பிட்.. பைட்… மெகாபைட்…. (17/10/12)

இந்த வாரம் (17/10/12) இணையத்தில் நடைப்பெற்ற முக்கிய செய்திகளில் சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்.

Fearless Felix – விண்வெளி சாகசம்:

ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த ஃபெலிக்ஸ் என்பவர் பூமியிலிருந்து 1,27,000 அடி உயரத்தில் இருந்து, அதாவது விண்வெளியின் விளிம்பிலிருந்து குதித்து சாதனைப் படைத்துள்ளார். எந்தவித இயந்திர உந்துதல்கள் இன்றி ஒலியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் பயணித்த முதல் மனிதன் என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.

இந்த சாகசத்திற்கு ஸ்பான்சர் வழங்கிய Red Bull நிறுவனம் தனது யூட்யூப் சேனலில் நேரடியாக ஒளிப்பரப்பியது. இந்த ஒளிபரப்பை அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 8 மில்லியன் நபர்கள் பார்த்துள்ளனர்.

Samsung Galaxy SIII Mini:

கடந்த வாரம் சொன்னது போல சாம்சங் நிறுவனம் Samsung Galaxy SIII Mini மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. 4 இன்ச் திரை, 5MP கேமராவுடன் கூடிய இந்த மொபைலில் ஆன்ட்ராய்ட் புதிய பதிப்பான ஜெல்லி பீன் இயங்குதளம் உள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 25,000 ரூபாயாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள், கூகுளை மிஞ்சிய பேஸ்புக்:

மிகவும் மதிப்புமிக்க நிறுவன பட்டியலில் பேஸ்புக் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. முதலிடத்தில் இருந்த கூகுள் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அக்டோபர் 23-ல் ஐபேட் மினி?

ஆப்பிள் நிறுவனம் ஐபேட் மினி தயாரித்து வருவதாக இணையத்தில் செய்தி வரும் வேளையில், வரும் அக்டோபர் 23-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றிற்கு ஆப்பிள் அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பிதழில் “We’ve got a little more to show you” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அநேகமாக இது ஐபேட் மினி பற்றிய அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கு முதலிடம் – வருத்தமான செய்தி:

1. India 16.1%
2. Italy 9.4%
3. USA 6.5%
4. Saudi Arabia 5.1%
5. Brazil 4.0%
6. Turkey 3.8%
7. France 3.7%
8. South Korea 3.6%
9. Vietnam 3.4%
10. China 3.1%
11. Germany 2.7%
12. United Kingdom 2.1%
Other 36.5%

கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களின் கணக்கின்படி ஸ்பாம் ஈமெயில்கள் அனுப்பும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக கணக்கெடுப்பில் ஸ்பாம் மெயில்களில் 16.1% சதவீத மெயில்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்படுகின்றது. அதாவது சராசரியாக ஆறு ஸ்பாம் மெயில்களில் ஒன்று இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றது.

இதற்கு அர்த்தம் இந்தியர்கள் அதிகமான ஸ்பாம் மெயில்கள் அனுப்புகிறார்கள் என்பதில்லை. இந்தியாவில் உள்ள அதிகமான கணினிகள் மால்வேர்களினால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த கணினிகள் மூலம் இணையக் குற்றவாளிகள் ஸ்பாம் மெயில்களை அனுப்பி பணம் சம்பாதிக்கின்றனர். இதற்கு காரணம் மால்வேர் பற்றிய விழிப்புணர்வு இந்தியர்களிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சோனி நெக்சஸ் மொபைல்?

சோனி மொபைல் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து Sony Nexus X என்னும் மொபைலை தயாரிப்பதாக இணையத்தில் செய்தி நிலவுகிறது.சோனி நிறுவனம் இதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டது.

இதையும் படிங்க:  பிட்.. பைட்... மெகாபைட்....! (06/03/2013)

தீக்குச்சிகள் – A Stop Motion Movie (விளம்பரம்):

Stop Motion Movie என்பது ஒரு பொருளை சிறு, சிறு அசைவுகளாக புகைப்படங்கள் எடுத்து, பிறகு அதனை ஒன்றிணைத்து அனிமேசன் வீடியோவாக மாற்றுவதாகும். மேலே உள்ள வீடியோ பதிவுலக நண்பர் மணிநேசன் அவர்களின் ஒரு கனவு முயற்சி ஆகும்.

வாரம்  ஒரு கேள்வி:

“வாரம் ஒரு கேள்வி” பகுதி அவசியமா?

உங்கள் பதில்களை பின்னூட்டங்களில் தெரிவயுங்கள்.

Log Out!

10 thoughts on “பிட்.. பைட்… மெகாபைட்…. (17/10/12)”

 1. இந்தியாவுக்கு முதலிடம்னா மகிழ்ச்சிதானே… எதுக்கு வருத்தம்னு தலைப்பை படிச்சதும் நினைச்சேன். இங்க பாத்தப்பறம்தான் உண்மை புரியுது. நிஜமாவே வருத்தமான செய்திதான். கணிப்பொறி விழிப்புணர்வு அவசியம் நமக்குத் தேவை.

 2. மணிநேசன் அவர்களின் முயற்சி அருமை. முதலாவதிலேயே அசத்தி விட்டார்.

  "வாரம் ஒரு கேள்வி" பகுதி அவசியமா? //

  அவசியமே ;-))

 3. @ஓம்போகர்

  மன்னிக்கவும் நண்பரே! தங்கள் பின்னூட்டம் தவறுதலாக நீக்கப்பட்டுவிட்டது.

 4. நன்றி நண்பரே.
  வழக்கம் போல் பல தகவல்களை தந்துள்ளீர்கள்.

  வாரம் ஒரு கேள்வி அவசியமா…?
  அவசியம் தான்.

  ஒரே கேள்விக்கு – பலரின் பலவிதமான பதில்கள் சுவராசியமானதாக இருக்கும்.

  எனவே

  அவசியம் தான்.

 5. விண்வெளியின் விளிம்பில் இருந்து குதித்தார மைலபான செய்தி, ஆப்பிள் எப்படி மொபைல் வெளியிட்டாலும் நான் வாங்கப் போவது இல்லை, இதில் galaxi ஜெல்லி வேறா…

  வாரம் ஒரு கேள்வி பதில் அவசியமே

 6. தம்பி சீனுவின் தளம் புதுப்பொலிவோடு வந்துள்ளதை இந்த பிட்டில் சேர்க்காததால் சங்கத்தில் இருந்து மெமோ வரும் வாங்கிகிட்டு விளக்க கடிதம் அனுப்பவும்….:):)

  தெரியாத தகவல்கள் நண்பா…..

 7. அனைத்து தகவல்களுமே அசத்தல். மணிநேசன் அசத்திவிட்டார். பெலிக்ஸின் சாதனை புல்லரிக்க வைக்கிறது. நிச்சயமாக இது உலக சாதனைதான். மனிதருக்கு மகா துணிச்சல்தான்.

 8. பல செய்திகளை தெரிந்து கொண்டேன்…
  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க…

  ஆம் என்னைப் பொருத்த வரை வாரம் ஒரு கேள்வி பகுதி அவசியம்….
  பல விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது !!