இந்த வாரம் (13/01/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும்,
அறிமுகங்களையும் இன்றைய “பிட்.. பைட்… மெகாபைட்….!” பகுதியில் பார்ப்போம்.
Intel TV – விரைவில்:
Intel நிறுவனம் செட்டாப் பாக்ஸுடன் கூடிய இன்டர்நெட் டிவியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது தொலைக்காட்சிகள் இணையமயமாகி வரும் நிலையில் இன்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் கொடுத்த எட்டு பில்லியன் டாலர்கள்:
ஆப்பிள் நிறுவனம் தனது ஐஒஎஸ் கட்டண அப்ளிகேசன் டெவெலபர்களுக்கு இதுவரை எட்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் செலுத்தியுள்ளது. இந்த பணம் ஆப்பிள் பயனர்கள் பணம் கட்டி வாங்கிய அப்ளிகேசன்களின் மதிப்பு.
ஆண்ட்ராய்ட் மொபைல்களில் சாம்சங் முன்னிலை:
அதிகம் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் சாம்சங் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. முதல் ஆறு இடங்களை சாம்சங் மொபைல்கள் பெற்றுள்ளது. அமேசான் நிறுவனத்தின் Kindle Fire ஏழாவது இடத்தையும், மோடோரோலா Droid Razr ஒன்பதாவது இடத்தையும் பெற்றுள்ளது. ஆண்ட்ராய்ட் மொபைல்களில் 47 சதவீத மொபைல்கள் சாம்சங் மொபைல்கள் ஆகும்.
ஆப்பிள் ஐஒஎஸ் 6.1 பிரச்சனை:
ஆப்பிள் நிறுவனம் கடந்த 28-ஆம் தேதி iOS 6.1 பதிப்பை வெளியிட்டது. ஆனால் இதில் பேட்டரி தீர்ந்துவிடுதல், விரைவாக சூடாகுதல் மற்றும் 3G நெட்வொர்க் பிரச்சனைகள் இருந்தது. தற்போது 3G பிரச்சனையை மட்டும் சரி செய்து iPhone 4S மொபைல்களுக்கு மட்டும் புதிய iOS 6.1.1 பதிப்பை வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் ஐட்யூனில் 25 பில்லியன் பாடல்கள்:
ஆப்பிள் iTune வசதியில் 2003 ஆம் ஆண்டு முதல் இதுவரை 25 பில்லியன் பாடல்கள் விற்பனை ஆகியுள்ளது. சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 15,000 பாடல்கள் பதிவிறக்கப்பட்டுள்ளது.
இந்த வார சிரிப்பு புகைப்படம்:
பயனுள்ள தகவல்கள் நன்றி சகோ.
பிட்.. பைட்… மெகாபைட் செய்தி பயனுள்ளதாக உள்ளது நண்பா .
தொடருங்கள் .
புதிய தகவல் நன்றி
தகவல்கள் அருமை நண்பரே
எம் தளத்திற்க்கு தங்களை வரவேற்கிறேன்….
தகவல்களுக்கு நன்றிங்க…