பிட்.. பைட்… மெகாபைட்….! (19/09/2012)

ஆப்பிள் ஐபோன் அறிமுகம், இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரை தாக்கும் மால்வேர், Snapseed அப்ளிகேஷனை கூகுள் வாங்கியது ஆகிய செய்திகள் இந்த வார இணைய உலகில் முக்கிய இடங்களைப் பெற்றுள்ளது.
 
ஐபோன் 5 (iPhone 5):

ஆப்பிள் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த வாரம் ஐபோனின் முந்தைய பதிப்பான iPhone 4S-ஐ விட அளவில் பெரியதாகவும், மேலும் சில வசதிகளுடனும் ஐபோன் 5-ஐ அறிமுகப்படுத்தியது. ஒரே நாளில் இரண்டு மில்லியன் முன்பதிவுகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. இதுமட்டுமின்றி, கடந்த திங்கட்கிழமை ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு முதன் முறையாக 700 அமெரிக்க டாலரை தொட்டது. 2007-க்கு பிறகு இந்த மாதம் தான் கூகுள் நிறுவன பங்கு மதிப்பு 700 அமெரிக்க டாலரை தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி (Samsung Galaxy) S4???:

சாம்சங் மொபைல் நிறுவனத்தின் பெரிய தயாரிப்பான Samsung Galaxy S வரிசையில் அடுத்ததாக Samsung Galaxy S4 அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இணையத்தில் செய்தி பரவியது.  தற்போதைய 4.8 இன்ச் திரையளவைவிட சற்று கூடுதலாக 5 இன்சாக வரவுள்ளது எனவும் கூறப்பட்டது. ஆனால் சாம்சங் நிறுவனம் இதனை மறுத்துள்ளது.

கூகுளை வீழ்த்திய பேஸ்புக்:

அலெக்ஸா தளம் இணையதளங்களின் தரவரிசையை பட்டியலிட்டு வருகிறது. இதில் நெடுங்காலமாக முதல் இடத்தில் இருந்த கூகிளை வீழ்த்தி தற்போது முதலிடத்தைப் பெற்றுள்ளது பேஸ்புக் தளம். நாடுவாரியாக பிரிக்கும்போது, அமெரிக்காவில் கூகிள் தான் இன்னும் முதலிடத்தில் உள்ளது.

கூகுள்  ப்ளஸ் 400 மில்லியன் பயனாளர்கள்:

கூகுளின் சமூக இணையதளமான கூகுள் ப்ளஸ் இந்த வாரம் 400 மில்லியன் பயனாளர்களைத் தொட்டிருக்கிறது. கூகுள் ப்ளஸ் தளம் பொதுவில் வந்து ஒரு வருடம் தான் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை நிலவரப்படி பேஸ்புக் தளத்தில் 955 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை தாக்கும் மால்வேர்:

தற்போது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலவியில் மால்வேர் உள்ள தளங்களுக்கு சென்றால், நமது கணினியை எளிதாக அந்த மால்வேர் தாக்கி விடும். தற்போது பெரும் பிரச்சனையாக இருக்கும் இந்த பாதுகாப்பு குறைபாட்டின் காரணமாக மைக்ரோசாஃப்ட் புதிய கருவியை (சிறிய மென்பொருள்) உருவாக்கியுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தும் அனைவரும் அவசியம் இதனை நிறுவிக் கொள்ளுங்கள்.

பதிவிறக்கம் செய்ய: Enhanced Mitigation Experience Toolkit v3.0

என்னை  பொருத்தவரை Internet Explorer உலவியை தவிர்ப்பதே நல்லது. ஃபயர்ஃபாக்ஸ் அல்லது க்ரோம் உலவியை பயன்படுத்தலாம்.

Instagram Vs Snapseed:

இதையும் படிங்க:  பிட்.. பைட்... மெகாபைட்....! (19/12/2012)

புகைப்படங்களை அழகாக்க உதவும் Instagram மென்பொருளை பேஸ்புக் வாங்கியது பற்றி தெரியும். அதற்கு போட்டியான Snapseed என்னும் அப்ளிகேஷனை உருவாக்கிய NIK Software நிறுவனத்தை கூகுள் வாங்கியுள்ளது. இதன் மூலம் Snapseed அப்ளிகேஷனை மேலும் மெருகூட்டி கூகிள் அறிமுகப்படுத்தும் என நம்பலாம்.

இந்த வார வீடியோ (விளம்பரம்):

கூகுள் க்ரோம் உலவியில் ஹிஸ்டரி மற்றும் குக்கீஸ்களை அழிப்பது பற்றிய வீடியோ.

Log out!

14 thoughts on “பிட்.. பைட்… மெகாபைட்….! (19/09/2012)”

  1. செய்திகளுக்கு நன்றிங்க…

    நான் கூகிளில் இருந்து விலகி இப்பொழுது ஃபேஸ் புக்கை அதிகம் பயன் படுத்துவதால் தான் ஃபேஸ் புக்கால் கூகிளை முந்த முடிந்துள்ளதாக தெரிகிறது… ஹி ஹி!!! இதை நான் ஒரு ஜாலிக்காக சொல்லியிருந்தாலும் இதில் ஒரு உண்மை மறைந்துள்ளது :))

  2. சன் டிவியில் நியூஸ் படிக்க ஆள் தேவையாம் போறிங்களா நண்பா .p

    தொழில் நூட்ப செய்திகளை ஒரே இடத்தில் பகிர்தமைக்கு எங்கள் சங்கத்தின்

    சார்பாக வாழ்த்துக்கள்

  3. //அதற்கு போட்டியான Snapseed என்னும் அப்ளிகேஷனை உருவாக்கிய NIK Software நிறுவனத்தை கூகுள் வாங்கியுள்ளது. இதன் மூலம் Snapseed அப்ளிகேஷனை மேலும் மெருகூட்டி கூகிள் அறிமுகப்படுத்தும் என நம்பலாம்.//
    piknik — என்ற பெயரில் இருந்த இன்னுமோர் பெரிய online image editing மென்பொருளையும் கூகுள் சில காலம் முன்னமே வாங்கி விட்டது. (அதில் எனக்கு சற்று வருத்தமே…. சிறிய சிறிய entrepreneursஐ இப்படி கூகிள் முழுங்குகிறதே என்று..!!) அதுவும் இப்பொழுது picmonkey என்று மாறி உலவுகிறது. #my two cents 🙂

  4. ஹல்லோ,
    அஸ் ஸலாமு அலைக்கும் 🙂

    பெரிய பதிவுன்னு முன்னோட்டம் விட்டப்பவே படிக்க நினைத்தேன்… பட் டைமே கிடைக்கல பாஸித். எப்பவும் போல கச்சிதமான compact பதிவு 🙂

    இப்பல்லாம் நாட்டு நிலவரம், அறிவியல், மருந்து, சீதோஷ்ணம் என எல்லாமே அங்க இங்க என வலைப்பூக்களை படித்துதான் தெரிந்து கொள்கிறேன். அதுபோல இந்த டெக்னிக்கல் செய்திகளும் இங்கே படித்து தெரிந்து கொண்டேன்….எல்லாம் சுபம் 🙂

    //என்னை பொருத்தவரை Internet Explorer உலவியை தவிர்ப்பதே நல்லது. ஃபயர்ஃபாக்ஸ் அல்லது க்ரோம் உலவியை பயன்படுத்தலாம்.//
    இதுதான் சகோ இடிக்கிது. நம்ம எல்லாத்துக்குமே… அதாவது இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு இந்த பிரவுசரை கண்டாலே கொஞ்சம் கிண்டலாகத்தான் உள்ளது. ஆனால் அதிகமாக புழங்கப்படும் பிரவுசரில் இது முதலிடம் சகோ. அதுவுமன்றி ஓப்பன் சோர்ஸாக இருப்பதால் செக்யூரிட்டி கம்மி என எந்த நிறுவனமும் தனது ‘intranet' பக்கங்களை ஃபயர்ஃபாக்ஸ், க்ரோம் போன்ற பிரவுசர்களில் நிறுவாது. peoplesoft, oracle web tool, hr related software, ftp handling, cvs server browsing என பல்வேறு நிறுவனத்தின் உள் வேலைகளுக்கு இந்த பிரவுசரைத்தான் நம்பியுள்ளோம். அதையெல்லாம் விட ஒரு பெரிய உண்மை, நீங்கள் எத்தனை பெரிய டிசைனிங் ஜாம்பவானாக இருந்தாலும் உங்களால் டிசைன் செய்யப்பட்ட தளம் எக்ஸ்ப்ளோரரில் சரி வர தெரியவில்லை என்றால், அல்லது scalability issues இருந்தால் விலை போகாது. வெப் டிசைனிங் செய்பவர்கள் இது பற்றி அதிகம் கூறுவார்கள். வெப் டிசைனிங் படிப்பவர்கள், IT மாணவர்கள் என பலர் இந்த பிரவுசரைத்தான் நன்கு உபயோகிக்க பழக வேண்டும்.

    இந்த பிரவுசரில் web developer tools என ஒரு தனி plugin உள்ளதே அதன் நன்மையை வேறெந்த பிரவுசரிலும் காண முடியாது. எனவே இதை இப்படி ஒரு வரியோடு misguide செய்வது நல்லதல்ல… யோசியுங்கள் :))

    மற்றபடி, A 1 Post!!
    வஸ் ஸலாம் 🙂

  5. \ஓப்பன் சோர்ஸாக இருப்பதால் செக்யூரிட்டி கம்மி என எந்த நிறுவனமும் தனது ‘intranet' பக்கங்களை ஃபயர்ஃபாக்ஸ், க்ரோம் போன்ற பிரவுசர்களில் நிறுவாது\

    இது ஒரு கற்பிதம் சகோ!!
    ஓப்பன் சோர்ஸின் மகத்துவம் அறியாததால், அப்படி நினைக்கிறார்கள்.
    அவற்றில் நீங்கள் விரும்புவது போல பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்ளலாம்.

    IE இன் பாதுகாப்பைக் கவிழ்ப்பது எளிது..
    ஃபயர்ஃபாக்ஸ்?