பிட்.. பைட்… மெகாபைட்….! (20/02/2013)

இந்த வாரம் (20/02/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும்,
அறிமுகங்களையும் இன்றைய “பிட்.. பைட்… மெகாபைட்….!” பகுதியில் பார்ப்போம்.


மார்ச் 14-ல் சாம்சங் கேலக்ஸி எஸ் 4?


சாம்சங் கேலக்ஸி எஸ் 3-க்கு அடுத்தபடியாக சாம்சங்கின் முதன்மை மொபைல் S4 வரும் மார்ச் 14-ஆம் தேதி வெளியிடப்போவதாக செய்தி நிலவுகிறது.


ஆப்பிள் ஐவாட்ச்?

ஆப்பிள் நிறுவனம் வளையும் கண்ணாடி போன்ற
சாதனத்தை தயாரித்து வருவதாக நியுயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அநேகமாக இது கையில் அணியக் கூடிய கடிகாரமாக இருக்கலாம் என்றும்
கருதப்படுகிறது. மேலும் இது ஆப்பிள் iOS இயங்குதளத்தில் இயங்கக் கூடியதாக
இருக்கும். அப்படி வந்தால் இதற்கு iWatch என்று பெயர் வைக்கலாம்.சாம்சங் ஸ்மார்ட் வாட்ச்?சாம்சங் நிறுவனம் Galaxy Altius என்னும் பெயரில் ஸ்மார்ட் வாட்ச் உருவாக்கியுள்ளதாகவும், அதன் ஸ்க்ரீன்சாட் என மேலுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

பேஸ்புக், ட்விட்டர், ஆப்பிள் அட்டாக்:

 ஜாவாவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது பற்றியும், அதன் மூலம் ஹேக்கர்கள் தாக்கக் கூடும் என்பதையும் பார்த்தோம் அல்லவா? அந்த ஜாவா பாதிப்பு ஏற்பட்ட தளங்களுக்கு சென்ற ஆப்பிள், பேஸ்புக், ட்விட்டர் பணியாளர்களின் கணினிகள் மூலம் ஹேக்கர்கள் அந்த தளங்களை தாக்கியுள்ளனர். பயனர்களின் கணக்கு திருடப்படவில்லை என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது. தகவல்கள் எதுவும் திருடப்பட்ட ஆதாரம் எதுவுமில்லை என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

அவுட்லுக் – அறுபது மில்லியன்:


மைக்ரோசாப்ட் ஈமெயில் சேவையான அவுட்லுக் ஆறு மாதத்தில் அறுபது மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது. இதற்கு ஹாட்மெயில் பயனாளர்களை அவுட்லுக்கிற்கு மாற சொன்னதும் முக்கிய காரணமாகும். விரைவில் ஹாட்மெயிலில் இருந்து அவுட்லுக் தளத்திற்கு பயனாளர்கள் கட்டாயமாக மாற்றப்படுவார்கள்.

ஸ்கைப் வீடியோ மெசேஜ்:


ஸ்கைப் நிறுவனம் யு.எஸ் , யு.கே நாடுகளில் ஐபோன், ஆண்ட்ராய் அப்ளிகேசன் மூலம் வீடியோ செய்திகளை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. கணினிகளுக்கு ஏப்ரல் மாதம் வரும் என்றும் தெரிவித்துள்ளது. மற்ற நாடுகள் பற்றி எதுவும் சொல்லவில்லை.


Skyfire நிறுவனத்தை வாங்கிய ஒபேரா:


மொபைல் வீடியோ Optimization தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் Skyfire நிறுவனத்தை Opera நிறுவனம் 155 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கையகப்படுத்தியுள்ளது. Skyfire நிறுவனம் மொபைல் உலவி உள்பட மொபைல் அப்ளிகேசங்களையும் உருவாக்கியுள்ளது.


உபுண்டு டேப்லட்:

உபுண்டு நிறுவனம் லினக்ஸ் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு மொபைல்களுக்கான உபுண்டு இயங்குதளம் பற்றிய அறிவிப்பை சில வாரங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. தற்போது டேப்லட்களுக்கான இயங்குதளம் பற்றி அறிவித்துள்ளது. 


முழு விவரங்களைப் பார்க்க: http://www.ubuntu.com/devices/tablet


இந்த வார “சிரிப்பு” படம்:


Log Out!

11 thoughts on “பிட்.. பைட்… மெகாபைட்….! (20/02/2013)”

  1. எனது பிளாக்கில் open செய்தால் The Website Ahead Contains Malware என்று. வருகிரது இதை எப்படி சரி செய்வது Please help me..
    My Blog:www.rajaananth25.blogspo.com
    my ID :rajaananth25@gmail.com

  2. மிக சிறப்பான டெக் தகவல்கள் அடங்கிய பதிவு என்று நான் போட்டால் அது டெம்ப்ளேட் கம்மேன்ட்டா # டவ்ட்டு