பதிவர்களுக்கு பிளாக்கர் தந்த அதிர்ச்சி

இன்று ப்ளாக்கர் தளத்தை திறந்த பல பதிவர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். காரணம் கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் இருந்த தங்கள் ப்ளாக்கின் பக்க பார்வைகள் (Pageviews) திடீரென்று பூஜ்யத்திலிருந்து தொடங்கியது தான். காரணம் என்ன?

காரணத்தை பார்ப்பதற்கு முன் குட்டி விளம்பரம்:

Little Nemo in Slumberland என்னும் காமிக்ஸ் கதையை Winsor McCay என்பவர் உருவாக்கினார். அந்த கதை வெளிவந்து இந்த வருடத்தோடு 107 வருடங்கள் ஆகிறது. அதை முன்னிட்டு கூகுள் இன்று ஸ்பெஷல் டூடுல் வெளியிட்டுள்ளது. இதுபற்றிய மேலுள்ள வீடியோவை பாருங்கள்.


பதிவு தொடர்கிறது…..


காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. இது பிளாக்கர் தளத்தில் ஏற்பட்டுள்ள பிழையால் பக்க பார்வைகள் மாறிவிட்டது. ப்ளாக்கர் பொறியாளர்கள் சரிசெய்துக் கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.


எனக்கு சரியாகிவிட்டது. உங்களுக்கு சரியாகவில்லையென்றால் காத்திருங்கள், சரியாகிவிடும்.


கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது என் ப்ளாக்கின் பக்க பார்வைகள் 0 என்று காட்டியது. பிறகு மாறிவிடுகிறது. இதற்காக கவலைப்படவில்லை. இதுவரை  நம் ப்ளாக்கிற்கு கிடைத்த ஹிட்ஸ் காணாமல் போகும் போது வருத்தம் வரத்தான் செய்யும், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதற்காக நாம் வருத்தப்பட்டால் பிறகு எழுதுவதில் மந்தம் ஏற்படும். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். 

இதையும் படிங்க:  கூகிள் +1 பட்டன் - புதிய வேகம், புதிய வசதி

20 thoughts on “பதிவர்களுக்கு பிளாக்கர் தந்த அதிர்ச்சி”

  1. காலையிலேயே நம்ம நண்பர் ஒருவரும் என்னங்க இப்படி இருக்குன்னு புலம்பிட்டார்…

    இதனை இவனால் என்றாய்ந்து..

  2. //இதுவரை நம் ப்ளாக்கிற்கு கிடைத்த ஹிட்ஸ் காணாமல் போகும் போது வருத்தம் வரத்தான் செய்யும், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதற்காக நாம் வருத்தப்பட்டால் பிறகு எழுதுவதில் மந்தம் ஏற்படும். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். //

    Applause :)))

  3. எனக்கும் காளையில எழுந்ததும் ஒரே அதிர்ச்சித்தான் சார்!

    total page views 0 ஆக காட்டியது!
    ஆனால் இப்போது சரியாக காட்டுகிரது!

  4. கூகிள் செய்த வேலையில் காலையில் அதிர்ச்சி மையங்கொண்டு விட்டதென்னை.

    சரி நமக்கு ஒரு கண் போனால் பரவாயில்லை. என் எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும் என்ற எண்ணத்தில் ப்ளாக்கர் நண்பன் [ 🙁 ]தளத்தின் நிர்வாகியைத் தொடர்பு கொண்டால் அவர்கள் என் வலைப்பூவில் வெறும் 16 பார்வைகள் தான் இருப்பதாகக் காட்டுகின்றது என்றார்களே பாருங்கள்..

    எனக்கு மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    இப்போது அவர்களின் வலைத்தளம் சரியாகி விட்டதாம். என் வலைப்பூவினைப் போய் பார்க்கின்றேன் சாமீயோவ்.

    நண்பரே, உங்களின் சேவை அளப்பரியது.

    நன்றி

  5. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. இது பிளாக்கர் தளத்தில் ஏற்பட்டுள்ள பிழையால் பக்க பார்வைகள் மாறிவிட்டது. //

    ஹி ஹி ஹி.

  6. இணைய உலகின் சுவரசியமான வரலாறு,இணையம் ஏன் தோன்றியது ,அதன் உரிமையாளர் யார்,அது எப்படி செயல்படுகிறது பல கேள்விகளுக்கு பதில் தேடும் தொடர் பதிவு…படித்து பயன் பெறுங்கள்.திங்கள் தோறும் நம் தொழிற்களம் மினிதழிலில்…
    http://tk.makkalsanthai.com/2012/10/internethistory7.html

  7. எனக்கு சில மாதங்களுக்கு முன்னர் இப்படி நடந்தது பின்னர் அதே தினத்திலேயே சரியாகியும் விட்டது நண்பா
    பகிர்வுக்கு நன்றி

  8. கூகிள் அவ்வப்போது ஏதாவது அதிர்ச்சி தருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளது.சில நேரங்களில் ஒவ்வொரு பதிவுக்குமான பார்வைகள் இருக்கும்.மொத்த இன்றைய பார்வை மொத்த பார்வை சரியாக இருக்கும்,அவை சரியாகி விடும் ஆனால் இன்றைய நிகழ்வு எதிர்பாராதது.

  9. என்னைப் போனற இணைய பாலகர்களுக்கு தாங்கள் செய்யும் இந்த பணி மிக்க பயனுள்ளதாக இருக்கிறது. ஹிட்ஸ் பற்றியெல்லாம் யோசிக்கவே தேவை இல்லை நண்பா