பதிவுகளை காப்பி அடிப்பதை தடுக்க

இணையத்தின் வளர்ச்சி காரணமாக கிட்டத்தட்ட அனைத்து விசயங்களும் எளிதாகிவிட்டன. நம்முடைய கருத்துக்களை மற்றவர்களிடம் பகிர்வதும் எளிதாகிவிட்டது. அதே சமயம் மற்றவர்கள் பகிர்ந்தவற்றை காப்பி அடிப்பது அல்லது காப்பி செய்வதும் எளிதாகிவிட்டது. தற்போது பல பதிவர்களுக்கு வருத்தத்தை கொடுப்பது பதிவு திருட்டு.

ஒரு பதிவை பகிர்வதற்கும், திருடுவதற்கும் ஒரே வித்தியாசம் தான். பதிவின் எழுத்தாளரிடம் அனுமதி பெற்று பகிர்ந்தால் அது பகிர்வு. அனுமதி இல்லாமலும், எழுதியவரின் பெயரை, ப்ளாக்கை குறிப்பிடாமலும் பகிர்ந்தால் அது திருட்டு. தற்போது இணையத்தின் வளர்ச்சிக் காரணமாக நமது பதிவுகள் Copy செய்யப்படுவதை முற்றிலுமாக தடுக்க இயலாது. ஆனால், அதை தடுப்பதற்கு சில வழிகளை செய்யலாம். அதில் ஒன்று, நமது பதிவுகள் காப்பி அடிக்கப்படுவதை தடுக்க,Copy செய்யும் முறையை முடக்க வேண்டும்(Disable Copy and
Paste).

அவ்வாறு செய்ய:

1. முதலில் Blogger Dashboard => Template => Backup/Restore
Template
என்ற பகுதிக்கு சென்று, Download Full Template என்பதை க்ளிக்
செய்து உங்கள் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.



2. பிறகு அதே பக்கத்தில் Edit Html பகுதிக்கு சென்று, அங்கு

<body>

என்ற Code-ஐ தேடி, அதனை பின்வருமாறு மாற்றவும்.

<body bgcolor=”#FFFFFF” ondragstart=”return false” onselectstart=”return false”>



3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.


குறிப்பு: சில டெம்ப்ளேட்களில் Body Tag-ல் வேறு சிலவும் சேர்ந்திருக்கும்.
 உதாரணத்திற்கு,

<body expr:class=’&quot;loading&quot; + data:blog.mobileClass’>

அது போன்று இருந்தால், அந்த code-ல் இறுதியில் > என்பதற்கு முன் ஒரு இடைவெளி விட்டு

bgcolor=”#FFFFFF” ondragstart=”return false” onselectstart=”return false”

என்பதை சேர்க்கவும்.


குறைகள்: இப்படி செய்வதால், வாசகர்கள் பதிவில் நாம் சொன்னதை மேற்கோள் காட்டவும் காப்பி செய்ய முடியாது. 🙁 🙁 🙁

ஆனாலும் , நமது பதிவுகள் காப்பி செய்யப்படுவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. அவற்றை சொல்ல எனக்கு விருப்பமில்லை.


Reference: http://www.hypergurl.com/



இன்றைய இணையம்:

1. ஹாரிபாட்டர் ரசிகர்களுக்காக Pottermore என்ற இணையதளம் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்க இருக்கிறது. அதற்கு முன் சிலருக்கு மட்டும் இந்த மாதத்திலேயே பார்க்கும் வசதியை அளிக்கிறது. கடந்த 31-ஆம் தேதி முதல், வரும் ஆகஸ்ட் ஆறாம் தேதி வரை தினமும், சில நேரங்கள் மட்டும் கேள்வி கேட்கும். அதற்கான சரியான பதில் அளித்தால் அதன் மூலம் கணக்கு தொடங்கி பார்க்கலாம். வாய்ப்பு கிடைக்காதவர்கள் அக்டோபர் மாதம் வரை காத்திருக்கவும். 

தள முகவரி: http://www.pottermore.com/

இதையும் படிங்க:  உடான்ஸ் திரட்டியில் மால்வேர்

2. கூகிளின் புதிய இயங்குதளமான Chrome OS-ல் நமது கணக்குகள் ஹேக் செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

43 thoughts on “பதிவுகளை காப்பி அடிப்பதை தடுக்க”

  1. நல்ல உபயோகமான தகவல் நண்பரே… ஆஹா.. க்ரோம் ஓஸ் – ல் ஹேக் செய்யப்படுமா…எச்சரிக்கை தகவலுக்கு நன்றி நண்பரே..!

  2. இது அநியாயம், அக்கிரமம், காட்டுமிராண்டித்தனம், etc. etc. இதை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போகிறேன்.

  3. ம்ம், இருந்தாலும் copy பண்ண வேறு வழி இருக்கு பாஸ்… திருடனாய் பார்த்து தான் திருந்த வேண்டும் (((

  4. //koodal bala said… 1

    ஆஹா …இதுதான் சிபி அண்ணன் டெக்னிக்கா !//

    🙂 🙂 🙂

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!

  5. //கந்தசாமி. said… 2

    ம்ம், இருந்தாலும் copy பண்ண வேறு வழி இருக்கு பாஸ்… திருடனாய் பார்த்து தான் திருந்த வேண்டும் (((
    //

    ஆம் நண்பா! நிறைய வழி இருக்கிறது. அதை தான் பதிவிலும் சொல்லியுள்ளேன். அடிப்படையான ஒரு வழியை தடுப்பது பற்றி தான் இந்த பதிவு.
    //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!

