பிட்.. பைட்… மெகாபைட்….! (15/05/2013)

இந்த வாரம் (15/05/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும்,
அறிமுகங்களையும் இன்றைய “பிட்.. பைட்… மெகாபைட்….!” பகுதியில்
பார்ப்போம்.

Google I/O நிகழ்ச்சி (நேரடி ஒளிபரப்பு):

Google I/O என்பது வருடாவருடம் கூகுள் நடத்தும்
முக்கிய நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியில் கூகுள் பல்வேறு புதிய
தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும். இந்த வருடநிகழ்ச்சி இன்று தொடங்கி 17-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கும்.இந்த நிகழ்ச்சியை இன்று இரவு இந்திய நேரம் 9.30 மணிக்கு இதே பக்கத்தில் நேரடியாக பார்க்கலாம்.



இந்த நிகழ்ச்சியில் எதிர்பார்க்கப்படும் சில வசதிகள்,

அ) ஆண்ட்ராய்ட் கீ லைம் பை (Key Lime Pie) ?


ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பாக கீ லைம் பை (Key Lime Pie) வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.3 பதிப்பாக வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆ) Android Game Center?:


கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் விளையாட்டு மையத்தை உருவாக்கியுள்ளதாகவும் அதைப் பற்றிய அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மையத்தில் ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் நண்பர்களுடன் விளையாடலாம். இது ஆப்பிளின் Game Center போன்று இருக்கும்.

இ) புதிய டேப்லட் அல்லது மோடோரோலா எக்ஸ் மொபைல்?

கூகுள் நெக்சஸ் வரிசையில் புதிய டேப்லட் அல்லது மோடோரோலா எக்ஸ் மொபைல் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஈ) கூகுள் பேபல் (Google Babel) ?

Gmail Chat, Google Talk, Google+ chat, Google Drive Chat ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து Babel என்ற பெயரில் கூகுள் புதிய சாட் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. இது பற்றிய அறிவிப்பும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிராது.

உ) கூகுள் ஸ்மார்ட் வாட்ச்?

ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு போட்டியாக கூகுள் சொந்தமாக ஸ்மார்ட் வாட்ச் தயாரித்து வருவதாக தகவல்கள் வருகின்றது. இது பற்றியும் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவைகள் எதிர்பார்ப்புகள் மட்டுமே! இன்று இரவு தான் தெரியும். நிகழ்ச்சி பற்றி உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள ப்ளாக்கர் நண்பன் பேஸ்புக் பக்கத்தில் இணைந்திருங்கள். இறைவன் நாடினால் நேரடி வர்ணனை கொடுக்கிறேன். 🙂

ஆண்ட்ராய்ட் , ஐஒஎஸ்-ஸில் ப்ளாக்பெர்ரி மெஸ்ஸன்ஜர் (BBM)

 ப்ளாக்பெர்ரி மொபைல்களில் அதிகம் பயன்படும் வசதிகளில் ஒன்று, Blackberry Messenger (BBM). ப்ளாக்பெர்ரி மொபைல்களில் மட்டுமே உள்ள இந்த வசதியை ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஐபோன், ஐபேட் சாதனங்களில் அப்ளிகேசனாக ஜூன் மாதத்திற்கு பிறகு கொண்டு வரவுள்ளது ப்ளாக்பெர்ரி நிறுவனம். இது இலவசமாக கிடைக்கும்.

இதையும் படிங்க:  பிட்.. பைட்... மெகாபைட்....! (24/04/2013)

ஜூன் 26-ல் Windows 8.1:

மைக்ரோசாப்ட் நிறுவனம் வரும் ஜூன் 26-ஆம் தேதி விண்டாஸ் எட்டின் அப்டேட்டாக Windows 8.1-ஐ வெளியிடுகிறது. இது விடோஸ் எட்டு பயனாளர்களுக்கு இலவசமாக விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்கும்.


அவுட்லுக்கில் கூகுள் சாட்!

மைக்ரோசாப்டின் மின்னஞ்சல் சேவையான அவுட்லுக்கில் உங்கள் ஜிமெயில் நண்பர்களுடன் சாட் செய்வதற்கு Google Talk வசதியை கொண்டுவந்துள்ளது.


இந்த வார “சிரிப்பு” படம்:

Log Out!

4 thoughts on “பிட்.. பைட்… மெகாபைட்….! (15/05/2013)”

  1. @திண்டுக்கல் தனபாலன், @ ஞானம் சேகர்

    மன்னிக்கவும்! தங்கள் இருவரது பின்னூட்டங்கள் தவறுதலாக நீக்கப்பட்டுவிட்டது.