பிட்.. பைட்… மெகாபைட்….! (03/10/2012)

இந்த வாரம் (03/10/2012) இணையத்தில் அதிகம் பேசப்பட்ட முக்கிய செய்திகளில் சிலவற்றை மட்டும்  இங்கே காணலாம்.

ஆப்பிள் vs சாம்சங் – மறுபடியும்!

சாம்சங் தங்கள் சாதனங்களை காப்பி அடிப்பதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்ததையும், அந்த வழக்கில் சாம்சங் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதையும் பார்த்தோம் அல்லவா? தற்போது ஐபோன் 5 மொபைலுக்காக ஆப்பிள் நிறுவனம் மீது சாம்சங் வழக்கு தொடர்ந்துள்ளது.

மேலும் ஆப்பிள் ஐபேடை காப்பியடித்ததாக சொல்லப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் Samsung Galaxy Tab 10.1 சாதனத்தை அமெரிக்காவில் விற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை தற்போது விலக்கப்பட்டுள்ளது.

25 பில்லியன் ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன் பதிவிறக்கங்கள்:

ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன் மற்றும் விளையாட்டுக்களை பதிவிறக்கம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ தளமான கூகுள் ப்ளே தளத்தில் இதுவரை 6,75,000 அப்ளிகேசன் மற்றும் விளையாட்டுக்கள் உள்ளன. கடந்த மாதம் 25 பில்லியன் பதிவிறக்கங்களைத் தொட்டிருக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த வாரம் ஐந்து நாட்களுக்கு 25 அமெரிக்க சென்ட்களுக்கு சிலவற்றை சலுகை விலையில் தந்தது.

பேஸ்புக்  அன்பளிப்பு – வெற்றி பெறுமா?

பேஸ்புக் நிறுவனம் பங்கு சந்தையில் நுழைந்தப் பின் முதலில் Karma என்னும் மொபைல் அப்ளிகேசன் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இது நண்பர்களுக்கு அன்பளிப்புகளை (பணம் கட்டி) அனுப்புவதற்கான சேவையாகும். தற்போது பேஸ்புக்கில் இந்த வசதியை Facebook Gifts என்ற பெயரில் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நண்பர்களுக்கு அன்பளிப்புகளை அனுப்பலாம். தற்போது அமெரிக்க பயனாளர்களில் சிலருக்கு மட்டும் இந்த வசதி வந்துள்ளது.

பங்குசதையில் பேஸ்புக் தனது ஆரம்ப விலையை விட இன்னும் குறைவாகவே உள்ளது. இந்த வசதி வெற்றிபெற்றால், பங்கு மதிப்பு உயரக் கூடும்.

மேலும் விவரங்களுக்கு, https://www.facebook.com/about/gifts

மன்னிப்பு கேட்ட ஆப்பிள்:

“Most Powerful Mapping Service Ever” என்று சொல்லி அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் மேப்பில் பல்வேறு பிழைகள் உள்ளன. சரியான வழிகளைக் காட்டுவதில்லை மேலும் பல படங்கள் சொதப்பலாக உள்ளது. இதனையடுத்து ஆப்பிள் நிறுவனம் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டது.

இது தொடர்பாக ஆப்பிள் நிறுவன CEO டிம் குக் எழுதியுள்ள கடிதம்

http://www.apple.com/letter-from-tim-cook-on-maps/

கூகுள் மொபைல் மேப்பில் தெருப்பார்வை:

கூகுள் மேப்பில் உள்ள தெருப்பார்வை (Street View) வசதியைப் பற்றி தெரிந்திருக்கும். விரைவில் அந்த வசதியை மொபைல்களில் கொண்டு வருவதற்கான முயற்சியில் இருக்கிறது கூகுள் நிறுவனம்.


வாரம் ஒரு கேள்வி:

நீங்கள் எந்த ஆன்டி-வைரஸ் மென்பொருளை பயன்படுத்துகிறீர்கள்?

உங்கள் பதிலை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Log Out!

36 thoughts on “பிட்.. பைட்… மெகாபைட்….! (03/10/2012)”

  1. ஓகே மிகவும் நன்று..
    ஆன்டி பற்றிய கேள்விகளை அண்ணன் வாசுவிடம் (பயபுள்ள பெயரே சொல்ல மாட்டேங்குது ஸோ அவருக்கு பதிவுலகம் சார்பாக வாசு என்ற பெயரை சூட்டுகிறோம்)

    வஸ்கி – வாசு என்பது யாதெனில் (வர)லாற்று (சு)வடுகள் எடுத்து "வ(ர)சு" ஆக்கி, அதற்க்கு பிறகு "ர" னாவின் காலை வெட்டி அந்த பெயரை சூட்டுகிறோம்.. /திரிபு என்றும் கூறலாம்..

  2. வழக்கம் போல் சுவையான செய்திகள்.

    மிக குறைந்த விலையில்,மொபைல்களில் அதிகப்படியான வசதிகளை தந்தது சாம்சங் என்றால்,அது மிகையாகாது.அந்த வகையில் நாம் அனைவரும் சாம்சங் நிறுவனத்திற்கு நன்றிகளை சொல்லலாம்.

  3. அருமையான தகவல்கள்கள்.படிப்பதற்கு சுவாரசியமாய் இருந்தது

    "நான் பயன்படுத்தும் அண்டிவைரஸ் "அவாஸ்ட் "

  4. Blog related doubt ..

    my blog's total page view 450,000 +
    blog age – 10 months
    average page view on last 2 month – 5000 page view per day ..
    but my alexa rank is 380,000

    i hope sumthing wrong wit my alexa rank ..

    your blog alexa rank is 112,000
    can u tell me the daily page view of your blog ?

    plz sir , help me …

  5. ரொம்ப குஷ்டமான கேள்வி.. என்னோட சில டெம்பிளேட் மாற்றங்களால 3 வாட்டி ரேன்க் பின் தள்ளி இருக்காங்க.. (அதுவும் பெரிய அளவில).. அடுத்து மொத்த பேஜ்வியு 6000 மட்டும் கொண்ட எனது சகோதரன் ஒருவரின் தளம் 671 176 என்று கூட இருக்கு.. பாசிட் பாய் சொல்லுங்க..

  6. நல்ல தொகுப்பு…

    \நீங்கள் எந்த ஆன்டி-வைரஸ் மென்பொருளை பயன்படுத்துகிறீர்கள்?\
    எதுவும் பயன்படுத்துவதில்லை…
    காரணம் நான் இருப்பது லினக்ஸ் இயங்குதளத்தில்.

  7. @anonymous

    Alexa rank is not only depend on pageviews, it takes some other values too like how much time visitors spend on your page.

    if you give your blog url, i can try to find out the problem.

    BTW my pageview per day is too below than 5000 🙂

  8. ஹாரி,

    மேலே உள்ள கம்மென்ட் படிங்க…

    அந்த சகோதரனின் பல்;ஆக முகவரி கொடுத்தால் அதற்கான காரணத்தை ஆராய்வேன்.

    😀 😀 😀

  9. Brother we are a Tamil patients, sorry Persons..But i studied English in captain Vijaykanth school.. So i can under stand little in your English.. I think your answer is may be correct.. Because me also thinks as your answer..

    (NOTE – sometimes my English have a some mistakes.. but i dnt ask u sorry.. becz i dnt like the word SORRY in English too.)

    Thank you

    Captain English University High Ranked Student ""Harry""

  10. சகோ.அப்துல் பாஸித்

    எனது லேப்டாப் சார்ந்த ஒரு பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்கள்…

    தமிழ் மணத்தின் பெரும்பாலான தளங்களை ஓபன் செய்கையில் சிறிது நேரம் லோடிங் ஆகி , பிறகு தளம் முழுவதும் ப்ளாக் கலராக ஆகி விடுகிறது…தளத்தில் வெறும் கருப்பு மட்டும் தான் தெரிகிறது..தளத்தை காண முடியவில்லை..உங்களின் தளம் ஓபன் ஆகிறது..(நல்ல வேளை)அல்ஹம்துலில்லாஹ்…..ஏதேனும் வைரஸ் சார்ந்த பிரச்சனையா…?நான் avast anti virus உபயோகிக்கிறேன் …கட்டண வைரஸ் எதிர் மென்பொருள் உபயோகிக்க வேண்டுமா…? கட்டண மென்பொருளில் எது சிறந்தது…?

    இந்த ப்ளாக்(கருப்பு) பிரச்சனைக்கு அறிந்தவர்கள் தீர்வு சொல்லுங்கள்…

    நன்றியுடன்
    நாகூர் மீரான்

  11. 2 GB RAM உள்ள என் கணினி, அடிக்கடி SHOCK WAVE PLUGS-IN ஆல்
    சிஸ்டம் கிராஷ் ஆகுது மேலும் அந்நேரத்தில் வேகம் மிகவும் குறைவாக
    இருப்பதால் வேலைகள் தாமதப்படுத்துவதால் எரிச்சலாக இருக்கிறது..
    தயவு செய்து இதற்கு நிரந்தரமான தீர்வு ஒன்றை கூறவும்…

  12. அல்ஹம்துலில்லாஹ்…நான் தெரிவித்த பிரச்சனைக்கு தீர்வை கண்டு கொண்டேன்…தளம் தெரியாமல் முழுவதும் கருப்பாக தெரிந்ததற்கு காரணம் வைரஸ் அல்ல…அது ப்ரௌசெர் சார்ந்த பிரச்னை….ப்ரௌசறை மாற்றினேன் சரியாகி விட்டது…

    நன்றியுடன்
    நாகூர் மீரான்

  13. @ Computer World,

    உங்களோட daily visit எவ்வளவு தலைவா?

    பொதுவா last three months page views and daily visits வச்சித்தான் Alexa ரேங் போடுறாங்கன்னு நினைக்கிறேன்! ஒருவேளை சமீபத்தில் உங்க வெப் page view அதிகரிச்சிருந்தா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க., ரேங் இன்னும் நீங்க முன்னேறலாம்! 🙂

    you know one thing 'time on site' for my blog 32 minutes! 🙂

    page per user 6.4! 🙂 🙂 🙂

  14. @Abdul Basith
    thnx for the comment , insha allah, will c in future 🙂

    @வரலாற்று சுவடுகள்
    last 2 month average aah 800 visitors..
    ur blog is superb, u have a good traffic … keep writing ..

    and ungaloda daily page view evaloov ?

  15. நல்ல பயனுள்ள பதிவு ! நான் நிருவிருப்பது Microsoft essential .

    என்னுடைய தமிழ்மணம் ஒட்டுப்பட்டை வழியாக பதிவுகளை இணைக்க முடியவிலை .புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை என்று வருகிறது .http://nathiyinvaliyilorunaavai.blogspot.com/ இது என்னுடைய வலைத்தள முகவரி .
    google chrome உலவியை பயன்படுத்தி பின்னோட்டம் இட முடிவதில்லை .
    முடிந்தால்உதவவும்.