இந்த வாரம் (03/04/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும்,
அறிமுகங்களையும் இன்றைய “பிட்.. பைட்… மெகாபைட்….!” பகுதியில் பார்ப்போம்.
ஏப்ரல் ஒன்னு!
Nokia Microwave |
ஏப்ரல் ஒன்றாம் தேதியை முன்னிட்டு பல தொழில்நுட்ப தளங்கள் முட்டாள்கள் தின குறும்புகளை (April Fool Prank) செய்தன. அவைகளில் சில,
- கூகுள் மேப்பில் புதையல் வரைபடம்
- முழுதும் நீலக்கலரிலான ஜிமெயில் ப்ளூ
- தேடல் முடிவுகளை நுகரும் வசதியான Google Nose
- ட்விட்டரில் a,e,i,o,u vowels-களை பயன்படுத்த ஐந்து டாலர் கட்டணம்
- நோக்கியா தயாரித்துள்ள மைக்ரோவேவ்
- சாம்சங் நிறுவனம் உருவாக்கிய சுற்று சூழலுக்கு உகந்த Eco Trees
- ஸ்மார்ட்போன்களை ஏடிஎம்-ஆக பயன்படுத்த Google Wallet வசதி
இப்படி பல நிறுவனங்கள் ஏமாற்று வேலைகளை செய்தது.
Facebook “Home on Android”:
பேஸ்புக் நிறுவனம் “Home on Android” என்ற பெயரில் இன்று நாளை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவிள்ளது. அனேகமாக HTC நிறுவனத்துடன் இணைந்து மாற்றங்களுடன் கூடிய ஆண்ட்ராய்ட் போனை அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மற்ற மொபைல்களிலும் பயன்படுத்தும் விதமாக Home என்ற பெயரில் App Launcher அப்ளிகேசனாகவும் வெளியிடவுள்ளது. இதன் மூலம் நமது போனின் தோற்றத்தை மாற்றிக் கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சி பற்றிய உடனடி தகவல்களை அறிந்துக் கொள்ள, நாளை இரவு ஒன்பது மணிக்கு இந்திய நேரம் 10.30-க்கு மேல் ப்ளாக்கர் நண்பன் பேஸ்புக் பக்கத்தை பாருங்கள்.
Mixbit – யூட்யூபுக்கு மாற்று?
யூட்யூப் தளத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான Chad Hurley புதிய வீடியோ தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். Mixbit.com என்ற அந்த தளம் விரைவில் வெளியாகும்.
Firefox 20:
பல புதிய வசதிகளுடன் பயர்பாக்ஸ் உலவியின் 20-ஆவது பதிப்பு வெளிவந்துள்ளது.
பேஸ்புக் புதிய வசதி:
ட்விட்டரில் இருப்பது போல, பேஸ்புக் தளத்தில் எந்த பக்கத்தில் இருந்தும் உடனடியாக ஸ்டேட்டஸ் பகிரும் வசதியை பேஸ்புக் கொண்டுவரவுள்ளது.
ஜிமெயிலில் இந்திய மொழிகள்:
Wap வசதிக் கொண்ட கலர்போன்கள் Feature Phones என்றழைக்கப்படும். அவற்றில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ஆறு இந்திய மொழிகளில் மெயில்களைப் படிக்கும் வசதியை ஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு Gmail Setting பகுதிக்கு சென்று மொழியை தேர்வு செய்துக் கொள்ளவும்.
இந்த வார “சிரிப்பு(?)” படம்:
நோக்கியா மைக்ரோவேவ்வுக்கு அந்த தளத்தில் கமெண்ட்டுகள் சிரிப்பை வரவைக்கின்றன 🙂
இரவு ஒன்பது மணிக்கு மேல் மின்வெட்டு இல்லாமல் இருந்தால் பார்க்கிறேன்…!
நன்றி…
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
டெலி போன் வந்த புதுசுல அதாவது எண்பதுகளில் கண்டாயோ கேட்டாயோ என்று டெலிபோன் வந்தது பாருங்கள் அப்பொழுதெல்லாம் டெலிபோனில் பேசுவது என்பது ஒரு விதமான சந்தோசத்தை கொடுக்கும் அதை போலதான் இப்பொழுது சமூக வலைதளங்ககளை பயன் படுத்துவதும் உள்ளது
பேஸ்புக்குக்கு வந்துட்டேன்