பிட்.. பைட்… மெகாபைட்….! (09/01/2013)

அமெரிக்கா லாஸ் வேகாஸ் நகரத்தில் வருடந்தோறும் ஜனவரி மாதம் International CES (Consumer Electronics Show) என்ற பெயரில் மின்னணு சாதனங்களுக்கான கண்காட்சி நடக்கும். பல முக்கிய நிறுவனங்கள் தங்களின் புதிய தயாரிப்புகள் பற்றி அறிவிப்பை வெளியிடும். இந்த வருட கண்காட்சி நேற்று தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்.

Xperia Z – சோனியின் முதன்மை மொபைல்:

சோனி மொபைல் நிறுவனம் Xperia வரிசையில் பல மொபைல்களை அறிமுகப்படுத்திவருகிறது. அந்த வரிசையில் தனது முதன்மை (Flagship) மொபைலாக Xperia Z என்ற மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ராய்ட் சமீபத்திய பதிப்பான ஜெல்லிபீன் இயங்குதளம், 13 MP கேமராவுடன் வெளியாகும் இந்த மொபைல் பற்றி முழுமையாக அறிய,

Sony Xperia Z – Specs, Price and Release date

Windows Messenger to Skype:

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது Messenger வசதியிலிருந்து ஸ்கைப்பிற்கு மாறப்போகிறது என்று பார்த்தோம் அல்லவா? வரும் மார்ச் 15-ஆம் தேதி முதல் Messenger வசதியை நிறுத்தப் போகிறது. அதன் பிறகு ஸ்கைப்பில் மட்டுமே சாட் செய்ய முடியும்.

சென்னை நோக்கியாவில் சோதனை:

சென்னை ஸ்ரீபெரம்பத்தூரில் உள்ள நோக்கியா நிறுவனத்தில் வருமானவரித்துறை நேற்று சோதனை நடத்தியது. 3000 கோடி வரி கட்டப்படாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நோக்கியா இதனை மறுத்துள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பிப்போம் என்றும் தெரிவித்துள்ளது.

Dropbox -விண்டோஸ் 8 அப்ளிகேசன்:

நமது கோப்புகளை இணையத்தில் சேமிக்க உதவும் Dropbox தளம் விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. இது பற்றி முழு தகவல்களுக்கு,

Dropbox launched windows 8 app

பேஸ்புக் Voice Message:

பேஸ்புக் நிறுவனம் தனது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களுக்கான Messenger அப்ளிகேசனில் நண்பர்களுக்கு வாய்வழி செய்தி (Voice Message) அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாம்சங் டைசன் மொபைல்கள்:

சாம்சங் நிறுவனம் இந்த வருடம் டைசன் (Tizen) இயங்குதளத்தைக் கொண்ட புதிய மொபைல்களை அறிமுகப்படுத்தவுள்ளது. டைசன் என்பது லினக்ஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மொபைல் இயங்குதளம் ஆகும். ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்காக கூகுளையே முழுமையாக நம்பியிருப்பதை தவிர்ப்பதற்கே இந்த முடிவை சாம்சங் எடுத்திருப்பதாக கருதப்படுகிறது.

குறைந்த விலையில் ஐபோன்?

ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபோன் ஒன்றை தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் தொழில்நுட்பம் பிரமாதமாக இருந்தாலும் அதிகமானவர்கள் ஆண்ட்ராய்ட் சாதனங்களை தேர்ந்தெடுப்பதற்கு விலையும் ஒரு காரணமாகும். தொழில்நுட்பத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் குறைந்த விலை உதிரிப்பாகங்களைக் கொண்டு உருவாக்கும் முயற்சியில் ஆப்பிள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:  பிட்.. பைட்... மெகாபைட்....! (23/01/2013)

விண்டோஸ் 8 – 60 மில்லியன் விற்பனை:

கடந்த அக்டோபர் மாதம் அறிமுகமான மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 இயங்குதளம் இதுவரை 60 மில்லியன் விற்பனை ஆகியுள்ளது. மேலும் விண்டோஸ் 8 அப்ளிகேசன்கள் இதுவரை நூறு மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது.

ஜனவரி 15 – பேஸ்புக் அறிவிப்பு:

பேஸ்புக் நிறுவனம் வரும் 15-ஆம் தேதி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்துகிறது. அதில் முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாரம் ஒரு கார்டூன் (ஹிஹிஹிஹி):

Log Out!

13 thoughts on “பிட்.. பைட்… மெகாபைட்….! (09/01/2013)”

  1. சாம்சங் டைசன் புதிய செய்தி.சந்தையில் தனி தன்மையோடு நிற்பதற்கு இது போன்ற யுக்திகள் மிக முக்கியம்.

    ஆப்பிளின் முடிவு காலத்தின் கட்டாயம் …..,

  2. Tizen இயங்குதளம் Open Source மென்பொருள் ஆகும். இது லினக்ஸ் ஃபவுண்டேசனுக்கு சொந்தமானது. இது இன்டெல் மற்றும் சாம்சங் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகிறது.