பிட்.. பைட்… மெகாபைட்….! (05/12/2012)

இந்த வாரம் (05/12/2012) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய “பிட்..பைட்…மெகாபைட்….!” பகுதியில் பார்ப்போம்.
 
பேஸ்புக் மெஸ்ஸஞ்சர் (Facebook Messenger):



பேஸ்புக் தளம் சாட் செய்வதற்காக Messenger என்ற வசதியை முன்பு அறிமுகப்படுத்தியது. தற்போது ஆண்ட்ராய்டுக்கான பேஸ்புக் மெஸ்ஸஞ்சரில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பேஸ்புக் கணக்கு இல்லாமலேயே வெறும் பெயர் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் கொடுத்து நண்பர்களுடன் சாட் செய்யலாம். இந்த வசதி தற்போது India, Indonesia, Australia, Venezuela, South Africa ஆகிய நாடுகளில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. மற்ற நாடுகளுக்கும், ஆப்பிள் சாதனங்களுக்கும் விரைவில் அறிமுகமாகும்.

இந்த வசதி WhatsApp Messenger போன்று தான். மேலும் தற்போது WhatsApp-ஐ பேஸ்புக் வாங்கப்போவதாக இணையத்தில் செய்தி பரவியது. ஆனால் WhatsApp இதனை மறுத்துள்ளது.

Google Play vs App Store:



Google Play மூலம் விற்கப்படும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் மற்றும் கேம்களின் வருமானம் வருடாவருடம் அதிகரித்து வருகிறது. கடந்த வருடத்தைவிட இந்த வருடம் 311 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் அந்த வருமானத்தை விட நான்கு மடங்கு அதிக வருமானத்தை ஆப்பிளின் App Store-ல் விற்கப்படும் அப்ளிகேசன் மற்றும் கேம்கள் பெறுகின்றது.

நண்பர்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்:

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானது ஆப்பிள் மேப் தான். இதற்காக ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மேப் அப்ளிகேசனில் ட்விட்டர், பேஸ்புக் நண்பர்கள் மற்றும் நம்மை சுற்றியுள்ளவர்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்களை பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.


கூகுளின் ஆப்பிள் அப்டேட்:

கூகுள் நிறுவனம் ஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட்களுக்கான யூட்யூப் அப்ளிகேசனையும், ஜிமெயில் அப்ளிகேசனையும் புதிய வசதிகளுடன் அப்டேட் செய்துள்ளது.

மொபைல் உலகில் யாஹூ:

இணையத்தில் ஜாம்பவனாக ஒரு காலத்தில் (?) திகழ்ந்த யாஹூ நிறுவனம் பிறகு பல்வேறு சோதனைகளை சந்தித்தது. சமீபத்தில் யாஹூ நிறுவனத்தின் புது சிஇஓ-வாக மரிஸ்ஸா மேயர் என்பவர் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவருகிறார். தற்போது On The Air என்னும் மொபைல் வீடியோ சாட் நிறுவனத்தை கையைகப்படுத்தியுள்ளார். இந்த முறை கையகப்படுத்தியது On The Air தயாரிப்புக்காக இல்லை, மாறாக அதன் மென்பொருள் உருவாக்குனர்களுக்காக இதனை செய்துள்ளது. அதனை உருவாக்கிய ஐந்து பேர் இனி யாஹூவின் மொபைல் பிரிவில் பணிபுரிவார்கள்.

வாரம் ஒரு கார்டூன் (ஹிஹிஹிஹி):

 Log Out!

5 thoughts on “பிட்.. பைட்… மெகாபைட்….! (05/12/2012)”