பிட்.. பைட்… மெகாபைட்….! (21/11/2012)

இந்த வாரம் (21/11/2012) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய “பிட்..பைட்…மெகாபைட்….!” பகுதியில் பார்ப்போம்.

பாலஸ்தீனம் – இஸ்ரேல் – அனானிமஸ்:

பாலஸ்தீனம் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் கொடூர தாக்குதலை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், மீடியாக்கள் அதிகம் கண்டுக்கொள்ளாத நிலையில் அனானிமஸ் ஹேக்கர் குழு பாலஸ்தீன மக்களுக்கு தங்கள் ஆதரவை தந்துள்ளது. #OPISRAEL என்னும் பெயரில் இஸ்ரேல் மீது சைபர் யுத்தம் நடத்திவருகிறது. இந்த ஒரு வாரத்தில்  44 மில்லியன் சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 700-க்கும் மேலான இஸ்ரேல் தளங்களை ஹேக் செய்துள்ள அந்த குழு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய அதிகாரிகளின் (பெயர், மொபைல் எண்கள், முகவரி போன்ற) விவரங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

Nokia Here!

நோக்கியா நிறுவனம் தனது மேப் வசதியை மேம்படுத்தி Here என்னும் புதிய பெயரில் வெளியிட்டுள்ளது. நோக்கியா, ஐபோன், ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான அப்ளிகேசன்களையும் வெளியிட்டுள்ளது. மேலும் here.net என்ற முகவரியிலும் இதனை பயன்படுத்தலாம்.


ஒரு மில்லியன் ஆப்பிள் அப்ளிகேசன்கள்:

ஆப்பிள் நிறுவனத்தின் அப்ளிகேசன் சந்தையான App Store-ல் உள்ள அப்ளிகேசன் & கேம்ஸ்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தொட்டுள்ளது.

நூறு மில்லியன் ஸ்கைப் பதிவிறக்கங்கள்:

ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான ஸ்கைப் அப்ளிகேசன் இதுவரை நூறு மில்லியன் தடவைகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் துல்லியமான ஆடியோ, டேப்லட்களுக்காக சில மாற்றங்கள் என்று அப்ளிகேஷனை மேம்படுத்தியுள்ளது.


Cloud Storage – எப்படி வேலை செய்கிறது?

Cloud Storage எப்படி வேலை செய்கிறது? என்பதனை சிறு சிறு படங்கள் மூலம் தமிழில் எழிதாக விளக்குகிறார் நண்பர் ஸஃபி அவர்கள். அவசியம் பார்க்கவும். இது மட்டுமின்றி தனது வீடியோ சேனலில் மேலும் பல தொழில்நுட்பங்கள் பற்றி தமிழில் விளக்குகிறார்.

வீடியோ சேனல் முகவரி: http://www.youtube.com/user/shafiscast

வாரம் ஒரு கேள்வி:

தமிழ் தட்டச்சுக்கு கணினியில் எந்த மென்பொருள் பயனடுத்துகிறீர்கள்?

என்னுடைய பதில்: Google Tamil Input

Log Out!
இதையும் படிங்க:  பிட்.. பைட்... மெகாபைட்....! (05/12/2012)

11 thoughts on “பிட்.. பைட்… மெகாபைட்….! (21/11/2012)”

 1. தமிழ் தட்டச்சுக்கு கணினியில் எந்த மென்பொருள் பயனடுத்துகிறீர்கள்?

  என்னுடைய பதில்: Google Tamil Input

 2. இப்போதெல்லாம் பெரும்பாலான பிரச்சினைகளில் இணையம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. காஸா பிரச்சினையிலும் இதில் நல்ல தீர்வு கிடைக்க இணையம் உதவட்டும்.

  தமிழ் தட்டச்சுக்கு கணினியில் எந்த மென்பொருள் பயனடுத்துகிறீர்கள்?//

  Google Tamil Input

 3. நேற்று புல்லா கரண்ட் இல்லை அதான் வர முடியலை இன்னைக்கும் அதே நிலை தான் ரொம்ப கொடுமை பன்னுராங்கோ…..நிறைய பேர் கூகிள் ஆண்டவர் தான் use பண்ணுறாங்க போல நானெல்லாம் பிளாக்கர் உலகத்தில் நுழைந்த நாள் முதல் அது தான்…….

 4. தகவல்களுக்கு நன்றிங்க…

  நான் இந்த மாதிரி கமெண்ட்ஸ் போடும் பொழுது NHM
  பயன் படுத்துகிறேன்…

  கூகிள் தமிழ் இன் புட் என்றால் எது?

  அந்த ஜி மெயிலில் தமிழில் டைப் செய்ய கூகிளே வசதி செய்து கொடுத்துள்ளார்களே அதுவா??

  அப்படியென்றால் கூகிள் தமிழ் இன்புட்டை என் ஹெச் எம் போல அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியுமா?

  என் ஹெச் எம்மை விட கூகிள் தமிழ் டைப்பிங் தான் வசதியாக உள்ளது…

  பை த பை..

  ஆமாங்க சின்னமலை…கரண்ட் தான் பயங்கர கொடுமையா இருக்கு…

 5. அது என்ன எல்லாரும் சொல்லி வைத்தார் போல் சொன்னதையே சொல்கிறார்கள்

  Google mail compse
  Google translitrator
  Google translator 🙂