பிட்.. பைட்… மெகாபைட்….! (10/10/2012)

நாற்காலிகள் பேஸ்புக் போன்றது

இந்த வாரம் (10/10/2012) இணையத்தில் அதிகம் பேசப்பட்ட முக்கிய செய்திகளில் சிலவற்றை மட்டும்  இங்கே காணலாம்.
 
பேஸ்புக் – ஒரு பில்லியன் செயல்படும் பயனாளர்கள்:

சமூக வலைத்தளங்களில் முன்னிலையில் இருக்கும் பேஸ்புக் தளத்தின் செயல்படும் பயனாளர்கள் (Active users) எண்ணிக்கை கடந்த மாதம் ஒரு பில்லியனைத் தொட்டிருக்கிறது. இதில் 600 மில்லியன் நபர்கள் மொபைல் பயனாளர்கள் ஆவர். இதன்படி பார்த்தால் உலகில் சராசரியாக ஏழு பேரில் ஒருவர் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். இதனை முன்னிட்டு பேஸ்புக் தளம் விளம்பர வீடியோ வெளியிட்டுள்ளது.

 

இந்த ஒரு பில்லியன் பயாளர்கள் எண்ணிக்கையைப் பற்றி இணையத்தில் வெளிவந்த கார்டூன் படம். இது உண்மையும் கூட…Instagram – 2 வருடங்கள், 100 மில்லியன் பயனாளர்கள்:

புகைப்படங்களை அழகாக்கி, பகிர்ந்து கொள்ள உதவும் Instagram மென்பொருள் இரண்டு வருடங்களை நிறைவு செய்துள்ளது. தற்போது இன்ஸ்டாக்ராம் 100 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது. மேலும் இது வரை அதில் 5 மில்லியன்களுக்கும் அதிகமான புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.

கூகுள்  – சாம்சங் இணைந்து வெளியிடும் நெக்ஸஸ் டேப்லட்:

கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இணைந்து புதிய நெக்ஸஸ் டேப்லட்டை வெளியிடவுள்ளது. இதன் அளவு ஆப்பிள் ஐபேடை விட பெரியதாகவும், அதிக தொழில்நுட்பத்துடனும் இருக்கும்.

ஐபேட் மினி (iPad Mini) ???

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் சாதனத்தின் சிறிய அளவாக iPad Mini-யை உருவாக்கி வருவதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது. அதன் புகைப்படம் என்று மேலே உள்ள படம் உலா வருகிறது.

Samsung Galaxy S3 Mini:

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S3 மொபைலின் சிறிய அளவு தயாரிப்பாக Galaxy SIII Mini என்னும் 4 இன்ச் அளவான புதிய மொபைலை நாளை ஜெர்மனியில் அறிவிக்கவுள்ளது.

வீடியோ சேவையில்  ட்விட்டர்?

ட்விட்டர் தளம் Vine என்னும் வீடியோ நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. Vine என்பது ஐபோனில் வீடியோவை பகிரும் அப்ளிகேசன் ஆகும். இதில் ஆச்சர்யமான தகவல் என்னவென்றால், Vine இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் ஆகவில்லை, சோதனை பதிப்பில் தான் உள்ளது. விரைவில் ட்விட்டர் தளத்தில் வீடியோவை பகிரும் வசதியை எதிர்பார்க்கலாம்.

வாரம் ஒரு கேள்வி:

நீங்கள் மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்துகிறீர்களா?
 
உங்கள் பதிலை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.


Log Out!

இதையும் படிங்க:  பிட்.. பைட்... மெகாபைட்....! (24/04/2013)

17 thoughts on “பிட்.. பைட்… மெகாபைட்….! (10/10/2012)”

 1. பேஸ்புக் பற்றி அருமையாக சோலிய கருத்துகளை மனபாடம் செய்து கொண்டேன்…

  //நீங்கள் மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்துகிறீர்களா?// அப்படிப் பட்ட வசதியுடன் கூடிய மொபைல் என்னிடம் இல்லை… சங்கம் வாங்கித் தருமா என்பதை நீங்கள் தெளிவு படுத்தினால் நலம்

 2. கம்ப்யூட்டர் கூட இணைய வசதி இல்லாமல் இருந்து விடுவேன் மொபைல் இல்லாமல் முடியவே முடியாது…பாத்ரூம்ல கூட பயன்படுத்துவேன்னா பார்த்து கொள்ளுங்கள்….

 3. பேஸ்புக்கில் உண்மையான நபர்கள் எவ்ளோ கம்மியா இருக்காங்க… ம்ம்.

  // நீங்கள் மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்துகிறீர்களா? //

  எதில் எல்லாம் பயன்படுத்த முடியுமே அதில் எல்லாம் பயன்படுத்துகிறேன் :-))

 4. ட்விட்டர் கொஞ்ச கொஞ்சமாய் பேஸ்புக் மாதிரி ஆகுரானுங்க இதோட நிறுத்தி கொள்ளுங்க இதுக்கு மேல கண்ட கருமத்தை கொண்டு வர போறானுங்க

 5. ஃபேஸ்புக் பற்றிய விபரங்கள் உண்மையாக்த்தான் இருக்கும். உதாரணத்திற்கு, நானே ரெண்டு ஃபேஸ்புக் அக்கவுண்ட் வச்சிருக்கேன். ஆனா, ரெண்டிலும் ஆக்டிவ் யூஸர் இல்லை. :-))

  மொபைலில் இண்டர்நெட் பயன்படுத்தக்கூடாது என்ற உறுதியுடன் இருக்கிறேன். :-))))

 6. அருமையான தொகுப்பு…

  \நீங்கள் மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்துகிறீர்களா?\
  வீட்டில் இல்லாத போது!!