  6. //# கவிதை வீதி # சௌந்தர் said… 3

    தப்பிக்க நல்லவழிதான்…
    தமிழ்மணம் 7//
    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், ஓட்டுக்கும் நன்றி நண்பா!

  7. //முனைவர்.இரா.குணசீலன் said… 4

    பயனுள்ள பதிவு நண்பா.
    நான் இதே தொழில்நுட்பத்தைத்தான் பயன்படுத்தியிருக்கிறேன்//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!

  8. //நாடோடி said… 5

    Ithellam velaikku aakkathu…. copy panum murai eppa ellarukumeasiya poochu…. THIRADANA PARTHU THIRUNTHA VIDAAL THIRUDDAI OLIKKA MUDIYATHU….//

    ஆம் நண்பா! நிறைய வழி இருக்கிறது. அதை தான் பதிவிலும் சொல்லியுள்ளேன். அடிப்படையான ஒரு வழியை தடுப்பது பற்றி தான் இந்த பதிவு.

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!

  9. //M.R said… 6

    அருமையான உபயோகமான ஒரு விஷயம் நண்பரே .

    பகிர்வுக்கு நன்றி நண்பரே
    //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே!

  10. //காந்தி பனங்கூர் said… 7

    இந்த பதிவை காபி பண்ணி வெளியிடலாமா?

    எப்பூடி?//

    தாராளமாக, நண்பா!

    ப்ளாக்கர் நண்பன் தளத்தை பொறுத்தவரை,

    Copyright Unreserved – யாம் பெற்ற கல்வி இவ்வையகம் பெருக..!

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!

  11. //Lakshmi said… 9

    நல்ல தகவலுக்கு நன்றி.
    //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி!

  12. //மாணவன் said… 11

    பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பா!//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!

  13. //DrPKandaswamyPhD said… 12

    இது அநியாயம், அக்கிரமம், காட்டுமிராண்டித்தனம், etc. etc. இதை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போகிறேன்.//

    🙂 🙂 🙂

    இந்த விசயத்தில் நான் உங்க கட்சி தான் சார்!

    //இந்தப் பதிவில் பதியப்படும் கருத்துக்கள் பொது மக்கள் மற்றும் சகபதிவர்கள் உபயோகத்துக்காக…தாராளமாக copy, paste செய்து கொள்ளலாம்.//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்!

  14. //கார்த்தி said… 14

    இந்த முறை எனது தளத்திற்கு வேலை செய்யுதில்லையே. என்ன செய்வது! I am googling lets see//

    //Hi Blog Nanba!
    The method which is mentioned in above is not working for my blog. So i tried googling and found the way to do it.
    both of the below methods are working fine
    Thanks a lot
    http://myblog-log.blogspot.com/2007/06/disable-copy-and-paste.html
    http://amitjainonline.blogspot.com/2009/04/disable-prevent-copy-on-blog-or-site.html//

    தகவலுக்கு நன்றி நண்பா!

    நான் இந்த முறையை சோதித்து பார்த்த பிறகுதான் பதிவிட்டேன். எனக்கு நன்றாக வேலை செய்தது.

    நீங்கள் குறிப்பிட்ட தளத்தில் ஜாவா ஸ்க்ரிப்ட் code உள்ளது. ஜாவா வேண்டாம் என்பதனால் தான் அதனை தவிர்த்தேன்.

  15. /மாய உலகம் said… 16

    நல்ல உபயோகமான தகவல் நண்பரே… ஆஹா.. க்ரோம் ஓஸ் – ல் ஹேக் செய்யப்படுமா…எச்சரிக்கை தகவலுக்கு நன்றி நண்பரே..!//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே!

  16. //ஜெகதீஷ் குமார் (jegadeesh kumar) said… 17

    அருமையான ஐடியா. நான் உடனே என் வலைத்தளத்தில் செய்து விட்டேன்.

    மிக்க நன்றி.//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!

  17. என்னதான் புதுசு புதுசா கோடிங் சேர்த்தாலும் இது முழுக்க முழுக்க ஜாவா ஸ்கிரிப்டை வைத்துதான் பிளாகே செயல் படுகிறது . அதை டெப்ரவரி டிஸேபில்டு செய்தால் ஈஸியா மொத்த பிளாகையே காப்பி செய்திடலாம் .

    ஆக திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழி(ளி)க்க முடியாது ..!! 🙂

  18. //விஜயன் said… 36

    அருமையான தகவல்.திருட்டிலிருந்து தப்பிக்க இது ஓரளவு உதவும் என்று நம்புகிறேன்…
    //

    நன்றி நண்பரே!

  19. //ஜெய்லானி said… 37

    என்னதான் புதுசு புதுசா கோடிங் சேர்த்தாலும் இது முழுக்க முழுக்க ஜாவா ஸ்கிரிப்டை வைத்துதான் பிளாகே செயல் படுகிறது . அதை டெப்ரவரி டிஸேபில்டு செய்தால் ஈஸியா மொத்த பிளாகையே காப்பி செய்திடலாம் .

    ஆக திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழி(ளி)க்க முடியாது ..!! 🙂
    //

    🙂 🙂 🙂

    ஆம் நண்பரே! திருடுவதற்கு பல வழிகள் இருக்கிறது. அதை தடுப்பதற்கான அடிப்படை மட்டுமே இது. வருகைக்கு நன்றி நண்பரே!

  20. தங்கள் தகவலை பயன்படுத்திக்கொண்டேன் நண்பரே – நன்றி.
    முழுமையாக தடுக்க வழியே இல்லையா…..?