிப்பு, ஒபாமா காயம்” என்று ட்வீட் செய்துள்ளார்கள். தற்போது அந்த ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 

ட்விட்டரில் இரண்டடுக்கு பாதுகாப்பு

பல்வேறு ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவதைத் தொடர்ந்து ட்விட்டர் தளம் விரைவில் இரண்டடுக்கு பாதுகாப்பு (2 step verification) முறையை கொண்டுவரவுள்ளது.

இதையும் படிங்க:  பிட்.. பைட்.. மெகாபைட்..! (23/10/13)

விற்பனையானது ஃபயர்பாக்ஸ் மொபைல்

Firefox இயங்குதளம் கொண்ட டெவலப்பர்களுக்கான முதல் இரண்டு மொபைல்களை (Keon & Peak) ஸ்பெயின் நிறுவனமான Geeksphone நேற்று விற்பனைக்கு கொண்டு வந்தது. சிலமணி நேரங்களிலேயே அனைத்தும் தீர்ந்துவிட்டது. எத்தனை மொபைல்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.இந்த மொபைல் பொது விற்பனைக்கு வரும் ஜூன் மாதம் வெளியிடப்படுகிறது.


இந்த வார “சிரிப்பு” படம்

Log Out!

16 thoughts on “பிட்.. பைட்… மெகாபைட்….! (24/04/2013)”

  1. பல புதிய தகவல்கள் பேஸ்புக் சிங்கத்தை அதன் குகையில் சந்தித்து சூடு பட்டதே, அதை நீங்கள் உபயோகித்துப் பார்தீர்களா, வொர்த்தா

  2. நல்ல பயனுள்ள தகவல்கள்.
    நன்றி.
    ஒரு சின்ன விண்ணப்பம்.
    google voice வசதியைப் பற்றி ஏதாவது பதிவு போட்டிருக்கிறீர்களா?
    google voice வசதி micro max phone இல் வேலை செய்யுமா?
    எப்படி அதை download செய்வது ,பிறகு எப்படி அதை உபயோகிப்பது போன்ற தகவல்கள் பற்றி கொஞ்சம் விளக்குவீர்களா?

    நன்றி.

  3. நண்பா எனக்கு ஒரு பெரிய சந்தேகம் ஒரு தளத்திற்கு அட்சென்ஸ் வாங்கி வேறு ஒரு தளத்திற்கு அட்சென்ஸ் உபயோகம் செய்யலாமா

    என்னோட பழைய தளத்தில் வாங்கிய அட்சென்ஸ் பாவிபசங்க கட் பண்ணிடாங்க என்ன பண்ணலாம்

    எனக்கு ஒண்ணுமே புரியவில்லை அட்சென்ஸ் தளம் இங்கிலீஷ் தான் ,,,,(அந்த தளத்தில் உள்ள அட்சென்ஸ் விளம்பரத்தில் நான் தான் அதிகமா கிளிக் செய்தேன் அது ஒரு தவற ,அட்சென்ஸ் கேட்ஜெட் மேல பிளிஸ் விளம்பரம் கிளிக் பண்ணுக என்று எழுதி வைத்தேன் இல்ல அது தவற

    எதுனால என் தளம் அட்சென்ஸ் கட் பண்ணி இருப்பாங்க ஒண்ணுமே புரியல கொஞ்சம் சொல்லு நண்பா

    எனக்கு வந்த மெசேஜ் இது தான்

    Hello,

    With our advertising programs, we strive to create an online ecosystem that benefits publishers, advertisers and users. For this reason, we sometimes have to take action against accounts that demonstrate behavior toward users or advertisers that may negatively impact how the ecosystem is perceived. In your case, we have detected invalid activity on your site and your account has been disabled.

    We're limited in the amount of information we can provide about your specific violation. We understand this can be frustrating for you, but we've taken these precautionary measures because intentional violators can use this information to circumvent our detection systems.

    In some cases, publishers can make significant changes to correct the violation and are willing to comply with the AdSense program policies (google.com/adsense/policies). For this reason, we offer an appeals process as an opportunity to work with you to resolve the issue. To help you with the process, we’ve created a list of the top reasons for account closure for you to review before submission at http://support.google.com/adsense/bin/answer.py?answer=2660562. Please be sure to provide a thorough analysis in your appeal, which you can submit at https://support.google.com/adsense/bin/request.py?contact_type=appeal_form and we will follow up accordingly.

    Thanks for your understanding,
    The Google AdSense Team